first review completed

காவற்பெண்டு: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Moved template to bottom of article)
Line 25: Line 25:
* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்
* மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்


* [https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்] [[Category:Tamil Content]]
* [https://www.tamilvu.org/ta/library-libcontnt-273141 எட்டுத்தொகை, தமிழ் இணையக் கல்விக்கழகம்]  
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]

Revision as of 18:52, 18 November 2022

காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான புறநானூறுவில்  86-வது பாடலாக அமைந்துள்ளது.

ஆசிரியர் குறிப்பு

காவற்பெண்டு, சோழ மன்னன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் எனக் கருதப்படுகிறார்.

பாடல்

காவற்பெண்டு இயற்றிய பாடல் புறநானூறு நூலின் 86-வது பாடலாக இடம்பெற்றுள்ளது;

புறநானூறு 86

'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டுளனோ என வினவுதி, என்மகன்

யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

எளிய பொருள்;

சிறு இல்லத்தின் வலிமையான தூணைப் பற்றியபடி உன் மகன் எங்கேயென்று வினவுபவனே! என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற வயிறு இதோ இங்கு இருக்கிறது. (இது மறக்குடி மகனைப் பெற்றெடுத்த வயிறு) அவன் கட்டாயம் போர்களத்துக்குத் தானே வந்து நிற்பான். (நீ செல்).

உசாத்துணை

  • மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.