சோமசுந்தரப் புலவர்: Difference between revisions
(changed template text) |
(Reset to Stage 1) |
||
Line 56: | Line 56: | ||
* ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை | * ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை | ||
* சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன் | * சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன் | ||
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா | * [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா] | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967] | ||
* [https://www.thejaffna.com/eminence/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D அராலி இராமலிங்க முனிவர்] | * [https://www.thejaffna.com/eminence/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D அராலி இராமலிங்க முனிவர்] |
Revision as of 08:11, 16 December 2022
சோமசுந்தரப் புலவர் (மே 25, 1878 - ஜூலை 10, 1953) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். தங்கத் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். சிறுவர் பாடல்கள், சிற்றிலக்கியச் செய்யுள்கள், உரைநடை நூல்கள், செய்யுள்கள், நாடகம் என பல வகைமைகளில் எழுதினார். பனைவரலாறு பற்றிய தாலவிலாசம் முக்கியமான படைப்பாகும்.
பிறப்பு, கல்வி
யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலான கதிர்காமருக்கும் இலக்குமிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தார். க. வேலுப்பிள்ளை இவருடன் உடன்பிறந்தவர். நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களைக் கற்றவர். தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலம் கற்றார்.
தனி வாழ்க்கை
சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளையில் மகள் சின்னம்மையை 1906-ல் மணந்தார். இவர்களுக்கு இளமுருகனார், நடராசன், வேலாயுதபிள்ளை, மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள் பிறந்தானர். இளமை காலத்திலிருந்து நாற்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
கவிதைகள் புனைவதில் திறம் பெற்றவர். தனது இளமைப் பருவத்தில் அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார். சைவ சித்தந்தத்திலும், கந்தபுராணத்திலும் புலமையுடையவர். ஏறக்குறைய பதினையாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். சைவ சித்தாந்தக் கருத்துக்களையுடைய 'உயிரிளங்குமாரன்’ எனும் நாடகத்தை இயற்றினார். இலங்கை வளம் எனும் நூலையும் பல்லாயிரக்கணக்கான பாடல்களையும் இயற்றினார்.
பொருட்செறிவு கொண்ட ’தால விலாசம்’ எனும் நூல் பனையின் வரலாறும் பயனும் பற்றியது. நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் ஆனது. கத்தரி வெருளி, ஆடிப் பிறப்பு, ஆடு கதறியது போன்றவை சிறுவர்களுக்காகப் பாடியது. 1928 ஸ்ரீ பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் ஜீவிய சரித்திரச் சுருக்கம், செய்யுள் நடையில் எழுதப்பட்டது,
கதிர்காமம், நல்லூர், கந்தவனம் ஆகிய திருக்கோவில்களில் எழுந்துள்ள முருகக் கடவுளின் மீது சிற்றிலக்கியங்கள் பாடினார்.
மறைவு
சோமசுந்தரப் புலவர் ஜூலை 10, 1953-ல் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
நூல்கள் பட்டியல்
அந்தாதி
- தில்லை அந்தாதி
கலம்பகம்
- அட்டமுகிக் கலம்பகம்
வெண்பா
- கதிரைச் சிலேடை வெண்பா
பதிகம்
- கழையோடை வேற் பதிகம்
- அட்டகிரிப் பதிகம்
- கல்லுண்டாய் வைரவர் பதிகம்
- கதிரைமலை வேலவர் பதிகம்
நாடகம்
- உயிரிளங்குமரன்
பிற
- செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை
- சிறுவர் பாடல்கள்
- சூரியவழிபாடு
- மருதடி விநாயகர் பாமாலை
- கந்தவனநாதர் திருப்பள்ளியெழுச்சி
- கந்தபுராணக் கதைகளும் அவை உணர்த்தும் உண்மைநூற் கருத்தும்
- கந்தவனக் கடவை நான்மணிமாலை
- சாவித்திரி கதை ( உரைநடை நூல் )
- கந்தபுராண நுண்பொருள் விளக்கம் ( சைவாங்கில வித்தியாசாலை வெளியீடு )
- தந்தையார் பதிற்றுப்பத்து
- நல்லை முருகன் திருப்புகழ்
- அருணாசலந்துரை சரித்திரச் சுருக்கம்
- சுகாதாரக் கும்மி ( சைவபரிபாலன சபையார் பதிப்பு )
- சூரியவழிபாடு
- மருதடி விநாயகர் பாமாலை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
- அராலி இராமலிங்க முனிவர்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.