first review completed

நெ.வை. செல்லையா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Reset to Stage 1)
Line 30: Line 30:
* தொண்டைமானாற்றுச் செல்வச் சந்நிதி வடிவேலர் பதிகம்<ref>[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தொண்டைமானாற்றுச் செல்வச் சந்நிதி வடிவேலர் பதிகம்]</ref>

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />

Revision as of 08:17, 16 December 2022

நெ.வை. செல்லையா (1878-1940) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசிரியர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

நெ.வை. செல்லையா யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் வைத்தியலிங்கம், சீனியம்மாள் இணையருக்கு 1878-ல் பிறந்தார். இளமையில் வண்ணார் பண்ணை பாடசாலையில் கல்வி பயின்றார். ந.ச. பொன்னம்பலம் பிள்ளையிடம் புராணங்கள், இலக்கியங்கள் இலக்கணங்களைக் கற்றார்.

ஆசிரியப்பணி

1925-ல் சிங்கப்பூர் சென்று ஈப்போ நகரில் திருவள்ளுவர் கலாசாலையின் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்குத் திரும்பி வந்து, கொழும்பு நகரில் கல்வி கற்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

நெ.வை. செல்லையா நூல்களை எழுதுவோருக்கும் நூல்களைப் பதிப்பிப்போருக்கும் உதவி செய்தார். யாழ்ப்பாண வரலாற்றினைத் ஆராய்ந்துகொண்டிருந்த முதலியார் செ. இராசநாயகம் அவர்களுக்கு உதவிகள் செய்து ஆராய்ச்சித்துறை சிறப்பெய்துமாறு தொண்டாற்றினார். இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் அக்காலத்து இலக்கிய இதழ்களிலும் நாளிதழ்களிலும் வெளிவந்தன. நூல்கள் பல எழுதினார்.

மறைவு

நெ.வை. செல்லையா 1940-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • அரிநாம தோத்திரம்
  • ஆத்மாநுபவ தீபிகை
  • ஆராய்ச்சிக் கட்டுரைகள்
  • இரமண மகரிஷி பஞ்சரத்தினம்
  • ஈப்போ தண்ணீர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை
  • ஒழுக்க மஞ்சரி
  • கதிரை நான்மணிமாலை
  • காந்தி இயன்மொழி வாழ்த்து
  • திருமால் அவதார நாமாவளி
  • நல்லைச் சண்முக மாலை[1]
  • பாலர் பாடல்
  • மதுவிலக்குப் பாட்டு
  • நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம்
  • வடிவேலர் திருவிருத்தம்
  • மதுமானிடக் கும்மி[2]
  • வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல்
  • பாமணிக்கோவை[3]
  • நாவலர் பதிகம்
  • வண்ணைத் திருமகள் பதிகம்
  • தொண்டைமானாற்றுச் செல்வச் சந்நிதி வடிவேலர் பதிகம்[4]

உசாத்துணை

ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு

அடிக்குறிப்புகள்

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.