ஊடலுள் நெகிழ்தல்(பெருந்திணை): Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 18: | Line 18: | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946 பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946 பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{Second review completed}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 04:41, 29 July 2025
ஊடலுள் நெகிழ்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவியொருத்தி தலைவன் மீது கொண்ட ஊடலில் தளர்தலைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் இருள் செறிந்த மாலைக்காலத்தில் காதல் துயரம் நெருக்க, தொடியணிந்த தோளினை உடையாள் ஊடலில் குழைதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
நள்இருள் மாலை நடுங்கு அஞர் நலிய
ஒள்வளைத் தோளி ஊடலுள் நெகிழந்தன்று
(16.15)
வெண்பா
தெரிவின்றி ஊடத் தெரிந்து நம் கேள்வர்
பிரிவின்றி நல்கினும் பேணாய் - திரிவின்றித்
துஞசோம் என மொழிதி துங்குஇருள் மால் மாலை
நெஞ்சே உடையை நிறை (320)
பொருள்: நெஞ்சே! தலைவனது தவறு பற்றி ஆராயாது நாம் ஊடினோம் ; இருப்பினும் அவன் விளக்கம் தந்து நம்மை நெருங்கினும் நீ விரும்பவில்லை ; அப்படி விரும்பாத நீயே இரவிலே நாங்கள் உறங்கமாட்டோம் என்று மாறுபடச் சொல்கிறாயே.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.