வசந்த் ஷிண்டே: Difference between revisions
(; Added info on Finalised date) |
(Corrected typo errors;) |
||
| Line 3: | Line 3: | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
வசந்த் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜூன் 15, 1956-ல் பிறந்தார். பூனா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பூனா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப்பட்டம் முதல் வகுப்பில் பெற்றார். | வசந்த் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜூன் 15, 1956-ல் பிறந்தார். பூனா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பூனா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப்பட்டம் முதல் வகுப்பில் பெற்றார். "பழங்கால வரலாறு: தப்தி வடிநிலத்தில் ஆரம்பகால குடியேற்றங்கள்" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றார். 1985-ல் டென்மார்க்கின் கோபென்ஹேகனிலும், 1989-90-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்ட மேற்படிப்பு படித்தார். விக்ரமசீலா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். | ||
== ஆசிரியப்பணி == | == ஆசிரியப்பணி == | ||
| Line 40: | Line 40: | ||
* Harappan Necropolis at Farmana in the Ghaggar Basin | * Harappan Necropolis at Farmana in the Ghaggar Basin | ||
* Human Skeletal Assemblage from the Harappan Site of Farmana: A Bio-archaeological Analysis | * Human Skeletal Assemblage from the Harappan Site of Farmana: A Bio-archaeological Analysis | ||
* New Perspectives on the Harappan Culture in Light of Recent Excavations at Rakhigarhi: | * New Perspectives on the Harappan Culture in Light of Recent Excavations at Rakhigarhi: 2011-2017, Volume 1: Bioarchaeological Research on the Rakhigarhi Necropolis (editor, together with Dong Hoon Shin) (Archaeopress Publishing Ltd) (2023) | ||
* Excavations at Kaothe 1990 | * Excavations at Kaothe 1990 | ||
* A Report on the Excavations at Farmana (2007-08): (A Harappan site in the Ghaggar Basin) | * A Report on the Excavations at Farmana (2007-08): (A Harappan site in the Ghaggar Basin) | ||
| Line 51: | Line 51: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.theweek.in/theweek/cover/2024/12/21/archaeologist-vasant-shinde-interview.html 'All of us are descendants of Harappans': Archaeologist Vasant Shinde - theweek] | * [https://www.theweek.in/theweek/cover/2024/12/21/archaeologist-vasant-shinde-interview.html 'All of us are descendants of Harappans': Archaeologist Vasant Shinde - theweek] | ||
* [https://www.youtube.com/watch?v=6-74kt4yeY4 Just I read | * [https://www.youtube.com/watch?v=6-74kt4yeY4 Just I read -Wake the past for a regenerative future | Dr. Vasant Shinde | TEDxSRMKattankulathur] | ||
* [https://homegrown.co.in/homegrown-voices/how-the-ancient-settlement-of-rakhigarhi-disproved-the-dubious-aryan-invasion-theory How The Ancient Settlement Of Rakhigarhi Questions The 'Aryan Invasion' Theory - homegrown] | * [https://homegrown.co.in/homegrown-voices/how-the-ancient-settlement-of-rakhigarhi-disproved-the-dubious-aryan-invasion-theory How The Ancient Settlement Of Rakhigarhi Questions The 'Aryan Invasion' Theory - homegrown] | ||
* [https://www.youtube.com/watch?v=B6__B96pYsI Echoes of the Harappans: Inspiring Today's Urban Planning | Prof. Dr. Vasant Shinde | TEDxPVGCOET] | * [https://www.youtube.com/watch?v=B6__B96pYsI Echoes of the Harappans: Inspiring Today's Urban Planning | Prof. Dr. Vasant Shinde | TEDxPVGCOET] | ||
Latest revision as of 16:06, 22 November 2025
வசந்த் ஷிண்டே (பிறப்பு: ஜூன் 15, 1956) இந்திய தொல்லியல் ஆய்வாளர். 2011 முதல் 2016 வரை ராக்கிகர்ஹி-ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சிப் பணியின் ஆய்வாளர்களில் ஒருவர். முதன்முதலில் ஹரப்பா மக்களின் மண்டை ஓட்டு தொடர்பான ஆய்வுகளை மறுசீரமைப்பு செய்தவர். அகழ்வாராய்ச்சியில் மரபணு சோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
வசந்த் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜூன் 15, 1956-ல் பிறந்தார். பூனா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பூனா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப்பட்டம் முதல் வகுப்பில் பெற்றார். "பழங்கால வரலாறு: தப்தி வடிநிலத்தில் ஆரம்பகால குடியேற்றங்கள்" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றார். 1985-ல் டென்மார்க்கின் கோபென்ஹேகனிலும், 1989-90-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்ட மேற்படிப்பு படித்தார். விக்ரமசீலா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
ஆசிரியப்பணி
- 1982 முதல் புனேயிலுள்ள டெக்கான் கல்லூரியில் தொல்லியல் துறையில் முதுநிலை மாணவர்களுக்கு பேராசிரியராக பணியில் இருந்தார். 1995 முதல் ஆய்வியல் நிறைஞர் கல்வி பெற்ற மாணவர்களுக்கு பேராசியர்.
- 1987-1995 வரை திலக் மகாராஷ்டிரா வித்யாபீடத்தில் முதுகலை மாணவர்களுக்குப் பேராசிரியராக இருந்தார்.
- 1991 முதல் புது தில்லியிலுள்ள 'Institute of Archaeology' கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கு பேராசிரியராக பணியில் இருந்தார்.
- புனேயின் டெக்கான் கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். இவரின் ஆசிரியத்துவத்தில் பல மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். 2008 முதல் ஹங்கேரியில் உள்ள 'Eotvos Lorand University of Sciences' கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார்.
- ஜப்பான் நாட்டின் க்யோட்டோவில் 'International Research Centre for Japanese Studies'-ல் வருகை தரு பேராசிரியராக இருந்தார். ஜப்பான் நாட்டின் க்யோட்டோவில் 'Research Institute for Humanity and Nature' ல் வருகை தரு பேராசிரியராக இருந்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
- தெற்காசிய தொல்பொருள் சங்கத்தின் (Society of South Asian Archaeology) நிறுவனர்.
- பொது தொல்லியல் (Public Archaeology) துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பொது மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் குழுக்களை நிறுவியுள்ளார்.
பொறுப்புகள்
- பெங்களூரிலுள்ள National Institute of Advanced Studies, IIC Campus-ல் துணைப் பேராசிரியர்
- குஜராத்தின் காந்திநகரிலுள்ள National Maritime Heritage Complex-ன் தலைவர்
- ராகிகர்ஹ் (Rakhigarhi) ஆராய்ச்சி திட்டதின் தலைவர்
- புனேயிலுள்ள டெக்கான் கல்லூரியில் முதல்வர், பேராசிரியர்
ஆய்வு வாழ்க்கை
- 1980-90களில் மகாராஷ்டிரத்தின் தபதி (Tapti) வடிநிலத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்.
- 2006-11 காலகட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ராக்கிகர்ஹி-ல் (தற்போதைய ஹரியானா மாநிலம்) அகழ்வாய்வுகளில் ஈடுபட்டார்.
2019-ல் டேவிட் ரீச்-உடன் (David Reich) இணைந்து "An Ancient Harappan Genome Lacks Ancestry from Steppe Pastoralists or Iranian Farmers" என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். இதன் வழியாக சிந்து சமவெளி மக்கள் இந்தோ-ஆரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஆய்வு முடிவை முன்வைத்தார். சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் அனடோலியா, ஸ்டெப்பி பகுதியைச் சேர்ந்த மூதாதையர்களின் தொடர்ச்சி இல்லை என்று ஆய்ந்து கூறினார். இது ஏற்கனவே அறிஞர்களால் நம்பப்பட்ட இந்தோ-ஆரிய புலப்பெயர்வு கோட்பாட்டை (Indo-Aryan migration theory) கேள்விக்குள்ளாக்கியது.
நூல் பட்டியல்
- Early Farming Community in the Central Tapi Basin (Study of Settlement and Subsistence Patterns) 1998
- Chalcolithic South Asia: Aspects of Crafts and Technologies
- Cultural Heritage of South Asia and Beyond Recent Perspective
- Excavations at Gilund: The Artifacts and Other Studies
- Ancient Indian Knowledge System : Archaeological Perspective (2017)
- Bharatiya Knowledge Systems (2022)
- The Heritage Sites of Gujarat: A Gazetteer
- Gilund Project: Excavations in a Regional Context
- Harappan Necropolis at Farmana in the Ghaggar Basin
- Human Skeletal Assemblage from the Harappan Site of Farmana: A Bio-archaeological Analysis
- New Perspectives on the Harappan Culture in Light of Recent Excavations at Rakhigarhi: 2011-2017, Volume 1: Bioarchaeological Research on the Rakhigarhi Necropolis (editor, together with Dong Hoon Shin) (Archaeopress Publishing Ltd) (2023)
- Excavations at Kaothe 1990
- A Report on the Excavations at Farmana (2007-08): (A Harappan site in the Ghaggar Basin)
- Harappan Necropolis at Farmana in the Ghaggar Basin (2009-2010)
- 2011 Excavations at Farmana, District Rohtak, 2006-2008.
- Excavations at Girawad, District Rohtak, Haryana, India 2006.
உசாத்துணை
இணைப்புகள்
- 'All of us are descendants of Harappans': Archaeologist Vasant Shinde - theweek
- Just I read -Wake the past for a regenerative future | Dr. Vasant Shinde | TEDxSRMKattankulathur
- How The Ancient Settlement Of Rakhigarhi Questions The 'Aryan Invasion' Theory - homegrown
- Echoes of the Harappans: Inspiring Today's Urban Planning | Prof. Dr. Vasant Shinde | TEDxPVGCOET
- Archaeogenetic Research at Rakhigarhi and Its Implications on Indian History By Prof.Vasant Shinde
- SI 6 - The Harrapan Civilization - Issue of Identity - Prof.Vasant Shinde - Swadeshi Indology
- Rakhigarhi | Indus Civilization | Singh Production
- Indus Sarsawati Civilization practiced democracy | Archaeologist Prof. Vasant Shinde | Part 1
- Archaeologist & Prof. Vasant Shinde on how Rakhigarhi disproves Aryan Invasion theory
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Aug-2025, 12:51:38 IST