under review

இந்துமதி: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(changed template text)
Line 23: Line 23:
*[https://www.youtube.com/watch?v=Zbn5Bslfp9E இந்துமதி நேர் காணல்  - News7 TV]
*[https://www.youtube.com/watch?v=Zbn5Bslfp9E இந்துமதி நேர் காணல்  - News7 TV]


Finalised
{{Finalised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:07, 15 November 2022

To read the article in English: Indhumathi. ‎

இந்துமதி

இந்துமதி தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய கதைகளை பெரிய வார இதழ்களில் தொடராக எழுதியவர். பெண்களின் உலகைச் சித்தரிப்பவர் என புகழ்பெற்றவர். திரைப்படங்களுக்கும் எழுதியிருக்கிறார்

பிறப்பு, கல்வி

இந்துமதி பெற்றோருடன்

திருவண்ணாமலை மாவட்டம் மேல்நர்மா என்னும் ஊரைச்சேர்ந்த <அப்பா பெயர்?>அமிர்தவல்லிக்கும் பிறந்தவர். இந்துமதி அவரது பெற்றோர் இட்ட பெயர் அல்ல. அவரது கடைசித்தங்கை பெயர் இந்துமதி. அப்பெயரிலேயே இந்துமதி தனது படைப்புகளை எழுதினார்.

இலக்கியவாழ்க்கை

இந்துமதி Story of a Woman என்னும் திரைப்படத்தின் தாக்கத்தில் தனது பதினாறாம் வயதில் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார். தரையில் இறங்கும் விமானங்கள்,அந்தரத்தில் ஒரு ஊஞ்சல், அசோகவனம், நினைவே இல்லையா நித்யா,தொட்டுவிடும் தூரம், சக்தி 90, நெருப்பு மலர், தொடுவான மனிதர்கள் உள்ளிட்ட பல படைப்புகளை எழுதியுள்ளார். இரு சிறுகதைத் தொகுதிகளும், 100-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளும் எழுதியுள்ளார். வழக்கமான அவரது பாணியிலிருந்து மாறி யார் எனும் துப்பறியும் கதையையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் சிவசங்கரியுடன் இணைந்து இரண்டு பேர் எனும் தொடர்கதையை குமுதம் இதழில் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் தமிழ் நாவல்கள் விமரிசகன் சிபாரிசில் தரையில் இறங்கும் விமானங்கள் சிறந்த சமூக மிகு கற்பனைப் படைப்புகள் பட்டியலில் இடம்பெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page