under review

கண்டு கண் சிவத்தல்(பெருந்திணை): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 20: Line 20:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|26-Jul-2025, 12:06:49 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 27 July 2025

கண்டு கண் சிவத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி தலைவனைக் கண்டு சினத்தால் கண் சிவத்தலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பெரிய மலை போன்ற மார்பினை உடையவனது மாலையைக் கண்டு சினத்துடன் தலைவியின் கண் சிவத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

உறுவரை மார்பன் ஒள்இணர் நறும்தார்
கறுவொடு மயங்கிக் கண் சிவந்தன்று(கொளு 16.11)

வெண்பா

கூடிய கொழுநன் குறுகக் கொடிமார்பின்
ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து - வாடிய
தார்க் குவளை கண்டு தரியா இவள் முகத்த
கார் குவளை காலும் கனல் (316)

பொருள்: தலைவன் தலைவியை அணுகினான்; அவன் மாலையில் உள்ள குவளைப் பூ, கொடிபோன்ற பெண்ணைத் தழுவியதால் அவள் மார்பில் பூசின சந்தனத்துடன் காணப்பட்டதால் தலைவியின் (கண்களாகிய) குவளை பொறுக்க இயலாமல் சினத்தைக் காட்டியது.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2025, 12:06:49 IST