under review

மோ. இசரயேல்: Difference between revisions

From Tamil Wiki
Line 38: Line 38:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மொழியியலாளர்]]
 
[[Category:பழங்குடி மொழியியலாளர்]]
[[Category:பழங்குடி மொழியியலாளர்]]
[[Category:தமிழ் ஆய்வறிஞர்]]
[[Category:தமிழ் ஆய்வறிஞர்]]
[[Category:ஒடிய மொழி]]
[[Category:ஒடிய மொழி]]
[[Category:மொழியியலாளர்]]
[[Category:மொழியியலாளர்]]

Revision as of 19:08, 20 December 2025

மோ. இசரயேல்

மோ. இசரயேல் (பிறப்பு: டிசம்பர் 24, 1932) தமிழ் ஆய்வறிஞர், மொழியியல் பேராசிரியர். ஒடிசாவின் பழங்குடி மக்களின் மொழியான குவி மொழி குறித்து ஆய்வு செய்து அகராதி தயாரித்தவர்.

பிறப்பு, கல்வி

மோ. இசரயேல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள செம்பொன்விளை என்னும் சிற்றூரில் டிசம்பர் 24, 1932-ல் பிறந்தார். தந்தை மோட்சக்கண். எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் முறைப்படி பயின்றார். அதன்பின் தமிழ் வித்துவான் தேர்வெழுதித் தமிழாசிரியராக ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார்.

முனைவர் பட்ட ஆய்வினைப் பேராசிரியர் மு. வரதராசன் நெறிப்படுத்தலில் 1965-ல் செய்தவர். இவரின் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு 'Treatment of Morphology in Tolkappiyam'. .இவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தாமஸ் பர்ரோவின் நெறியாள்கையில் தம் முதுமுனைவர் பட்ட ஆய்வினை 1973-74 காலகட்டத்தில் மேற்கொண்டார்.

தனி வாழ்க்கை

மோ. இசரயேல், கெலன் எமரால்டு

மோ. இசரயேல் 1962-ல் கெலன் எமரால்டைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் அருள் அரசு, அருள் அறம் இருவரும் பேராசிரியர்கள்.

ஆசிரியப்பணி

மோ. இசரயேல் நாகர்கோவில் இந்துக்கல்லூரி, ஸ்காட் கிறித்தவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 1968-ல் பணியில் சேர்ந்தார். அப்பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராக பணி உயர்வு பெற்றார். இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று மொழியியல் சார்ந்த ஆய்வறிவைப் பெற்றார்.

அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் மோ. இசரயேலின் நெறிப்படுத்தலில் 31 பேர் முனைவர் பட்ட ஆய்வு செய்து, பட்டம் பெற்றுள்ளனர்.

பொறுப்புகள்

  • திராவிட மொழியியல் கழகத்திலும் பொறுப்பில் இருந்தார்.
  • சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் ஆட்சிக்குழுவில் இருந்தார்.

ஆய்வுப்பணி

A Grammer of Kuvi Language

மோ. இசரயேல் ஆறு நூல்களையும், நூற்றி எழுபத்தி ஐந்து ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார். ஒடிசாவின் பழங்குடி மக்கள் பேசும் குவி(Kuvi) என்னும் மொழியை ஆராய்ச்சி செய்து அம்மொழிக்கு இலக்கணமும் அகராதியும் உருவாக்கினார். இது 1979-ல் நூல் வடிவம் பெற்றது. இந்த நூலுக்கு இசரயேல் எழுதிய முன்னுரையும், பேராசிரியர் டி.பர்ரோ எழுதியுள்ள ஆய்வுரையும் குறிப்பிடத்தக்கது என மு. இளங்கோவன் குறிப்பிட்டார்.

மோ. இசரயேல் பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப் பின் தொடர்ந்து மொழியாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிலும் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரிப் பாடத்திட்டக் குழுக்களிலும் இணைந்து பங்களிப்பாற்றினார். என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்காவிலும் திராவிட மொழிகள் குறித்த கட்டுரைகள் எழுதினார்.

நூல் பட்டியல்

  • இலக்கண ஆய்வு- பெயர்ச்சொல், சிந்தாமணி வெளியீடு, மதுரை, 1976
  • இலக்கண ஆய்வு- வினைச்சொல், சிந்தாமணி வெளியீடு, மதுரை, 1976
  • இடையும் உரியும், சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை, (1977)
  • A Grammar of THE KUVI LANGUAGE (1979)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 10:08:34 IST