ந. முத்துமோகன்: Difference between revisions
No edit summary |
|||
| Line 12: | Line 12: | ||
முதல் படைப்பு ந.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி என்னும் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து அப்பத்திரிக்கையில் எழுதி வந்தார். முதல் நூல் ”அமைப்பியல்” காவ்யா பதிப்பகம் மூலம் 1990இல் வெளியானது. தத்துவம், பின் அமைப்பியல், மார்க்ஸிய விவாதங்கள், 20ஆம் நூற்றாண்டு மார்க்சியம், மார்கஸ்-அம்பேத்கார் உரையாடல், சீக்கியம் குறித்தான ஆய்வுகள், தமிழ் அடையாளம் போன்ற தலைப்புகளில் எழுதியுள்ளார். ஐரோப்பியத் தத்துவங்கள் மட்டுமின்றி இந்திய / தமிழகத் தத்துவங்கள் குறித்தும் எழுதிய 120 கட்டுரைகள் இவரது பெயரில் மார்க்ஸியக் கட்டுரைகள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகத்தால் 2001இல் தொகுக்கப்பட்டு ஒரு பருநூலாய் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரைகள் மட்டுமின்றி ஐரோப்பியத் தத்துவவாதிகள் குறித்து NCBH நிறுவனத்திற்காகப் பல குறு நூல்களையும் எழுதியுள்ளார். மார்க்ஸிய அணுகுமுறையுடன் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவராக மதிப்பிடப்படுகிறார். | முதல் படைப்பு ந.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி என்னும் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து அப்பத்திரிக்கையில் எழுதி வந்தார். முதல் நூல் ”அமைப்பியல்” காவ்யா பதிப்பகம் மூலம் 1990இல் வெளியானது. தத்துவம், பின் அமைப்பியல், மார்க்ஸிய விவாதங்கள், 20ஆம் நூற்றாண்டு மார்க்சியம், மார்கஸ்-அம்பேத்கார் உரையாடல், சீக்கியம் குறித்தான ஆய்வுகள், தமிழ் அடையாளம் போன்ற தலைப்புகளில் எழுதியுள்ளார். ஐரோப்பியத் தத்துவங்கள் மட்டுமின்றி இந்திய / தமிழகத் தத்துவங்கள் குறித்தும் எழுதிய 120 கட்டுரைகள் இவரது பெயரில் மார்க்ஸியக் கட்டுரைகள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகத்தால் 2001இல் தொகுக்கப்பட்டு ஒரு பருநூலாய் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரைகள் மட்டுமின்றி ஐரோப்பியத் தத்துவவாதிகள் குறித்து NCBH நிறுவனத்திற்காகப் பல குறு நூல்களையும் எழுதியுள்ளார். மார்க்ஸிய அணுகுமுறையுடன் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவராக மதிப்பிடப்படுகிறார். | ||
== நூல்கள் பட்டியல் == | == நூல்கள் பட்டியல் == | ||
[[File:தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல்.png|thumb|321x321px|தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல்]] | |||
*படைப்பின் அற்புத தருணங்கள்(மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஒர் அறிமுகம்) (NCBH-2022) | |||
* மார்க்சியக் கட்டுரைகள் (காவ்யா-2007) | * மார்க்சியக் கட்டுரைகள் (காவ்யா-2007) | ||
* மார்க்ஸ்-அம்பேத்கர்: புதிய பரப்புகளுக்கான தேடுகை (விடியல் பதிப்பகம்-2011) | * மார்க்ஸ்-அம்பேத்கர்: புதிய பரப்புகளுக்கான தேடுகை (விடியல் பதிப்பகம்-2011) | ||
| Line 42: | Line 43: | ||
* மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் [20 தொகுதிகள்] | * மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் [20 தொகுதிகள்] | ||
* மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசை | * மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசை | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.youtube.com/watch?v=xE-7MB5qJ0w&ab_channel=KULUKKAI தமிழகத்தில் சாதி: வரலாறும், புரிதல்களும்: பேரா.ந.முத்துமோகன்: உரை] | * [https://www.youtube.com/watch?v=xE-7MB5qJ0w&ab_channel=KULUKKAI தமிழகத்தில் சாதி: வரலாறும், புரிதல்களும்: பேரா.ந.முத்துமோகன்: உரை] | ||
Revision as of 15:09, 20 August 2022
ந. முத்துமோகன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1954) பேராசிரியர். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆய்வாளர். மார்க்சிய அரசியல் தத்துவத்தில் ஆர்வமுள்ளவர். சைவ சித்தாந்தம், சீக்கிய மதம் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார்.
பிறப்பு, கல்வி
ந. முத்துமோகன் நடராஜன், பவானி இணையருக்கு ஆகஸ்ட் 25, 1954இல் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் சிதம்பரபுரத்தில் பிறந்தார். உயர்நிலைக்கல்வி அரசு உயர்நிலைப்பள்ளி, களக்காட்டில் பயின்றார். நாகர்கோவில், பயோனியர் குமாரசாமி கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். 1976-82 வரை ஒருங்கிணைந்த முதுகலை வேதியியல், 6 வருடம் பேட்ரிஸ்(Patrice) லும்பா பல்கலைக்கழகம், ரஷ்யாவில் பயின்றார். 1982 – 87வரை இந்திய தத்துவத்தில் பேட்ரிஸ்(Patrice) லும்பா பல்கலைக்கழகம், ரஷ்யாவில் ”புராதான இந்திய தத்துவத்தின் தோற்றம்” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
தற்போது மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கொட்டையில் வசிக்கிறார். ஜூலை 5, 1989இல் பள்ளி ஆசிரியை இந்திராவை மணந்தார். பிள்ளைகள் பாரதி நடராஜன், ராஜகோபால். 1987 - 2013வரை மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
இலக்கிய ஆதர்சமாக தஸ்தாவஸ்கியைக் கூறுகிறார். மார்க்சிய அரசியல் தத்துவத்தில் ஆர்வமுள்ளவர். ஆ.சிவசுப்ரமணியம் அவர்களின் மாணவர். சைவ சித்தாந்தத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சீக்கிய மதம் மற்றும் பண்பாட்டு ஆராய்சியில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலத்தில் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் குருநானக் இருக்கையின் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். முதல் படைப்பு ந.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி என்னும் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து அப்பத்திரிக்கையில் எழுதி வந்தார். முதல் நூல் ”அமைப்பியல்” காவ்யா பதிப்பகம் மூலம் 1990இல் வெளியானது. தத்துவம், பின் அமைப்பியல், மார்க்ஸிய விவாதங்கள், 20ஆம் நூற்றாண்டு மார்க்சியம், மார்கஸ்-அம்பேத்கார் உரையாடல், சீக்கியம் குறித்தான ஆய்வுகள், தமிழ் அடையாளம் போன்ற தலைப்புகளில் எழுதியுள்ளார். ஐரோப்பியத் தத்துவங்கள் மட்டுமின்றி இந்திய / தமிழகத் தத்துவங்கள் குறித்தும் எழுதிய 120 கட்டுரைகள் இவரது பெயரில் மார்க்ஸியக் கட்டுரைகள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகத்தால் 2001இல் தொகுக்கப்பட்டு ஒரு பருநூலாய் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரைகள் மட்டுமின்றி ஐரோப்பியத் தத்துவவாதிகள் குறித்து NCBH நிறுவனத்திற்காகப் பல குறு நூல்களையும் எழுதியுள்ளார். மார்க்ஸிய அணுகுமுறையுடன் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவராக மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள் பட்டியல்
- படைப்பின் அற்புத தருணங்கள்(மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஒர் அறிமுகம்) (NCBH-2022)
- மார்க்சியக் கட்டுரைகள் (காவ்யா-2007)
- மார்க்ஸ்-அம்பேத்கர்: புதிய பரப்புகளுக்கான தேடுகை (விடியல் பதிப்பகம்-2011)
- ஐரோப்பிய தத்துவங்கள் (NCBH-2015)
- மார்க்சியம் பயில்வோம் (NCBH-2018)
- தொடரும் மார்க்சிய விவாதங்கள் (கீற்று-2006)
- மார்க்சிய விவாதங்கள் (காவ்யா-2002)
- சமூகவியல் நோகில் மதம் (NCBH-2012)
- இயங்கியல் பொருள்முதல்வாதம் – ஒரு அறிமுகம் (NCBH-2012
- ஜீவாவின் பண்பாட்டு அரசியல் (NCBH-2012)
- வேதந்தத்தின் கலாச்சார அரசியல் (NCBH-2012)
- அயோத்திதாச பண்டிதர் – தென்னிந்தியாவில் தலித் தன்னுணர்வின் உருவாக்கம் (NCBH-2017)
- வர்க்க அரசியலும் அடையாள அரசியலும் (NCBH-2019)
- 1848 (NCBH-2012)
- இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்
- பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்
- பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
- மார்க்சியம் பயிலுவோம்
- விளிம்புநிலை மார்க்ஸ்
- ஹெர்பர்ட் மார்க்யுஸ்
ஆங்கிலம்
- Essential Postulates of Sikhism (Punjabi University, Patiala, 2003)
- (Editor) South Indian Studies on Sikhism (Guru Nanak University, Amritsar, 2004)
- Post Modernism and Indian Philosophy (Bhavani Publications)
- Essays on Philosophy of Shri Guru Nanak Dev Ji (Indra Gandhi National Centre for the Arts, 2021)
- Writing Sikh Philosophy on Its Own Terms (Guru Nanak University, Amritsar)
- Essays on Sikh Philosophy (Institute of Sikh Studies, Chandigarh, 1997)
பதிப்பித்தவை
- மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் [20 தொகுதிகள்]
- மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசை
இணைப்புகள்
- தமிழகத்தில் சாதி: வரலாறும், புரிதல்களும்: பேரா.ந.முத்துமோகன்: உரை
- N. Muthumohan speech | ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு தமிழில் : சா.தேவதாஸ் | ந.முத்துமோகன் உரை
உசாத்துணை
- ந.முத்துமோகன் ஆய்வுகள்: keetru
- பேராசிரியர் ந.முத்துமோகனின் இடையறாத் தத்துவக் கற்பித்தல் நெறி: keetru
- விளிம்புநிலை மார்க்ஸ் என்றொரு புதிய நூல் - 1: keetru
- பண்பாட்டு மண்ணில் காலூன்றிய தத்துவவாதி: காக்கை: பக்கம் 18
- பண்பாட்டு மண்ணில் காலூன்றிய தத்துவவாதி: காக்கை: பக்கம் 44
- பண்பாட்டு மண்ணில் காலூன்றிய தத்துவவாதி: காக்கை: பக்கம் 54
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
