வண்ணதாசன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வண்ணதாசன் (சி. கல்யாணசுந்தரம்) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். == பிறப்பு, கல்வி == வண்ணதாசனின் இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். வண்ணதாசன் தி.க. சிவசங்கரன், இணையருக்கு திருநெல்வ...")
 
No edit summary
Line 41: Line 41:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* வண்ணதாசன் ஆவணப்படம்: செல்வேந்திரன்
* வண்ணதாசன் ஆவணப்படம்: செல்வேந்திரன்
[[Category:Being Created]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:24, 25 September 2022

வண்ணதாசன் (சி. கல்யாணசுந்தரம்) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

வண்ணதாசனின் இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். வண்ணதாசன் தி.க. சிவசங்கரன், இணையருக்கு திருநெல்வேலியில் பிறந்தார்.

தனி வாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

வண்ணதாசன் என்பது புனைப்பெயர். வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். வண்ணதாசன் 1962 முதல் தீபம் இதழில் எழுதத் துவங்கினார். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன

விருதுகள்

  • 2016 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது
  • வண்ணதாசனின் 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக இந்திய அரசின் 2016ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
  • ’ஒளியிலே தெரிவது’ சிறுகதைத்தொகுப்பிற்காக உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டிற்கான சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
  • 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.
  • கலைமாமணி விருது

ஆவணப்படம்

  • வண்ணதாசனின் ஆவணப்படம் எழுத்தாளர் செல்வேந்திரன் இயக்கத்தில், சன் கீர்த்தி ஒலிப்பதிவில், அருண் இசையமைப்பில் வெளிவந்தது.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்புகள்
  • புலரி
  • முன்பின்
  • ஆதி
  • அந்நியமற்ற நதி
  • மணல் உள்ள ஆறு
சிறுகதைத் தொகுப்பு
  • கலைக்க முடியாத ஒப்பனைகள்
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  • சமவெளி
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை
  • மனுஷா மனுஷா
  • கனிவு
  • நடுகை
  • உயரப் பறத்தல்
  • கிருஷ்ணன் வைத்த வீடு
  • ஒளியிலே தெரிவது
  • சில இறகுகள் சில பறவைகள்
  • ஒரு சிறு இசை
நாவல்
  • சின்னு முதல் சின்னு வரை
கட்டுரைகள்
  • அகம் புறம்
  • கடிதங்கள்
  • வண்ணதாசன் கடிதங்கள்

இணைப்புகள்

  • வண்ணதாசன் ஆவணப்படம்: செல்வேந்திரன்