being created

மித்ரா அழகுவேல்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Reset to Stage 1)
Line 22: Line 22:


* [https://www.facebook.com/100005522294777/posts/pfbid04Ut5KZ6gow5pMLqK443ZfiKT5S7fyvUe2pqvHkV8Nau7nUAU6Rz5huKhckcXuTDYl/?app=fbl மின்னவிர் பொற்பூ குறித்து கவிஞர் மஞ்சுளா தேவி எழுதியது;]
* [https://www.facebook.com/100005522294777/posts/pfbid04Ut5KZ6gow5pMLqK443ZfiKT5S7fyvUe2pqvHkV8Nau7nUAU6Rz5huKhckcXuTDYl/?app=fbl மின்னவிர் பொற்பூ குறித்து கவிஞர் மஞ்சுளா தேவி எழுதியது;]
{{First review completed}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:59, 12 December 2022

மித்ரா அழகுவேல்.jpg

மித்ரா அழகுவேல் (பிறப்பு: 05.05.1993) தமிழ் எழுத்தாளர். திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் திரைக்கதை வசனம் எழுதி வருகிறார்.

இளமை/ கல்வி

மித்ரா அழகுவேல், 1993- ஆம் ஆண்டு மே 5- ஆம் நாள் தேனியில் அழகுவேல் - பாமா தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் படித்தார். இளங்கலை நிர்வாகவியல் பட்டப்படிப்பை நாமக்கல் கொமாரபாளையத்தில் உள்ள SSM கலை அறிவியல் கல்லூரியில் படித்தார்.

தனிவாழ்க்கை

மித்ரா அழகுவேலுக்கு 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. கணவர் மிதுன் ராமசாமி  திரைப்பட உதவி இயக்குனராகவும் நடிகராகவும் இயங்கி வருகிறார். மித்ரா அழகுவேல், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இலக்கிய செயல்பாடு

மித்ரா அழகுவேலுக்கு பள்ளிக்காலத்தில் தொடங்கிய வாசிப்பு பழக்கம் அவரை படிப்படியாக எழுத்தை நோக்கி நகர்த்தியது. இவர், முதன் முதலில் கவிதைகள் எழுதத்தொடங்கியது கல்லூரி இதழ்களில்தான். வேலை தேடி சென்னை வந்தபோது ஊடகங்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததும், இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கியதும்தான் தன் வாழ்வின் திருப்புமுனைத்  தருணங்களாகும் என மித்ரா அழகுவேல் குறிப்பிடுகிறார். இப்போது அச்சு இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து கதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

இலக்கிய இடம்

மித்ரா அழகுவேலுவின் "மின்னவிர் பொற்பூ’ கவிதைத் தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் கீழ்காணுமாறு குறிப்பிட்டுள்ளார்;

"மொழியின் பித்தேறிய நவீன மனதின் கவிதைகள் இவை.  மானுட உறவுகள் கொள்ளும் அன்பின் சமகால பண்புகளை இவை பேசுகின்றன. தனித் தீவாய் தன்னை உணரும் மானுடத் தன்னிலை அந்நியமாகி நிற்கும் தன் இருப்பின் உணர்தலை அதன் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன. காதலின் பொன் தருணங்களும் காதலின்மையின் தகிப்பான வெம்மையும் இதில் பகிரப்படுகின்றன. கைவிடப்படுதலின் வாதையும் தனித்தலைதலின் அநாதமை இருளில் பொங்கும் விசும்பலும் ஒலித்தாலும் விடியலின் கீற்றுகளுக்காக காத்திருத்தலும் அது குறித்த நம்பிக்கையின் சொற்களுமேகூட நிரம்பியிருக்கின்றன. இந்த மனநிலை ஓர் ஊசல் போல் இருளுக்கும் ஒளிக்கும் மாறி மாறி பயணிப்பதாய் இத்தொகுப்பில் தொனிக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் கவிகளின் நெஞ்சில் உருத் திரண்ட நெடுந் தமிழ் மரபின் வளமார்ந்த பச்சையத்தில் மித்ராவின் மின்னவிற் பொற்பூ ஒளிர்கிறது".

நூல்கள்

கவிதைத் தொகுப்பு

  • முற்றா இளம்புல் - 2020
  • மின்னவிர் பொற்பூ - 2022

சிறுகதைத் தொகுப்பு

  • கார்மலி - 2021

மூன்று நூல்களையும்  வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.