டி. தருமராஜ்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 49: | Line 49: | ||
*[https://www.jeyamohan.in/162895/ அயோத்திதாசரியம், ஒரு கடிதம்] | *[https://www.jeyamohan.in/162895/ அயோத்திதாசரியம், ஒரு கடிதம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|10-Aug-2026, 17:26:44 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 03:43, 11 August 2026
டி. தருமராஜ் (T. Dharmaraj) (பிறப்பு: ஏப்ரல் 19, 1967) தமிழ் ஆய்வாளர், எழுத்தாளர். நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், குறியியல், மானுடவியல், அயோத்திதாசரியம் சார்ந்து இயங்குபவர். தொடர்ந்து பல்வேறு இதழ்களில் பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் ஆகிய துறை சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
டி. தருமராஜ் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நல்லம்மாள், தம்புராஜ் இணையருக்கு ஏப்ரல் 19, 1967-ல் பிறந்தார். பாளையங்கோட்டை தூய அந்தோணியார் ஆரம்பப் பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்றார். தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார். திருநெல்வேலியிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் 1990-ல் முதுகலை பட்டம் பெற்றார்.
1990-91 வரை புனித சேவியர் கல்லூரியில் உள்ள நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் ஆய்வாளராகப் பணியில் இருந்தார். 1992-98-ல் ஜே.ஆர்.எஃப் (Junior Research Fellowship) உதவியுடன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் கலாசாரத் (center for Linguistics and Culture) துறையில் தமிழ் நாட்டாரியல் குறித்து "Conceptual structures in Tamil folk tales" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
டி. தருமராஜ் டிசம்பர் 13, 1998-ல் அமலாவை மணந்தார். மனைவி அரசுப்பள்ளி ஆசிரியை. மகன் சலேத் சித்தார்த்தன் கனடாவில் பணியில் உள்ளார்.
ஆசிரியப்பணி
டி. தருமராஜ் பிப்ரவரி 1998 முதல் 2011 வரை புனித ஜோசஃப் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 2011 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையில் இணைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் இருந்தார். 2014-இல் அங்கேயே பேராசியராக ஆனார். நிகழ்த்துக்கலைப் பள்ளியின் (School of Performing Arts) புலத்தலைவராக செயல்பட்டார். 2015-16-ல் ஜெர்மனியிலுள்ள டியூபிங்கன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகவும், வருகைதரு பேராசிரியராகவும் இருந்தார். 2017-இல் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் CEMI (Centre for Indian Studies) வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.
2019-ல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் இணைந்தார். 2020-2024-ல் தேர்வு ஆணையராகப் பதவி வகித்தார். 2024 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத்தலைவர், பேராசிரியர், புலத்தலைவராக உள்ளார்.
இதழியல்
டி. தருமராஜ் 'அஸ்வமேதா' என்ற இலக்கிய இதழை திருநெல்வேலியிலிருந்து 1988 முதல் 1989 வரை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.
இலக்கிய வாழ்க்கை
டி. தருமராஜ் நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், குறியியல், மானுடவியல், அயோத்திதாசரியம் சார்ந்து இயங்கும் ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர். இவரின் முதல் சிறுகதை' ஒரு கருங்கல்லும் நாங்களும்' 1980-ல் அன்னம் இதழில் வெளிவந்தது. 1992 முதல் கட்டுரைகள் எழுதினார். 'Prologue of Tholkappiyam' என்ற முதல் ஆங்கிலக் கட்டுரை 'International Journal of communication' இதழில் வெளிவந்தது. அதே கட்டுரையை தமிழில் 'தொல்காப்பியம் எனும் பிரதி, பிரதி எனும் தொல்காப்பியம்' என்ற பெயரில் எழுதினார். தொடர்ந்து இனி, வல்லினம், காலச்சுவடு, புதுவிசை ஆகிய இதழ்களில் எழுதினார்.
டி. தருமராஜ் முதல் நூல் அவருடைய கட்டுரையுடன், சில கட்டுரையாளர்களின் கட்டுரைகளையும் சேர்த்துக் கொணர்ந்த 'கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும்' என்ற தொகுப்பு நூல் திருநெல்வேலி கல்லாட்டி பதிப்பகம் வழியாக 1999-ல் வெளியானது. 2003-ல் 'நான் பூர்வ பெளத்தன்' நூல் வெளியானது.
விவாதம்
டி. தருமராஜ் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் பல விவாதங்களை ஏற்படுத்தியது.
நூல்கள் பட்டியல்
- கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் (1999, தொகுப்பு நூல்)
- நான் பூர்வ பெளத்தன் (2003)
- அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை (சால்ட் பதிப்பகம்)
- டி. தருமராஜின் அயோத்திதாசரியம் (தொகுப்பாசிரியர் பா.ச. அரிபாபு)
- தமிழ் நாட்டுப்புறவியல் (2011) (சால்ட் பதிப்பகம்)
- நான் ஏன் தலித்தும் அல்ல? (சால்ட் பதிப்பகம்)
- இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? (சால்ட் பதிப்பகம்)
- உள்ளூர் வரலாறுகள்
- கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் (தொகுப்பாசிரியர்)
- கபாலி: திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்
- ஜல்லிக்கட்டு: கிளர்ச்சி எனும் சூழ்ச்சி
இணைப்புகள்
- டி. தருமராஜ் - வலைதளம்
- அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தருமராஜ் - உரை
- வெகுஜன அழகியல் - டி. தருமராஜ் உரை
- பொருநை இலக்கிய விழா - நாட்டார் இலக்கியம் | டி.தருமராஜ்
- "பழுமரம் உள்ளிய பறவை" | Porunai Nellai 9th Book Fair
- டி.தருமராஜின் "ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி" - நூல் அறிமுக விழா
- அயோத்திதாசரை எப்படிப் புரிந்துகொள்வது?- டி.தருமராஜ் பேட்டி - திஇந்துதமிழ்
- அயோத்திதாசரியம், ஒரு கடிதம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2026, 17:26:44 IST