being created

வீரபத்திரர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வீரபத்திரர்: தக்‌ஷனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். சிவனின் காப்பாளர்களுள் ஒருவர். == தோற்றம் == வீரபத்திரரி...")
 
No edit summary
Line 1: Line 1:
வீரபத்திரர்: தக்‌ஷனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். சிவனின் காப்பாளர்களுள் ஒருவர்.  

== தோற்றம் ==
== தோற்றம் ==
வீரபத்திரரின் தோற்றம் குறித்து இரு வேறு கதைகள் புராணங்களில் சொல்லப்படுகின்றன. ”தக்‌ஷனின் யாகத்திற்கு சென்ற பார்வதி தேவி தீயில் விழுந்தாள். பார்வதி தீயில் விழுந்த செய்தி கேட்ட சிவன் சினம் கொண்டார். தன் தலை மயிரில் ஒன்றை எடுத்து நிலத்தில் அரைந்தார். அதிலிருந்து வீரபத்திரரும், பத்ரகாளியும் தோன்றினர்” என்ற கதை தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில், வீரபத்திரர் சிவனின் வாயிலிருந்து தோன்றியதாக உள்ளது. தக்‌ஷனின் யாகத்தை அழிக்க வீரபத்திரரின் ஒவ்வொரு தலை மயிரிலிருந்தும் அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் ரவுமையர்கள் என்றழைக்கப்பட்டனர்.

== தக்‌ஷன் யாகம் அழிப்பு ==
தக்‌ஷன் பிரகஸ்பதி சவனம் என்ற யாகத்தை தொடங்கினார். தக்‌ஷன் அந்த யாகத்திற்கு தன் மகளான பார்வதியும், சிவனையும் அழைக்கவில்லை. தக்‌ஷன் அழைக்கததற்கு புராணங்களில் மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

== தக்‌ஷன் யாகம் அழிப்பு ==
===== தேவி பாகவத புராணம் =====
அத்ரியின் மகனான துர்வாசர் ஜம்பு நாட்டிற்கு சென்று மாயபிஜை மந்திரத்தை தியானம் செய்து ஜகதாம்பிகையை வேண்டினார். துர்வாசரின் தியானத்தில் மகிழ்ந்த ஜகதாம்பிகை அவருக்கு தான் சூடிய மலர்களைப் பரிசாக அளித்தாள். துர்வாசர் அதனை தலையில் சூடி தக்‌ஷனின் அவைக்குச் சென்றார். துர்வாசரின் தலையில் இருந்த மலர்களைக் கண்ட தக்‌ஷன் அதன் மேல் ஆசைக் கொண்டார். தக்‌ஷனின் ஆசையைக் கண்டதும் துர்வாசர் அதனை தக்‌ஷனிடம் கொடுத்தார். தக்‌ஷன் அந்த மலர்களை தன் அந்தரபுரத்தில் வைத்து தன் மனைவியுடன் கலவியில் ஈடுபட்டதால் அம்மலர்கள் தன் நறுமணத்தை இழந்தன. இதனை அறிந்த சிவனும் அவர் மனைவி பார்வதியும் கோபம் கொண்டனர். தக்‌ஷன் இதனை மனதில் வைத்து இருவரையும் யாகத்திற்கு அழைக்காமல் விட்டதாக தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தம் குறிப்பிடுகிறது.
{{Being created}}

Revision as of 23:19, 20 September 2022

வீரபத்திரர்: தக்‌ஷனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். சிவனின் காப்பாளர்களுள் ஒருவர்.

தோற்றம்

வீரபத்திரரின் தோற்றம் குறித்து இரு வேறு கதைகள் புராணங்களில் சொல்லப்படுகின்றன. ”தக்‌ஷனின் யாகத்திற்கு சென்ற பார்வதி தேவி தீயில் விழுந்தாள். பார்வதி தீயில் விழுந்த செய்தி கேட்ட சிவன் சினம் கொண்டார். தன் தலை மயிரில் ஒன்றை எடுத்து நிலத்தில் அரைந்தார். அதிலிருந்து வீரபத்திரரும், பத்ரகாளியும் தோன்றினர்” என்ற கதை தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில், வீரபத்திரர் சிவனின் வாயிலிருந்து தோன்றியதாக உள்ளது. தக்‌ஷனின் யாகத்தை அழிக்க வீரபத்திரரின் ஒவ்வொரு தலை மயிரிலிருந்தும் அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் ரவுமையர்கள் என்றழைக்கப்பட்டனர்.

தக்‌ஷன் யாகம் அழிப்பு

தக்‌ஷன் பிரகஸ்பதி சவனம் என்ற யாகத்தை தொடங்கினார். தக்‌ஷன் அந்த யாகத்திற்கு தன் மகளான பார்வதியும், சிவனையும் அழைக்கவில்லை. தக்‌ஷன் அழைக்கததற்கு புராணங்களில் மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

தேவி பாகவத புராணம்

அத்ரியின் மகனான துர்வாசர் ஜம்பு நாட்டிற்கு சென்று மாயபிஜை மந்திரத்தை தியானம் செய்து ஜகதாம்பிகையை வேண்டினார். துர்வாசரின் தியானத்தில் மகிழ்ந்த ஜகதாம்பிகை அவருக்கு தான் சூடிய மலர்களைப் பரிசாக அளித்தாள். துர்வாசர் அதனை தலையில் சூடி தக்‌ஷனின் அவைக்குச் சென்றார். துர்வாசரின் தலையில் இருந்த மலர்களைக் கண்ட தக்‌ஷன் அதன் மேல் ஆசைக் கொண்டார். தக்‌ஷனின் ஆசையைக் கண்டதும் துர்வாசர் அதனை தக்‌ஷனிடம் கொடுத்தார். தக்‌ஷன் அந்த மலர்களை தன் அந்தரபுரத்தில் வைத்து தன் மனைவியுடன் கலவியில் ஈடுபட்டதால் அம்மலர்கள் தன் நறுமணத்தை இழந்தன. இதனை அறிந்த சிவனும் அவர் மனைவி பார்வதியும் கோபம் கொண்டனர். தக்‌ஷன் இதனை மனதில் வைத்து இருவரையும் யாகத்திற்கு அழைக்காமல் விட்டதாக தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தம் குறிப்பிடுகிறது.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.