பேராண் முல்லை: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 19: | Line 19: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|24-Jul-2025, 21:25:04 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 25 July 2025
பேராண் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன், வேளார், வணிகர் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. மன்னன் போர்க்களத்தில் காட்டிய வீரத்தையும், வெற்றியையும் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வீரம் மிக்க அரசன், மறவர்கள் விரும்பும்படி போர்க்களத்தில் வென்ற சிறப்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
உளம் புகல மறவேந்தன்
களம் கொண்ட சிறப்பு உரைத்தன்று(கொளு 8.26)
வெண்பா
ஏந்து வாள் தானை இரிய உறை கழித்துப்
போந்து வாள் மின்னும் பொரு சமத்து - வேந்தர்
இரும் களிற்று யானை இனம் இரிந்துஓடக்
கருங்கழலான் கொண்டான் களம் (180)
பொருள்: பகைவருடைய போர்க்களத்தை அடைந்து தன் வாளால் பகைவரின் யானைப்படை ஓடும் வண்ணம் போரிட்டுப் போர்க்களத்தைத் தனக்கு உரிமையாகக் கொண்டு வென்றான்.
உசாத்துணை
வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jul-2025, 21:25:04 IST