தேஜாஸ்ரீ இங்கவலெ: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 6: | Line 6: | ||
== லிட்டில் மனு ஆர்ட் == | == லிட்டில் மனு ஆர்ட் == | ||
தேஜஶ்ரீ கலை மற்று இசை பயிற்சிப் பட்டறைகளை மும்பையின் சேரி, பழங்குடி, சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒருங்கிணைத்தார். வாழ்வுக்கான ஏக்கம் இருந்தும் அதைப் பற்றிக் கொள்வதற்கான நம்பிக்கை குறைவான இடங்களில் தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்தார். குழந்தைகளின் கள்ளமின்மையை தக்க வைப்பதற்காகவும், தங்களை எந்தவித பயமும் இல்லாமல் வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகமாகவும் கலையை அவர்களிடம் அறிமுகப்படுத்த ‘Little Manu Art’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். இதன்வழியாக வாழ்வதற்கான முதல் படி குணமடைதல் என்று உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் குணமடையாத காயங்களால் வாழ்வதற்கு சிரமப்படுவதைக் களைந்து எந்தத் தடையுமில்லாமல் தங்களை | தேஜஶ்ரீ கலை மற்று இசை பயிற்சிப் பட்டறைகளை மும்பையின் சேரி, பழங்குடி, சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒருங்கிணைத்தார். வாழ்வுக்கான ஏக்கம் இருந்தும் அதைப் பற்றிக் கொள்வதற்கான நம்பிக்கை குறைவான இடங்களில் தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்தார். குழந்தைகளின் கள்ளமின்மையை தக்க வைப்பதற்காகவும், குழந்தைகள் தங்களை எந்தவித பயமும் இல்லாமல் வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகமாகவும் கலையை அவர்களிடம் அறிமுகப்படுத்த ‘Little Manu Art’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். இதன்வழியாக வாழ்வதற்கான முதல் படி குணமடைதல் என்று உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் குணமடையாத காயங்களால் வாழ்வதற்கு சிரமப்படுவதைக் களைந்து எந்தத் தடையுமில்லாமல் தங்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான வெளியை கலை, இசை, அன்பு மூலமாக ஏற்படுத்துவதை தன் வாழ்வில் நோக்கமாக ஏற்றுக் கொண்டார். | ||
== சாகாஜோ சங் == | == சாகாஜோ சங் == | ||
[[File:Theja22.jpeg|thumb|தேஜாஸ்ரீ இங்கவ்லே ]] | [[File:Theja22.jpeg|thumb|தேஜாஸ்ரீ இங்கவ்லே ]] | ||
பாரம்பரிய பக்தியிசைப் பாடகரான தேஜாஸ்ரீயின் தாத்தா தன் கனவில் வந்ததை அழைப்பாக ஏற்று பல கேள்விகளுடன் வீட்டைத் துறந்து ஏக்தாரி என்ற இசைக்கருவியுடன் இந்தியா முழுவதும் ஒன்றரை ஆண்டுகள் சுற்றினார். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தன் மனம் போன போக்கில் பயணம் செய்தார். அங்கு கோயில்கள், ஆசிரமங்கள், எளிய கிராமங்களில் தங்கியும் இசை இசைத்து, பாடி அதில் கிடைத்த தட்சிணை, உணவு வழியாக வாழ்ந்தார். தன் பயணத்தில் ஃபகிர்கள், பால்கள் (Bauls), யோகிகள், சன்னியாசிகள், கின்னர்களைச் சந்தித்தார். அவர்களின் பாடல்கள், வாழ்வனுபவங்கள் வழியாக தன் வாழ்க்கைப் பயணத்துக்கான சாரத்தை எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அதன் விளைவாக நாட்டார் மற்றும் பக்திப் பாடல்களை மக்களிடம் எடுத்துச் செல்வதை தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டார். பல குருக்களிடமிருந்து இந்தியாவின் நாட்டார் இசைகளைக் கற்றார். ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் ஒரு அம்சமான துருபத் இசையை ஒரு வருடம் பயின்றார். குறிப்பாக டாகர் (Dagar style) பாணியைக் கற்றார். பால்(Baul) பாரம்பரிய இசையையும் விரும்பிக் கற்றார். | பாரம்பரிய பக்தியிசைப் பாடகரான தேஜாஸ்ரீயின் தாத்தா தன் கனவில் வந்ததை அழைப்பாக ஏற்று பல கேள்விகளுடன் வீட்டைத் துறந்து ஏக்தாரி என்ற இசைக்கருவியுடன் இந்தியா முழுவதும் ஒன்றரை ஆண்டுகள் சுற்றினார். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தன் மனம் போன போக்கில் பயணம் செய்தார். அங்கு கோயில்கள், ஆசிரமங்கள், எளிய கிராமங்களில் தங்கியும் இசை இசைத்து, பாடி அதில் கிடைத்த தட்சிணை, உணவு வழியாக வாழ்ந்தார். தன் பயணத்தில் ஃபகிர்கள், பால்கள் (Bauls), யோகிகள், சன்னியாசிகள், கின்னர்களைச் சந்தித்தார். அவர்களின் பாடல்கள், வாழ்வனுபவங்கள் வழியாக தன் வாழ்க்கைப் பயணத்துக்கான சாரத்தை எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அதன் விளைவாக நாட்டார் மற்றும் பக்திப் பாடல்களை மக்களிடம் எடுத்துச் செல்வதை தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டார். பல குருக்களிடமிருந்து இந்தியாவின் நாட்டார் இசைகளைக் கற்றார். ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் ஒரு அம்சமான துருபத் இசையை ஒரு வருடம் பயின்றார். குறிப்பாக டாகர் (Dagar style) பாணியைக் கற்றார். பால்(Baul) பாரம்பரிய இசையையும் விரும்பிக் கற்றார். இந்தியா முழுவதும் சென்று எந்த கட்டணமும் எதிர்பார்க்காமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பாடியுள்ளார். | ||
மக்கள் தேஜாஶ்ரீயை 'சாகாஜோ' (the very essence of spontaneity) என்று அழைத்தனர். சாகாஜோ ஒரு பெண் துறவி. அவர் பெயரிலேயே 'Sahajo_Sang' என்ற அமைப்பை நிறுவினார். இசை, இசைப்பயிற்சி, குணமடைதல், எல்லையற்ற அன்புக்கான வெளி- இவற்றுக்கான அமைப்பாக இதனை உருவாக்கினார். | |||
===== இசை பயிற்சிவகுப்புகள் ===== | ===== இசை பயிற்சிவகுப்புகள் ===== | ||
Revision as of 22:12, 20 April 2025
தேஜஸ்ரீ இங்கவலெ (Tejashree Ingawale) (பிறப்பு: ஜூன் 27, 1988) ஓவியர், நாட்டார் மற்றும் பக்தி இசைப் பாடகர், இசைப் பயிற்றுனர், சமூகச் செயல்பாட்டாளர். இசை, கலை, அன்பு ஆகியவற்றின் வெளிப்பாட்டின் மூலமே மனிதன் விடுதலையடைய முடியும் என்று நம்புபவர். இதன்மூலம் மனித மனங்களை குணப்படுத்தும் வழிமுறைகளை முன்னெடுப்பவர். இந்திய நாட்டார், பாரம்பரிய இசையில் தென்படும் பக்தி-யோக மரபுகள், மொழி, ஞானம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவர்.
பிறப்பு, கல்வி
தேஜஸ்ரீ இங்கவலெ இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே நகரத்தில் ரத்னகுமார் இங்கவலெ, சுரேகா இங்கவலெ இணையருக்கு ஜூன் 27, 1988-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நிலேஷ், தனஸ்ரீ. பூனே கல்லூரியில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். மும்பையின் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணி செய்தார். பணியைத் துறந்து சமூக செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
லிட்டில் மனு ஆர்ட்
தேஜஶ்ரீ கலை மற்று இசை பயிற்சிப் பட்டறைகளை மும்பையின் சேரி, பழங்குடி, சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒருங்கிணைத்தார். வாழ்வுக்கான ஏக்கம் இருந்தும் அதைப் பற்றிக் கொள்வதற்கான நம்பிக்கை குறைவான இடங்களில் தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்தார். குழந்தைகளின் கள்ளமின்மையை தக்க வைப்பதற்காகவும், குழந்தைகள் தங்களை எந்தவித பயமும் இல்லாமல் வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகமாகவும் கலையை அவர்களிடம் அறிமுகப்படுத்த ‘Little Manu Art’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். இதன்வழியாக வாழ்வதற்கான முதல் படி குணமடைதல் என்று உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் குணமடையாத காயங்களால் வாழ்வதற்கு சிரமப்படுவதைக் களைந்து எந்தத் தடையுமில்லாமல் தங்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான வெளியை கலை, இசை, அன்பு மூலமாக ஏற்படுத்துவதை தன் வாழ்வில் நோக்கமாக ஏற்றுக் கொண்டார்.
சாகாஜோ சங்
பாரம்பரிய பக்தியிசைப் பாடகரான தேஜாஸ்ரீயின் தாத்தா தன் கனவில் வந்ததை அழைப்பாக ஏற்று பல கேள்விகளுடன் வீட்டைத் துறந்து ஏக்தாரி என்ற இசைக்கருவியுடன் இந்தியா முழுவதும் ஒன்றரை ஆண்டுகள் சுற்றினார். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தன் மனம் போன போக்கில் பயணம் செய்தார். அங்கு கோயில்கள், ஆசிரமங்கள், எளிய கிராமங்களில் தங்கியும் இசை இசைத்து, பாடி அதில் கிடைத்த தட்சிணை, உணவு வழியாக வாழ்ந்தார். தன் பயணத்தில் ஃபகிர்கள், பால்கள் (Bauls), யோகிகள், சன்னியாசிகள், கின்னர்களைச் சந்தித்தார். அவர்களின் பாடல்கள், வாழ்வனுபவங்கள் வழியாக தன் வாழ்க்கைப் பயணத்துக்கான சாரத்தை எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அதன் விளைவாக நாட்டார் மற்றும் பக்திப் பாடல்களை மக்களிடம் எடுத்துச் செல்வதை தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டார். பல குருக்களிடமிருந்து இந்தியாவின் நாட்டார் இசைகளைக் கற்றார். ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் ஒரு அம்சமான துருபத் இசையை ஒரு வருடம் பயின்றார். குறிப்பாக டாகர் (Dagar style) பாணியைக் கற்றார். பால்(Baul) பாரம்பரிய இசையையும் விரும்பிக் கற்றார். இந்தியா முழுவதும் சென்று எந்த கட்டணமும் எதிர்பார்க்காமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பாடியுள்ளார்.
மக்கள் தேஜாஶ்ரீயை 'சாகாஜோ' (the very essence of spontaneity) என்று அழைத்தனர். சாகாஜோ ஒரு பெண் துறவி. அவர் பெயரிலேயே 'Sahajo_Sang' என்ற அமைப்பை நிறுவினார். இசை, இசைப்பயிற்சி, குணமடைதல், எல்லையற்ற அன்புக்கான வெளி- இவற்றுக்கான அமைப்பாக இதனை உருவாக்கினார்.
இசை பயிற்சிவகுப்புகள்
குக்கூ காட்டுப்பள்ளியுடன் இணைந்து 'Mystical Music Retreats – Voice of Many Lands' என்ற பெயரில் மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த வகுப்பில் நாட் யோகா (Naad Yoga), உடற்பயிற்சிகள், பக்தி இசைக்கான தத்துவம், நவீன வாழ்வுக்கான ஆன்மீகம் சார்ந்த வகுப்பு, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து நாட்டார் பாடல்கள், கலை மற்றிம் இசைப் பயிற்சிகள், கபீர், மீராபாய், ரூமி, அக்கமாகாதேவி, குஸ்ரூ, துக்காராம், ஜனாபாய் ஆகியோரின் கவிதைகளின் ஆழ்ந்த பொருள் பற்றி பேசுதல், உடல், ஆன்மா, குரல் ஆகியவற்றிற்கிடையிலான பிணைப்பு பற்றி அறிதல் ஆகியவை இந்த பயிற்சி வகுப்பின் அங்கமாக இருந்தது.
குக்கூ காட்டுப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
பழங்குடிக் குழந்தைகளின் இசை
"Music from the Heart of Tamil Nadu’s Forests" என்ற திட்டத்தின் மூலம் குக்கூ மற்றும் சாகாஜோ சங் இணைந்து பழங்குடி குழந்தைகளுக்கான இசைப் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் திட்டமாக ஈரோடு மாவட்டம் சோளகனையிலுள்ள பழங்குடி குழந்தைகள் மத்தியில் பயிற்சி அளிக்கிறார். அவர்களின் மொழி, இசை வழியாக அவர்களே எழுதியும், இசையமைத்தும் ஒரு இசைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியை மேற்கொள்கிறார். ஐந்து உண்மையான இசைக்கோர்வைகளையும், ஒரு பிரம்மாண்ட சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவையும் பதிவு செய்து அந்த இசையை உலகத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தில் உள்ளார்.
இணைப்புகள்
- Sahajo Sang - Music performance - Learning and Healing - Instagram
- Littlemanuart - empowering children through art - instagram
- cuckoo forst school
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.