under review

ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸ்: Difference between revisions

From Tamil Wiki
 
Line 6: Line 6:

==அமைப்புச் செயல்பாடுகள் ==
==அமைப்புச் செயல்பாடுகள் ==
ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸ் அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள 'ரைட்டர்ஸ் ஹூ ரைட்'( Writers Who Write'(WWW) என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.  
ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸ் அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள 'ரைட்டர்ஸ் ஹூ ரைட்' (Writers Who Write'(WWW) என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.
 
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸின் முதல் நூல் 'ஈட்டிங் பிக் ஃபீட் இன் த டார்க்'( Eating Pig Feet in the Dark) நனவோடை உத்தியில் எழுதப்பட்டுள்ளது. தெற்கு கரோலினாவில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் குல்லா கீச்சி (Gullah Geechee) கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய  பின்னணியில் வளர்ந்ததன் பிரதிபலிப்பாக இந்த நூல் உள்ளது.  

Latest revision as of 14:33, 12 March 2026

ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸ்

ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸ் (Geraldine Elizabeth Walker Jenkins) அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். ரைட்டர்ஸ் ஹு ரைட் (Writers Who Write) என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள தென் கரோலினா மாநிலம் வாட்டர்போரோவில் வசிக்கிறார். ஃபிராங்கிலின் III, ஃபெர்னாண்டோ அண்ட்ரே, ஃப்ரிட்ரிக் ஜேம்ஸ் ஜென்கின்ஸ் ஆகிய மூன்று மகன்களின் தாய். எழுத்தில் ஈடுபடாத காலங்களில் வண்ணமயமான போர்வைகள், சால்வைகள் பின்னுவதை விரும்பிச் செய்கிறார். அவர் தன்னை 'த க்வில்ட் பொயட்' (The Quilt Poet) என்று அழைத்துக் கொள்வதை விரும்புகிறார்.

அமைப்புச் செயல்பாடுகள்

ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸ் அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள 'ரைட்டர்ஸ் ஹூ ரைட்' (Writers Who Write'(WWW) என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

ஜெரால்டின் எலிசபெத் வாக்கர் ஜென்கின்ஸின் முதல் நூல் 'ஈட்டிங் பிக் ஃபீட் இன் த டார்க்'( Eating Pig Feet in the Dark) நனவோடை உத்தியில் எழுதப்பட்டுள்ளது. தெற்கு கரோலினாவில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் குல்லா கீச்சி (Gullah Geechee) கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய பின்னணியில் வளர்ந்ததன் பிரதிபலிப்பாக இந்த நூல் உள்ளது.

இவரது படைப்பு 'What's Under Your Skin?' என்ற தொகுப்பில் வெளிவந்துள்ளது.

ஜெரால்டின் மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கினார். வாழ்க்கை தன்னை எவ்வாறு நடத்துகிறது என்பதை வெளிப்படுத்த இதுவே ஒரே வழி என்று அவர் உணர்ந்தால் எழுதத்தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • Eating Pig Feet in the Dark (நனவோடை)
படைப்பு இடம்பெற்றிருக்கும் தொகுப்பு நூல்
  • What's Under Your Skin?

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Mar-2026, 08:59:17 IST