being created

கொத்தமங்கலம் சீனு: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added; Image Added.)
(Para Added, Image Added)
Line 1: Line 1:
[[File:Kothamangalam seenu.jpg|thumb|கொத்தமங்கலம் சீனு]]

[[File:Kothamangalam Cheenu img.jpg|thumb|கொத்தமங்கலம் சீனு]]
கொத்தமங்கலம் சீனு (கொத்தமங்கலம் சீனிவாசன்:1910 - 2001) இசை, நாடகம், திரைப்படம் என மூன்று துறைகளிலும் செயல்பட்டவர். திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். பின் மீண்டும் நாடகம் மற்றும் இசைத்துறைக்குத் திரும்பி இறுதிவரை செயல்பட்டார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 6: Line 7:
சீனிவாசன் வற்றாயிருப்பில் படித்து வந்தபோது தந்தை காலமானார். கல்வி தடைப்பட்டது. பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாவது ஃபாரம் படித்தார். ஆனால், குடும்பச் சூழலால் அதனைத் தொடர இயலவில்லை.

== நாடக வாழ்க்கை ==
உறவினர் ஒருவர் மூலம் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த ‘பாய்ஸ் கம்பெனி’யில் (மதுரை தத்வ மீனலோசனி வித்வ பால சபா) சேர்ந்தார் சீனிவாசன். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், பின் ‘ஞான சௌந்தரி’, ‘சத்தியவான் சாவித்திரி’, போன்ற நாடகங்களில் ‘ஸ்திரீ பார்ட்’ ஆக நடித்தார். தொடர்ந்து  ‘வள்ளி திருமணம்’, ‘பவளக் கொடி’, ‘அரிச்சந்திர மயான காண்டம்’ போன்ற நாடகங்களில் ‘ராஜபார்ட்’ வேடங்களில் நடித்தார்.

== இசை வாழ்க்கை ==
கொத்தமங்கலம் சுப்புவின் தொடர்பால் செட்டிநாட்டுப் பகுதியில் நடந்த நாடகங்களில் நடித்தார் சீனிவாசன். சுப்பு வசித்த கொத்தமங்கலத்திலேயே தானும் தன் குடும்பத்துடன் தங்கினார். சீனுவிற்கு நல்ல குரல் வளம் இருந்ததால் அவரது பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், நாடகம் இல்லாத நாட்களில் மேடைக் கச்சேரிகள் செய்து வந்தார். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இசை கற்பித்தார்.
நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தார் சீனு. அங்கு சரஸ்வதி பாயின் கதாகாலேஷபம் நடைபெற இருந்தது. ஆனால், பின்பாட்டு பாடுவதற்கான நபர் வராததால், விழா அமைப்பாளர்கள் கொத்தமங்கலம் சீனுவைப் பின்பாட்டுப் பாடுமாறு கேட்டுக் கொண்டனர். சரஸ்வதி பாய் சிறந்த வித்வம்சி  என்பதால் சீனு ஒப்புக் கொண்டார். சரஸ்வதி பாய் கதை சொல்ல, சீனு பின்பாட்டுப் பாடினார். சீனுவின் குரலால் கவரப்பட்ட சரஸ்வதி பாய், தனது கதையைப் பெருமளவு குறைத்து அதைப் பாடல்களாகப் பாடும் வாய்ப்பைச் சீனுவுக்கு வழங்கினார்.
== முதல் இசைத் தட்டு ==
ஏவி.மெய்யப்பச் செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர்ஸ் கிராமபோன் கம்பெனி மூலம் இசைத்தட்டு ஒன்றை வெளியிட விரும்பினார். அதற்காக அவர் சரஸ்வதி பாயை அணுகினார். சரஸ்வதி பாய், சீனுவைப் பரிந்துரைத்தார்.  
சீனுவைச் சென்னைக்கு வரவழைத்தார் ஏவி.எம். சீனுவைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவரது திறமையை உடன் உணர்ந்து கொண்டவர், சீனுவைப் பாடச் சொல்லி, ஓடியன் இசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டார். 1932-ல் சீனுவின் 22-வது வயதில் அந்த இசைத் தட்டு வெளியானது. அது முதல் கொத்தமங்கலம் சீனு நாடறிந்தவரானார். தொடர்ந்து கொத்தமங்கலம் சீனு பாடி பல இசைத்தட்டுகள் வெளிவந்தன.
== திருமண வாழ்க்கை ==
இசைக் கலைஞர் திண்ணியம் வெங்கட்ராம ஐயரின் மகளான ஆனந்த வள்ளியுடன் சீனுவுக்குத் திருமணம் நிகழ்ந்தது. அவர்களுக்கு ஐந்து மகன்கள், நான்கு மகள்கள் என ஒன்பது குழந்தைகள்.
[[File:02-saranfadara old movie cheenu.jpg|thumb|சாரங்கதரா - 1934]]
== திரைப்பட வாழ்க்கை ==
லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 1934-ல் ‘சாரங்கதரா’ என்ற திரைப்படத்தைத் தயாரிக்க முன் வந்தது. எஸ்.ஜி.கிட்டப்பா அதனை முன்னரே நாடகமாக நடத்தி வெற்றி பெற்றிருந்தார். கிட்டப்பாவைப் போலவே பாடல், இசை, நடிப்பு என்று பன்முக ஆற்றல் பெற்றிருந்த சீனு, அப்படத்தின் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். படம் 1935-ல் வெளியாகி வெற்றி பெற்றது. தொடர்ந்து பட்டினத்தார் (1935), மீராபாய் (1936), விப்ரநாராயணா (1937), சாந்த சக்குபாய் (1939), திருமங்கை ஆழ்வார் (1940) எனப் பல படங்கள் வெளியாகின.
[[File:Cheenu movie.jpg|thumb|மணிமேகலை திரைப்படம் - 1940]]
1940-ல், வெளியான ‘மணிமேகலை படத்தில் கே.பி.சுந்தராம்பாள் மணிமேகலையாக நடிக்க, சீனு உதயகுமாரனாக நடித்திருந்தார். அப்படம் பாடல்களுக்காகப் பெரிதும் பேசப்பட்டது. 1941-ல் இயக்குநர் கே. சுப்ரமண்யத்தின் ‘கச்ச தேவயானி’ வெளியானது. அதில் கதாநாயகியாக நடித்த  டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் முதல் ‘கனவுக்கன்னி’ என்று பெயர் பெற்றார். உடன் இணைந்து நாயகனாக நடித்தவர் கொத்தமங்கலம் சீனு.
[[File:Seenu films.jpg|thumb|கொத்தமங்கலம் சீனு திரைப்படங்கள்]]
தொடர்ந்து கிருஷ்ணப் பிடாரன் (1942), பக்த நாரதர் (1942), சோகாமேளர் (1942), தாசி அபரஞ்சி (1944), சகடயோகம் (1946), துளசி பிருந்தா (1946) எனப் பல  படங்கள் தொடர்ந்து வெளியாகின. இவை அனைத்துமே புராண மற்றும் பக்திப் படங்கள். 1947-ல் வெளியான ’துளசி ஜலந்தர்’ திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவுடன் இணைந்து பி. யு. சின்னப்பா நடித்தார்.
பி.யு. சின்னப்பா, ஜி.ராமநாதன், அவரது சகோதரர் சுந்தர பாகவதர், பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி உள்ளிட்ட பலர் கொத்தமங்கலம் சீனுவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

Revision as of 23:23, 7 September 2022

கொத்தமங்கலம் சீனு
கொத்தமங்கலம் சீனு

கொத்தமங்கலம் சீனு (கொத்தமங்கலம் சீனிவாசன்:1910 - 2001) இசை, நாடகம், திரைப்படம் என மூன்று துறைகளிலும் செயல்பட்டவர். திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். பின் மீண்டும் நாடகம் மற்றும் இசைத்துறைக்குத் திரும்பி இறுதிவரை செயல்பட்டார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கொத்தமங்கலம் சீனு என்று அழைக்கப்பட்ட கொத்தமங்கலம் சீனிவாசன், மதுரையை அடுத்துள்ள வற்றாயிருப்பில், சுப்ரமண்ய ஐயர்-நாராயணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை முறையாக இசை கற்றவர். மகனையும் சுற்றுப்புறங்களில் நடக்கும் இசை, நாடகக் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார். அதன் மூலம் சீனிவாசனுக்கு இசையின் மீது ஆர்வம் வந்தது. வற்றாயிருப்பு சாமா ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று தேர்ச்சி பெற்றார்.

சீனிவாசன் வற்றாயிருப்பில் படித்து வந்தபோது தந்தை காலமானார். கல்வி தடைப்பட்டது. பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாவது ஃபாரம் படித்தார். ஆனால், குடும்பச் சூழலால் அதனைத் தொடர இயலவில்லை.

நாடக வாழ்க்கை

உறவினர் ஒருவர் மூலம் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த ‘பாய்ஸ் கம்பெனி’யில் (மதுரை தத்வ மீனலோசனி வித்வ பால சபா) சேர்ந்தார் சீனிவாசன். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், பின் ‘ஞான சௌந்தரி’, ‘சத்தியவான் சாவித்திரி’, போன்ற நாடகங்களில் ‘ஸ்திரீ பார்ட்’ ஆக நடித்தார். தொடர்ந்து  ‘வள்ளி திருமணம்’, ‘பவளக் கொடி’, ‘அரிச்சந்திர மயான காண்டம்’ போன்ற நாடகங்களில் ‘ராஜபார்ட்’ வேடங்களில் நடித்தார்.

இசை வாழ்க்கை

கொத்தமங்கலம் சுப்புவின் தொடர்பால் செட்டிநாட்டுப் பகுதியில் நடந்த நாடகங்களில் நடித்தார் சீனிவாசன். சுப்பு வசித்த கொத்தமங்கலத்திலேயே தானும் தன் குடும்பத்துடன் தங்கினார். சீனுவிற்கு நல்ல குரல் வளம் இருந்ததால் அவரது பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், நாடகம் இல்லாத நாட்களில் மேடைக் கச்சேரிகள் செய்து வந்தார். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இசை கற்பித்தார்.

நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தார் சீனு. அங்கு சரஸ்வதி பாயின் கதாகாலேஷபம் நடைபெற இருந்தது. ஆனால், பின்பாட்டு பாடுவதற்கான நபர் வராததால், விழா அமைப்பாளர்கள் கொத்தமங்கலம் சீனுவைப் பின்பாட்டுப் பாடுமாறு கேட்டுக் கொண்டனர். சரஸ்வதி பாய் சிறந்த வித்வம்சி  என்பதால் சீனு ஒப்புக் கொண்டார். சரஸ்வதி பாய் கதை சொல்ல, சீனு பின்பாட்டுப் பாடினார். சீனுவின் குரலால் கவரப்பட்ட சரஸ்வதி பாய், தனது கதையைப் பெருமளவு குறைத்து அதைப் பாடல்களாகப் பாடும் வாய்ப்பைச் சீனுவுக்கு வழங்கினார்.

முதல் இசைத் தட்டு

ஏவி.மெய்யப்பச் செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர்ஸ் கிராமபோன் கம்பெனி மூலம் இசைத்தட்டு ஒன்றை வெளியிட விரும்பினார். அதற்காக அவர் சரஸ்வதி பாயை அணுகினார். சரஸ்வதி பாய், சீனுவைப் பரிந்துரைத்தார்.  

சீனுவைச் சென்னைக்கு வரவழைத்தார் ஏவி.எம். சீனுவைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவரது திறமையை உடன் உணர்ந்து கொண்டவர், சீனுவைப் பாடச் சொல்லி, ஓடியன் இசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டார். 1932-ல் சீனுவின் 22-வது வயதில் அந்த இசைத் தட்டு வெளியானது. அது முதல் கொத்தமங்கலம் சீனு நாடறிந்தவரானார். தொடர்ந்து கொத்தமங்கலம் சீனு பாடி பல இசைத்தட்டுகள் வெளிவந்தன.

திருமண வாழ்க்கை

இசைக் கலைஞர் திண்ணியம் வெங்கட்ராம ஐயரின் மகளான ஆனந்த வள்ளியுடன் சீனுவுக்குத் திருமணம் நிகழ்ந்தது. அவர்களுக்கு ஐந்து மகன்கள், நான்கு மகள்கள் என ஒன்பது குழந்தைகள்.

சாரங்கதரா - 1934

திரைப்பட வாழ்க்கை

லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 1934-ல் ‘சாரங்கதரா’ என்ற திரைப்படத்தைத் தயாரிக்க முன் வந்தது. எஸ்.ஜி.கிட்டப்பா அதனை முன்னரே நாடகமாக நடத்தி வெற்றி பெற்றிருந்தார். கிட்டப்பாவைப் போலவே பாடல், இசை, நடிப்பு என்று பன்முக ஆற்றல் பெற்றிருந்த சீனு, அப்படத்தின் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். படம் 1935-ல் வெளியாகி வெற்றி பெற்றது. தொடர்ந்து பட்டினத்தார் (1935), மீராபாய் (1936), விப்ரநாராயணா (1937), சாந்த சக்குபாய் (1939), திருமங்கை ஆழ்வார் (1940) எனப் பல படங்கள் வெளியாகின.

மணிமேகலை திரைப்படம் - 1940

1940-ல், வெளியான ‘மணிமேகலை படத்தில் கே.பி.சுந்தராம்பாள் மணிமேகலையாக நடிக்க, சீனு உதயகுமாரனாக நடித்திருந்தார். அப்படம் பாடல்களுக்காகப் பெரிதும் பேசப்பட்டது. 1941-ல் இயக்குநர் கே. சுப்ரமண்யத்தின் ‘கச்ச தேவயானி’ வெளியானது. அதில் கதாநாயகியாக நடித்த  டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் முதல் ‘கனவுக்கன்னி’ என்று பெயர் பெற்றார். உடன் இணைந்து நாயகனாக நடித்தவர் கொத்தமங்கலம் சீனு.

கொத்தமங்கலம் சீனு திரைப்படங்கள்

தொடர்ந்து கிருஷ்ணப் பிடாரன் (1942), பக்த நாரதர் (1942), சோகாமேளர் (1942), தாசி அபரஞ்சி (1944), சகடயோகம் (1946), துளசி பிருந்தா (1946) எனப் பல  படங்கள் தொடர்ந்து வெளியாகின. இவை அனைத்துமே புராண மற்றும் பக்திப் படங்கள். 1947-ல் வெளியான ’துளசி ஜலந்தர்’ திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவுடன் இணைந்து பி. யு. சின்னப்பா நடித்தார்.

பி.யு. சின்னப்பா, ஜி.ராமநாதன், அவரது சகோதரர் சுந்தர பாகவதர், பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி உள்ளிட்ட பலர் கொத்தமங்கலம் சீனுவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.