பல்லவிகுமார்: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
No edit summary
Jayashree (talk | contribs)
No edit summary
Line 76: Line 76:
* [https://www.facebook.com/pallavi.kumar.5682 பல்லவிகுமார் ஃபேஸ்புக் பக்கம்]  
* [https://www.facebook.com/pallavi.kumar.5682 பல்லவிகுமார் ஃபேஸ்புக் பக்கம்]  
* [https://www.facebook.com/tamilpallavivdm தமிழ்ப்பல்லவி ஃபேஸ்புக் பக்கம்]  
* [https://www.facebook.com/tamilpallavivdm தமிழ்ப்பல்லவி ஃபேஸ்புக் பக்கம்]  
* [https://www.commonfolks.in/books/d/tharkaala-siraar-ezhuthalargal தற்காலச் சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி.]  
* [https://www.commonfolks.in/books/d/tharkaala-siraar-ezhuthalargal தற்காலச் சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி.]
{{Ready for review}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:34, 6 July 2025

முனைவர் பல்லவிகுமார்

பல்லவிகுமார் (பல்லவி குமார்; ச.குமார்; முனைவர் பல்லவிகுமார்) (பிறப்பு: ?) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய நூல்களையும், சிறார் நூல்களையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

ச. குமார் என்னும் இயற்பெயரை உடைய பல்லவிகுமார், சீர்காழியில், பி. சம்பந்தம் - சுசீலா இணையருக்குப் பிறந்தார். சீர்காழியில் உள்ள எஸ்,எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றார். கல்வியியலில் பட்டம் (பி.எட்.) பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் குறித்த ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். (பல்லவிகுமார் பிறந்த ஆண்டினை அறிய இயலவில்லை)

தனி வாழ்க்கை

பல்லவிகுமார், குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர்.

பல்லவிகுமார் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

பல்லவிகுமார், ஹைக்கூக் கவிதைகளையும், ஹைபுன் கவிதைகளையும் இதழ்களில் எழுதினார். அவை குறித்து தினமணி போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், சிறார் நூல்களையும் எழுதினார்.

பல்லவிகுமார், 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

இருசம்மா நூல் வெளியீடு

அமைப்புச் செயல்பாடுகள்

பல்லவிகுமார், ‘தமிழ்ப் பல்லவி இலக்கிய அமைப்பு’ என்பதைத் தோற்றுவித்தார். அதன் மூலம் பல இலக்கிய நிகழ்வுகளையும், நூல் விமர்சனக் கூட்டங்களையும் நடத்தினார். சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் பரிசளித்து வருகிறார்.

ஊடகம்

பல்லவிகுமார் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள் சிலவற்றில் பங்களித்தார்.

தமிழ்ப்பல்லவி இதழ்

இதழியல்

பல்லவிகுமார் ’தமிழ்ப் பல்லவி’ என்ற காலாண்டு இலக்கிய இதழை நடத்தினார். ‘நல்லி திசையெட்டும்’ மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார்.

பதிப்பு

பல்லவிகுமார் ’தமிழ்ப் பல்லவி’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் மூலம் சில நூல்களை வெளியிட்டார்.

பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுடன் பல்லவிகுமார்

விருதுகள்

  • ’உள்ளம் உயர்த்தும் நீதிக்கதைகள்’ சிறார் நூலுக்கு, 2002-ம் ஆண்டின் சிறந்த நூலுக்கான பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு
  • நெய்வேலி NLC நிறுவனம், நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது
  • ’இருசம்மா’ சிறுகதை நூலுக்கு பெரம்பலூர் இலக்கிய வட்டம் நடத்திய சிறுகதை நூல் போட்டியில் ’செகாவ் நினைவுப் பரிசு’
  • ’இருசம்மா’ நூலை மதுரை நட்புத் தமிழ் வட்டம், 2024-ல் வெளியான சிறந்த சிறுகதை நூலாகத் தேர்வு செய்தது

மதிப்பீடு

பல்லவிகுமார், ஹைக்கூக் கவிதைகளையும், பொது வாசிப்புக்குரிய கவிதைகளையும் எழுதும் கவிஞர். சிறார் நூல்கள் சிலவற்றையும், பொது வாசிப்புக்குரிய சிறுகதை நூல்களையும் எழுதினார். பல்லவிகுமார் எழுதிய ‘ஆளுமை வளர்க்கும் நாட்டுப்புறச் சிறார் விளையாட்டுக்கள்’ குறிப்பிடத்தகுந்த நூலாக அறியப்படுகிறது.

பல்லவிகுமார், சிறார் படைப்புகள், ஹைகூ, கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழியாக்கம் என இலக்கியப் பங்களிப்புகளைச் செய்தவராகவும், விருத்தாசலம் வாழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

சிறார் நூல்கள்
  • உள்ளம் உயர்த்தும் நீதிக்கதைகள்
  • உண்மையின் பரிசு
  • குழந்தைகள் தினம்
  • பாட்டியம்மா சொன்ன கதை
கவிதை நூல்கள்
  • உளியின் யுத்தம்
கட்டுரை நூல்கள்
  • சாரண சாரணியர் அணிமுறை மேலாண்மை
  • ஆளுமை வளர்க்கும் நாட்டுப்புறச் சிறார் விளையாட்டுகள்
சிறுகதை நூல்கள்
  • ஊடு இழை
  • இருசம்மா
மொழிபெயர்ப்பு
  • கொரிய நாட்டுப்புறக் கதைகள்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.