under review

சேவல் விருத்தம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Corrected typo errors;)
Line 5: Line 5:


==உள்ளடக்கம்==
==உள்ளடக்கம்==
சேவல் விருத்தம் நூலில், ‘உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல' என்ற பாடல் தொடங்கி, 'பூவிலியன் வாசவன்' வரை 11 பாடல்கள் இடம்பெற்றன. காப்புச் செய்யுளாக, ‘கொந்தார் குழல் வரி' என்ற பாடல் இடம்பெற்றது.  
சேவல் விருத்தம் நூலில், 'உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல' என்ற பாடல் தொடங்கி, 'பூவிலியன் வாசவன்' வரை 11 பாடல்கள் இடம்பெற்றன. காப்புச் செய்யுளாக, 'கொந்தார் குழல் வரி' என்ற பாடல் இடம்பெற்றது.  


======சேவலின் பெருமை======
======சேவலின் பெருமை======

Revision as of 17:38, 22 November 2025

சேவல் விருத்தம் (பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டு) அருணகிரிநாதரால் பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். முருகப்பெருமானின் கொடியான சேவல் இந்நூலில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

தெய்வங்களைத் தோத்திரம் செய்வது போலத் தெய்வங்களின் ஆயுதங்கள், வாகனங்கள், கொடிகள் போன்றவற்றையும் போற்றித் துதித்தல் மரபு. திருமாலின் ஐவகைப் படைக் கருவிகளையும் துதித்துப் பாடப்பட்ட நூல், 'பஞ்சாயுத ஸ்தோத்ரம்'. திருமாலின் வாகனமும் கொடியுமான கருடன் மீது பாடப்பட்ட நூல் கருட ஸ்தோத்ரம். இவ்வகையில் முருகனின் கொடியான சேவல் மீது அருணகிரிநாதரால் பாடப்பட்ட துதிப் பாடல் சேவல் விருத்தம்.

உள்ளடக்கம்

சேவல் விருத்தம் நூலில், 'உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல' என்ற பாடல் தொடங்கி, 'பூவிலியன் வாசவன்' வரை 11 பாடல்கள் இடம்பெற்றன. காப்புச் செய்யுளாக, 'கொந்தார் குழல் வரி' என்ற பாடல் இடம்பெற்றது.

சேவலின் பெருமை

முருகனின் கைக்கொடி சேவல். பிரணவ மந்திரத்தின் நாத தத்துவத்தை விளக்குவது. சேவல் விருத்தப் பாராயணம் அடியவர்களின் துன்பத்தை விளக்கும் என்று நம்பப்படுகிறது.

பாடல் நடை

உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல
உரியபர கதிதெரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றாடுமாம்

மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற
வரிசையின மகளவளுடன்

சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன் அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன்
சேவற் றிருத்துவசமே.

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jul-2024, 21:41:59 IST