under review

கிரிசாந்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 20: Line 20:


==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
கிரிசாந்தின் முதல் படைப்பு 'மழைத்தீ' என்னும் கவிதை 2012-ம் ஆண்டு தீராநதி இதழில் வெளிவந்தது. கிரிசாந் தொடர்ந்து தனது இணையப்பக்கத்திலும் மின்னிதழ்களிலும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் வடிவங்களில் எழுதி வருகிறார். [[ஜெயமோகன்|ஜெயமோகனைத்]] தன் முதன்மையான இலக்கிய ஆசிரியராகக் குறிப்பிடுகிறார். தூண்டி, அறிவிசை ஆகிய இதழ்களை நடத்திய தி. செல்வமனோகரன்  பழந்தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தி இவரது ஆரம்ப கால நவீன இலக்கிய வாசிப்பை ஊக்கூவித்தார். கவிஞரும் நாடகக் கலைஞரும் ஓவியருமான நிலாந்தனையும் தனது இளவயதில் அரசியல், இலக்கியப் பார்வைகளை கூர்மைப்படுத்திய ஆசிரியராகக் குறிப்பிடுகிறார்.  ஆதர்சக் கவிஞர்களாக சுகுமாரன், பிரமிள், மனுஷ்ய புத்திரன், தேவதேவன், பிரான்சிஸ் கிருபா, என். டி. ராஜ்குமார், ஆண்டாள், மாணிக்கவாசகர், திருவள்ளுவர், அனார், அஸ்வகோஷ், சேரன், சிவரமணி, சு. வில்வரத்தினம், நிலாந்தன், எஸ். போஸ், அன்னா அக்மதோவா ஆகியோரை குறிப்பிடுகிறார். நாவல் மற்றும் சிறுகதை வடிவங்களில் கு. அழகிரிசாமி, ஷோபா சக்தி, புதுமைப்பித்தன், ஜெயமோகன், தஸ்தவேஸ்கி, டோல்ஸ்டோய், யசுநாரி கவாபட்டா, சிங்கிஸ் ஐத்மத்தாவ், வைக்கம் முகமது பஷீர், அதீன் பந்த்யோபாத்யாய, காப்பிரியல் கார்சியா மார்க்குவேஸ் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாக குறிப்பிடுகிறார்.
கிரிசாந்தின் முதல் படைப்பு 'மழைத்தீ' என்னும் கவிதை 2012-ம் ஆண்டு தீராநதி இதழில் வெளிவந்தது. கிரிசாந் தொடர்ந்து தனது இணையப்பக்கத்திலும் மின்னிதழ்களிலும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் வடிவங்களில் எழுதி வருகிறார். இரண்டு கவிதை தொகுதிகளும் கல்விரல் என்னும் நாவலும் வெளிவந்துள்ளது.
 
== இலக்கிய இடம் ==


==நூல்கள்==
==நூல்கள்==

Revision as of 20:52, 2 July 2026

கிரிசாந்

கிரிசாந் (பிறப்பு: ஜனவரி 14, 1994) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

கிரிசாந் இலங்கை யாழ்பாணம் திருநெல்வேலியில் முத்துக்குமாரசாமி சிவசுப்பிரமணியம் - சி. பாக்கியலட்சுமி இணையருக்கு ஜனவரி 14, 1994-ல் பிறந்தார். தம்பி சி. பிரசாந். தங்கை சுகிர்தா ஹரிலோஜூனன். தாயார் முதுகுத் தண்டில் ஏற்பட்ட நோய் காரணமாக 2009-ம் ஆண்டு மறைந்தார். புகைப்பட கலைஞரான தம்பி சி.பிரசாந் புற்றுநோய் காரணமாக 2025-ல் மறைந்தார். தங்கை சுகிர்தா ஹரிலோஜூனன் வழக்கறிஞர்.

கிரிசாந் ஆரம்பக் கல்வியை யாழ். புனித சென் ஜோன்ஸ் பொஸ்கோ பள்ளியிலும் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கிலத்தில் டிப்ளமோ பெற்றார்.

தனிவாழ்க்கை

கிரிசாந் இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பக் கல்வி ஆங்கில ஆசிரியராக 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றுகிறார்.

கிரிசாந் பிரிந்தாவை மார்ச் 24, 2019-ல் திருமணம் செய்து கொண்டார். பிரிந்தா யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

அரசியல்

கிரிசாந் 2012 - 2013 ஆண்டுகளில் நண்பர்களுடன் இணைந்து 'யாழின் கரங்கள்' என்னும் சமூக சேவை அமைப்பை நடத்தினார். 2012 முதல் 2014 வரை நவீன இலக்கியம் சார்ந்த குழுவான யாழ். இலக்கியக் குவியம் என்னும் அமைப்பில் இணைந்து செயல்பட்டார். 2014 முதல் 2023 வரை 'விதை குழுமம்' என்னும் அமைப்பை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். விதை குழுமம் சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை, மாற்றுப் பாலின அரசியல், மரபுரிமை, வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் செயல்வாதம், போராட்டங்கள், அறிவியக்கம் போன்றவற்றை ஒருங்கிணைத்தது. மரபுரிமைகளை அறிவதற்கும் விளங்கிக் கொள்வதற்குமான ஒரு பயண செயல்வாதத்தை 'தொன்ம யாத்திரை' எனும் பெயரில் விதை குழுமத்தினூடாக நண்பர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தார்.

இதழியல்

புதிய சொல் எனும் கலை இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். புதிய சொல் 2016 - 2021 வரை பத்து இதழ்கள் வெளிவந்து நின்றுவிட்டது.

பிற பணிகள்

கிரிசாந் தனது தம்பி பிரசாந் மரணமடைந்த பின்பு அவரது ஒளிப்படங்களின் கண்காட்சியை 'சிறிதினும் சிறிது' என்ற பெயரில் நடத்தினார். பிரசாந்தின் ஒளிப்படங்களும் அவரது ஆக்கங்கள் மற்றும் தனித்த வாழ்வு பற்றிய நூலும் வெளியிடப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

கிரிசாந்தின் முதல் படைப்பு 'மழைத்தீ' என்னும் கவிதை 2012-ம் ஆண்டு தீராநதி இதழில் வெளிவந்தது. கிரிசாந் தொடர்ந்து தனது இணையப்பக்கத்திலும் மின்னிதழ்களிலும் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் வடிவங்களில் எழுதி வருகிறார். இரண்டு கவிதை தொகுதிகளும் கல்விரல் என்னும் நாவலும் வெளிவந்துள்ளது.

இலக்கிய இடம்

நூல்கள்

கவிதை தொகுப்புகள்
  • மயான காண்டம் (கூட்டுத் தொகுப்பு, ஆகாயம் பதிப்பகம், 2014)
  • வாழ்க்கைக்குத் திரும்புதல் (குமாரதேவன் வாசகர் வட்டம், 2024)
குறுநாவல்
  • கொடிறோஸ் (ஆக்காட்டி பதிப்பகம், 2025)
நாவல்
  • கல்விரல் (கருப்பு பிரதிகள், 2026)
தொகுப்பாசிரியர்
  • ஷோபாசக்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும் நேர்காணலும், தன்னறம் வெளியீடு, 2024) : தர்மு பிரசாத் & கிரிசாந்

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2026, 17:44:19 IST