being created

காலம் செல்வம்: Difference between revisions

From Tamil Wiki
m (Madhusaml moved page 'காலம்’செல்வம் to காலம் செல்வம் without leaving a redirect: Moving to title without quote mars)
No edit summary
Line 1: Line 1:
[[File:Selvam-drawing-copy-1-272x420.jpg|thumb|செல்வம்]]
{{being created}}[[File:Selvam-drawing-copy-1-272x420.jpg|thumb|செல்வம்]]
’காலம்’ செல்வம் (செல்வம் அருளானந்தம்) (1953 ) கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் சிற்றிதழின் ஆசிரியர். ’வாழும்தமிழ்’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர். எழுத்தாளர். இலக்கியச்செயல்பாடுகளுடன் தெருக்கூத்திலும் ஈடுபாடு கொண்டவர்.
’காலம்’ செல்வம் (செல்வம் அருளானந்தம்) (1953 ) கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் சிற்றிதழின் ஆசிரியர். ’வாழும்தமிழ்’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர். எழுத்தாளர். இலக்கியச்செயல்பாடுகளுடன் தெருக்கூத்திலும் ஈடுபாடு கொண்டவர்.



Revision as of 08:44, 3 February 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

செல்வம்

’காலம்’ செல்வம் (செல்வம் அருளானந்தம்) (1953 ) கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் சிற்றிதழின் ஆசிரியர். ’வாழும்தமிழ்’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர். எழுத்தாளர். இலக்கியச்செயல்பாடுகளுடன் தெருக்கூத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

பிறப்பு, கல்வி

செல்வம் யாழ்ப்பாணம் சில்லாலையில் 30 -ஜூன் 1953 ல் சவரிமுத்து -- திரேசம்மாவுக்கு பிறந்தார். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் புனித ஹென்றி கல்லூரி ( St. Henry’s College) இளவாலையில் பட்டப்படிப்பையும் புனித அகஸ்டின் பிரெஞ்சு மொழி பள்ளியில் (St. Augustine French Language School Paris, France) ல் பிரெஞ்சு மொழியும் மருத்துவத் தாதிக்கான பட்டயப்படிப்பு (Diploma from St. Daniel College Toronto) கனடாவிலும் முடித்தார்.

தனிவாழ்க்கை

செல்வம் 29 அக்டோபர்1986ல்  தேவராணியை மணந்தார். நிருபன், செந்தூரி, கஸ்தூரி என மூன்று குழந்தைகள். மருத்துவ உதவியாளராகப் பணிபுரிகிறார்

இலக்கியவாழ்க்கை

செல்வம் 1975ல் நான் என்னும் இதழில் தன் முதல் கவிதையை எழுதினார். ஜெயகாந்தன் எஸ் பொன்னுத்துரை சுந்தர ராமசாமி ஜானகிராமன் ஆகியோரை இலக்கிய முன்னோடிகளாக கருதுகிறார். செல்வம் தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். பின்னர் நீண்டகாலம் ஏதும் எழுதவில்லை. அவருடைய அகதிவாழ்க்கையைப் பற்றி எழுதிய எழுதித்தீரா பக்கங்கள் என்னும் நூல் அதன் இயல்பான நகைச்சுவையால் புகழ்பெற்றது. தொடர்ந்து அதன் அடுத்த பகுதியான சொற்களில் சுழலும் உலகம் நூலையும் எழுதினார்

இதழியல்

செல்வம் புலம்பெயர் வாழ்க்கையில் இரண்டு சிற்றிதழ்களை நடத்தினார். குமார் மூர்த்தி என்னும் நண்பருடன் இணைந்து அவர் தொடங்கிய காலம் சிற்றிதழ் முப்பதாண்டுகளாக கனடா டொரொண்டோ நகரில் இருந்து வெளிவருகிறது. ஈழத்து இலக்கியவாதிகளுக்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் காலம் வெளியிட்ட சிறப்பிதழ்கள் இலக்கிய ஆவணங்க

  • பார்வை சஞ்சிகை (1987-1989) (ஆசிரியர்) (Montreal, Canada)  
  • காலம் சஞ்சிகை (1990 – Present) (Toronto)

அமைப்புப்பணிகள்

செல்வம் கனடாவில் இருந்து செயல்படும் பல இலக்கிய அமைப்புகளில் உறுப்பினரும் நிர்வாகியுமாவார். அவர் ஒருங்கிணைக்கும் வாழும்தமிழ் அமைப்பு புத்தகச் சந்தையையும் இலக்கியக்கூட்டங்களையும் ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

  • தமிழ் இலக்கியத்தோட்டம்- டொரெண்டோ Tamil Literary Garden (2001 – Present) (Founding Member / Board Member) (Toronto)
  • தமிழ் தரவு மையம் Tamil Resource Center (1989 – Present) (Founding Member) (Toronto)
  • வாழும் தமிழ் Book Exhibition Series (1990 – Present) (Toronto)
  • இலக்கிய ஒருங்கிணைபபளர் Literary Meeting Organizer (1990 – Present) (Toronto)

இலக்கிய இடம்

1990 முதல் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இலக்கிய அமைப்புகளும் இலக்கிய இதழ்களும் வெளிவந்தன. அவற்றில் முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக வெளிவரும் இதழ் காலம். முப்பதாண்டுகளாக இடைவிடாமல் செயலாற்றி வரும் இலக்கிய அமைப்பு வாழும் தமிழ். கனடாவை மையமாக்கி ஓர் இலக்கிய இயக்கம் உருவாக அடிப்படை அமைத்தவர் செல்வம். காலம் இதழ் எழுத்தாளர்களுக்காக வெளியிட்ட சிறப்பிதழ்கள் முக்கியமானவை. நகைட்டுவையுடன் அகதிவாழ்வின் துயரங்களை பதிவுசெய்தவர்.

நூல்கள்

  • கட்டிடக்காடு (கவிதைகள்) 
  • எழுதித்தீராபக்கங்கள் (தன்வரலாறு)  
  • சொற்களில் சுழரும் உலகம் (தன்வரலாறு)

உசாத்துணை