being created

தி. க. சுப்பராய செட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''தி. க. சுப்பராய செட்டியார்''' (1894) என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் இவர் முதன்மையானவர் . 19 ஆம் நூற்றா...")
 
No edit summary
Line 1: Line 1:
'''தி. க. சுப்பராய செட்டியார்''' (1894) என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் இவர் முதன்மையானவர் . 19 ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த புலவர்களில் ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த புலவர்களில் இவர் முக்கியமானவர் . இவர் '''சோடசாவதானம் சுப்பராய செட்டியார்''' என்றும் அழைக்கப்பட்டார்.

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்  என்ற புத்தகத்தில் இவரை பற்றின குறிப்புகள் தெளிவாக உள்ளது .இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர். ஆழ்ந்த அறிவும் நல்ல நினைவாற்றலும் கொண்டவர் .பதினாறு அவதானம் செய்யும்படி மிகவும் குறிகிய காலத்தில் தம் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டு சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று சிறப்பு பெயர் பெற்றவர் .
இவர் சென்னை அரசினர் தமிழ் புலவராக பணியாற்றினார் .இராயபேட்டை அத்துவித வேதாந்த சபையில் வாரந்தோறும் வேதாந்த வகுப்பு நடத்தி வந்தார் .
இவர் 'விரிஞ்சேகர் சதகம்',  ' ஆதிபுர தலபுராணம் ' என்னும் நூல்களை இயற்றியுள்ளார் .
பதினோராம் திருமுறை முழுவதையும்
பல ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கி, முதன்முதலாகப் பதிப்பித்து 1869 இல் வெளியிட்டவர் இவரே.
தம் ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாயூரப் புராணம்,திருநாகை காரோணப் புராணம்
ஆகியவற்றையும்,காங்கேயன் உரிச்சொல் நிகண்டு,திருப்போரூர் சந்நிதிமுறை ஆகியவற்றையும் பதிப்பித்துள்ளார்.
பின் வரும் நூலகளுக்கு உரை எழுதி அச்சிட்டுள்ளார்.
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் , கம்பராமாயணம் , அயோத்தியா காண்டம் , சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம் , புலிவூர் வெண்பா ஆகிய நூலகளுக்கு உரை எழுதி அச்சிட்டுள்ளார் .
சிலப்பதிகாரம் – புகார்க் காண்டத்தின் கானல்வரிக்குப் புதியதாய் உரை எழுதி, 1872 இல் முதன்முதலாகப் பதிப்பித்தவர் இவர்.
இவர் எழுதிய 'விரிஞ்சேகர் சதகம்' பற்றி மற்றும் இவரை பற்றியும்  திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய சிறப்பு செய்யுள் பின்வருமாறு உள்ளது .
"மாமேவு கற்பகப் பூந்தளிரும் நறுமலரும் வாட்டமற்
றெளிர வான்மேல்
மாலென வுயர்ந்துதழை சோலைபுடை சூழும்வள
வாணியம் பதிதழைப்பப்
பூமேவு மொருபாற் பசுங்கொடி தழைப்பவளர்  பொற்றரு
வினிற்றழைத்த
பூரணி யிடப்பிரம காரணர் விரிஞ்சேகர் பொன்னங்
கழற்கணியெனப்
பாமேவு மொருசதகம் இனிது பாடுகவெனப் பரவுதம்பா
லேற்றவர்
பாலேவ மேற்பவருள் மால்வேங்க டப்பமுகில்
பரிவுற்று வந்துகேட்பத்
தூமேவு சொற்பொருள் நயம் பெறச் செய்தனன் துதிவீர
ராகவப்பேர்த்
தூயனருள் மைந்தன் நய மிகுசோட சவதானி
சுப்புராய புரவலனே" -
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
சோடசாவதானம் தி .க . சுப்பராய செட்டியார்
இவர்  1894 இல் காலமானார் .
தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தில் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்கள் பற்றிய தொகுப்பு உள்ளது அதில் சேனைத்தலைவர் குல தி.க. சுப்புராய செட்டியார் பற்றி தெளிவாக உள்ளது அதே நேரத்தில் அவர் இயற்றிய நூலை சைவ மார்க்கம் பாதுகாத்து வைத்திருக்கும் நூலில் இவர் சேனைத்தலைவர் குலத்தில் சைவ மார்க்கத்தில் வந்த வணிக மரபினர் என்று தெளிவாக உள்ளது .
பின்வரும் சைவ மார்க்கம் பாதுகாத்து வரும் நூல்களில் இவர் எழுதிய நூல்களின் தொகுப்பு உள்ளது .
<nowiki>https://shaivam.org/.../sta-eyinanur-sandanapuri-enum</nowiki>...

Revision as of 20:08, 18 August 2022

தி. க. சுப்பராய செட்டியார் (1894) என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் இவர் முதன்மையானவர் . 19 ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த புலவர்களில் ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த புலவர்களில் இவர் முக்கியமானவர் . இவர் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்றும் அழைக்கப்பட்டார்.

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் என்ற புத்தகத்தில் இவரை பற்றின குறிப்புகள் தெளிவாக உள்ளது .இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர். ஆழ்ந்த அறிவும் நல்ல நினைவாற்றலும் கொண்டவர் .பதினாறு அவதானம் செய்யும்படி மிகவும் குறிகிய காலத்தில் தம் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டு சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று சிறப்பு பெயர் பெற்றவர் .

இவர் சென்னை அரசினர் தமிழ் புலவராக பணியாற்றினார் .இராயபேட்டை அத்துவித வேதாந்த சபையில் வாரந்தோறும் வேதாந்த வகுப்பு நடத்தி வந்தார் .

இவர் 'விரிஞ்சேகர் சதகம்', ' ஆதிபுர தலபுராணம் ' என்னும் நூல்களை இயற்றியுள்ளார் .

பதினோராம் திருமுறை முழுவதையும்

பல ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கி, முதன்முதலாகப் பதிப்பித்து 1869 இல் வெளியிட்டவர் இவரே.

தம் ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாயூரப் புராணம்,திருநாகை காரோணப் புராணம்

ஆகியவற்றையும்,காங்கேயன் உரிச்சொல் நிகண்டு,திருப்போரூர் சந்நிதிமுறை ஆகியவற்றையும் பதிப்பித்துள்ளார்.

பின் வரும் நூலகளுக்கு உரை எழுதி அச்சிட்டுள்ளார்.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் , கம்பராமாயணம் , அயோத்தியா காண்டம் , சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம் , புலிவூர் வெண்பா ஆகிய நூலகளுக்கு உரை எழுதி அச்சிட்டுள்ளார் .

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டத்தின் கானல்வரிக்குப் புதியதாய் உரை எழுதி, 1872 இல் முதன்முதலாகப் பதிப்பித்தவர் இவர்.

இவர் எழுதிய 'விரிஞ்சேகர் சதகம்' பற்றி மற்றும் இவரை பற்றியும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய சிறப்பு செய்யுள் பின்வருமாறு உள்ளது .

"மாமேவு கற்பகப் பூந்தளிரும் நறுமலரும் வாட்டமற்

றெளிர வான்மேல்

மாலென வுயர்ந்துதழை சோலைபுடை சூழும்வள

வாணியம் பதிதழைப்பப்

பூமேவு மொருபாற் பசுங்கொடி தழைப்பவளர் பொற்றரு

வினிற்றழைத்த

பூரணி யிடப்பிரம காரணர் விரிஞ்சேகர் பொன்னங்

கழற்கணியெனப்

பாமேவு மொருசதகம் இனிது பாடுகவெனப் பரவுதம்பா

லேற்றவர்

பாலேவ மேற்பவருள் மால்வேங்க டப்பமுகில்

பரிவுற்று வந்துகேட்பத்

தூமேவு சொற்பொருள் நயம் பெறச் செய்தனன் துதிவீர

ராகவப்பேர்த்

தூயனருள் மைந்தன் நய மிகுசோட சவதானி

சுப்புராய புரவலனே" -

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

சோடசாவதானம் தி .க . சுப்பராய செட்டியார்

இவர் 1894 இல் காலமானார் .

தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தில் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்கள் பற்றிய தொகுப்பு உள்ளது அதில் சேனைத்தலைவர் குல தி.க. சுப்புராய செட்டியார் பற்றி தெளிவாக உள்ளது அதே நேரத்தில் அவர் இயற்றிய நூலை சைவ மார்க்கம் பாதுகாத்து வைத்திருக்கும் நூலில் இவர் சேனைத்தலைவர் குலத்தில் சைவ மார்க்கத்தில் வந்த வணிக மரபினர் என்று தெளிவாக உள்ளது .

பின்வரும் சைவ மார்க்கம் பாதுகாத்து வரும் நூல்களில் இவர் எழுதிய நூல்களின் தொகுப்பு உள்ளது .

https://shaivam.org/.../sta-eyinanur-sandanapuri-enum...

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.