being created

கோவி. மணிசேகரன்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added, Image Added)
(Para Added, Image Added)
Line 8: Line 8:
1955-ல், சரஸ்வதியுடன் திருமணம் நிகழ்ந்தது. தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, இலக்கிய, வரலாற்று ஆர்வத்தால் ஆண்களுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்றும், பெண்களுக்கு பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்றும் பெயரிட்டார்.  

[[File:Kovi Mani 2.jpg|thumb|கோவி. மணிசேகரன்]]

== இலக்கிய வாழ்க்கை ==
கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்கள் கோவி. மணிசேகரனை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ இவருள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்கியைப் போல சிறந்ததொரு வரலாற்று நாவலை எழுத வேண்டும் என்றும், மு.வ.வைப் போல் சிறந்த சமூக நாவல்களைப் படைக்க வேண்டும் என்றும் ஆர்வம் கொண்டார்.
====== கவிதைப் பங்களிப்புகள் ======
கோவி. மணிசேகரன், இலக்கிய ஆர்வத்தால் தொடக்கத்தில் கவிதைகளையே எழுதினார். இவரது முதல் கவிதை, 1945-ல், ‘தமிழ் நிலம்’ என்ற மாத இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களுக்குக் கவிதைகளை எழுதினார். கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது கவிதைகளைத் தொகுத்து ‘கற்பனாஞ்சலி’ என்னும் பெயரில் கவிதை நூலாக வெளியிட்டார். அதுவே அச்சில் வெளிவந்த இவரது முதல் நூல்.
====== நாடகப் பங்களிப்புகள் ======
அண்ணாவின் மேடைப்பேச்சாலும் நாடகங்களாலும் ஈர்க்கப்பட்ட கோவி. மணிசேகரன், நாடகங்கள் எழுத முற்பட்டார். 1947-ல், ‘எங்கள் நாடு’ என்ற நாளிதழ் மலரில் ‘புரட்சிப் புலவர் அம்பிகாபதி’ என்ற நாடகத்தை எழுதினார். தொடர்ந்து ‘கல்லறை, ‘பேசும் தெய்வம்’ என்ற இரு நாடகங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்தார். நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘சேகரன்’ அந்த நாடகம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதுவரை ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதி வந்தவர், தந்தையின் பெயரான கோவி. என்பதை இணைத்துக் கொண்டு ‘கோவி. மணிசேகரன்’  என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.
====== இதழியல் பங்களிப்புகள் ======
கோவி. மணிசேகரன், நாளடைவில் நடிப்பிலிருந்து முற்றிலும் விலகி எழுத்துத் துறையில்  ஈடுபட்டார். 1954-ல் ‘கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரனின் முதல் வரலாற்று நாவலான ‘அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து ‘கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். முருகு மற்றும் மங்களம் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
[[File:Kovimani sekaran Cinema works.jpg|thumb|கோவி. மணிசேகரனின் திரைப்படப் பங்களிப்புகள்]]

== இலக்கிய வாழ்க்கை ==
====== திரைப்படப் பங்களிப்புகள் ======
கோவி. மணிசேகரனுக்கு திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தன. 1958-ல் வெளியான ‘பூலோகரம்பை’ படத்தில் பாடல் எழுதினார். 1954-ம் ஆண்டு வெளியான ‘நல்லகாலம்’ படத்திற்கு வசனம் எழுதினார். இயக்குநர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். ‘அரங்கேற்றம்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.
 
வயது வந்தும் பருவம் அடையாத பெண்ணையும் அதனால் அவளது குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மையமாக வைத்து, ‘தென்னங்கீற்று’ என்ற நாவலை எழுதியிருந்தார், கோவி. மணிசேகரன். அந்த நாவலுக்குத் திரைக்கதை, வசனம் எழுதி அதே ‘தென்னங்கீற்று’ என்ற பெயரிலேயே தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கினார். அது கன்னடத்தில் வெற்றி பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது. ஆனால், தமிழில் தோல்வி அடைந்தது. அடுத்த முயற்சியாக தனது கதையான ‘மனோரஞ்சிதம்’ என்பதைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். படம் பாதியிலேயே நின்று போனது. இவருடைய கதை ‘அகிலா’ என்பது ‘மீண்டும் பல்லவி’ என்ற பெயரில், மற்றொருவர் இயக்கத்தில் திரைப்படமானது.

கல்கி மற்றும் டாக்டர் மு..வின் எழுத்துக்கள் கோவி. மணிசேகரனை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ இவருள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்கியைப் போல சிறந்ததொரு வரலாற்று நாவலை எழுத வேண்டும் என்றும், மு.வ.வைப் போல் சிறந்த சமூக நாவல்களைப் படைக்க வேண்டும் என்றும் ஆர்வம் கொண்டார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
அடுத்த முயற்சியாக தனது ‘யாகசாலை’ என்பதைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர். தடுத்தும் கேளாமல் அதனை இயக்கி வெளியிட்டார். படம் ஓடாததால் பெரும் நஷ்டமடைந்தார். அது முதல் திரைப்படத் துறையிலிருந்து விலகி மீண்டும் எழுத்து முயற்சியில் ஈடுபட்டார்.  

====== கவிதைப் பங்களிப்புகள் ======
====== தொலைக்காட்சிப் பங்களிப்புகள் ======
கோவி. மணிசேகரன், இலக்கிய ஆர்வத்தால் தொடக்கத்தில் கவிதைகள் பலவற்றை எழுதினார். இவரது முதல் கவிதை, 1945-ல், ‘தமிழ் நிலம்’ என்ற மாத இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களுக்குக் கவிதைகளை எழுதினார். கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது கவிதைகளைத் தொகுத்து ‘கற்பனாஞ்சலி’ என்னும் பெயரில் கவிதை நூலாக வெளியிட்டார். அதுதான் அச்சில் வெளிவந்த இவரது முதல் நூல்.
சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து இவர் தயாரித்த “ஊஞ்சல் ஊர்வலம்” என்ற தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘திரிசூலி’, ‘அக்னிப் பரீட்சை’ போன்ற தொடர்கள் வெளியாகி இவருக்குப் புகழ் சேர்த்தன.  

====== நாடகப் பங்களிப்புகள் ======
====== நாவல்களும் சிறுகதைகளும் ======
அண்ணாவின் மேடைப்பேச்சாலும் நாடகங்களாலும் ஈர்க்கப்பட்ட கோவி. மணிசேகரன், நாடகங்கள் எழுத முற்பட்டார். 1947-ல், ‘எங்கள் நாடு’ என்ற நாளிதழ் மலரில் ‘புரட்சிப் புலவர் அம்பிகாபதி’ என்ற நாடகத்தை எழுதினார். தொடர்ந்து ‘கல்லறை, ‘பேசும் தெய்வம்’ என்ற இரு நாடகங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்தார். நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘சேகரன்’ அந்த நாடகம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதுவரை ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதி வந்தவர், தந்தையின் பெயரான கோவி. என்பதை இணைத்துக் கொண்டு ‘கோவி. மணிசேகரன்’  என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.
வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. குமுதம், விகடன், கல்கி, கலைமகள், குங்குமம், இதயம் பேசுகிறது என்று இவர் எழுதாத இதழ்களே இல்லை என்னுமளவிற்கு தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார். இவரது ‘காளையார்கோவில் ரதம்’ என்ற சிறுகதை பலராலும் பாராட்டப்பட்டது.

====== இதழியல் பங்களிப்புகள் ======
கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய  ‘குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992-, சாகித்ய அகாதமி விருது பெற்றது.
கோவி. மணிசேகரன், நாளடைவில் நடிப்பிலிருந்து முற்றிலும் விலகி எழுத்துத் துறையில்  ஈடுபட்டார். 1954-ல் ‘கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரnஇன் முதல் வரலாற்று நாவலான ‘அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து ‘கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். முருகு மற்றும் மங்களம் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.  

== விருதுகள் ==

* தமிழக அரசின் ராஜராஜன் விருது
* தமிழக அரசின் திரு.வி.க. விருது
* தமிழ் வளர்ச்சித்துறை விருது
* சாகித்ய அகாதமி விருது
* இலக்கிய சாம்ராட் விருது
* கலைஞர் விருது
* எம்.ஜி.ஆர். விருது
* வி.ஜி.பி. விருது
* தினத்தந்தி நிறுவனத்தின் சி. பா. ஆதித்தனார் விருது
* சாகித்தியச் சக்கரவர்த்தி விருது
* இலக்கிய ராட்சசன் விருது
* குழந்தை எழுத்தாளர் சங்க விருது
* காஞ்சி காமகோடி பீட விருது
* முகம் மாமணி விருது
* புதுவை வ.உ.சி. விருது
* ஞான சூரியன் விருது
* உலகப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
* வேலூர் தமிழிசைச் சங்கம் வழங்கிய இசைச்செல்வம் பட்டம்
* ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு
* லில்லி தேவசிகாமணிப் பரிசு
* புதினச் செம்மல்
* புதினப் பேராசான்
* புதினப் பேரரசு  <br /><br />

{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:23, 3 August 2022

கோவி. மணிசேகரன்

பொது வாசிப்புக்குரிய படைப்புகள் பலவற்றைத் தந்தவர் கோவி. மணிசேகரன்.(இயற்பெயர்: சுப்பிரமணியன்; பிறப்பு: மே 2, 1927; இறப்பு: நவம்பர் 18, 2021) நூற்றுக்கணக்கான வரலாற்று நாவல்களை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கோவி. மணிசேகரன், மே 2, 1927 அன்று, வேலூரை அடுத்த சல்லிவன்பேட்டையில், கோவிந்தராசன் - பட்டம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். குடும்பச் சூழலால் முறையான பள்ளிக் கல்வி இவருக்கு அமையவில்லை. சிலகாலம் அச்சுக்கூட உதவியாளராகப் பணியாற்றினார். பின் வேலூரில் பேராசிரியா் காரழகனாரிடம் தமிழ் பயின்றார். தனித்தேர்வராகத் தேர்வு எழுதி ‘மெட்ரிக்’ தேர்ச்சி பெற்றார். வேலூர் அண்ணல் தங்கோவிடம் இலக்கண, இலக்கியங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கா்நாடக இசையும், தமிழிசையும் பயின்றாா். ‘சங்கீத பூக்ஷணம்’ பட்டம் பெற்றார். இசை ஆர்வத்தால் சித்தூர் சுப்பிரமணியத்திடம் முறையாக இசை பயின்றார். உடன் பயின்றவர் மதுரை சோமு. ஓய்வு நேரத்தில் சம்ஸ்கிருதமும் பயின்று தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

1955-ல், சரஸ்வதியுடன் திருமணம் நிகழ்ந்தது. தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, இலக்கிய, வரலாற்று ஆர்வத்தால் ஆண்களுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்றும், பெண்களுக்கு பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்றும் பெயரிட்டார்.

கோவி. மணிசேகரன்

இலக்கிய வாழ்க்கை

கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்கள் கோவி. மணிசேகரனை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக ‘பொன்னியின் செல்வன்’ இவருள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்கியைப் போல சிறந்ததொரு வரலாற்று நாவலை எழுத வேண்டும் என்றும், மு.வ.வைப் போல் சிறந்த சமூக நாவல்களைப் படைக்க வேண்டும் என்றும் ஆர்வம் கொண்டார்.

கவிதைப் பங்களிப்புகள்

கோவி. மணிசேகரன், இலக்கிய ஆர்வத்தால் தொடக்கத்தில் கவிதைகளையே எழுதினார். இவரது முதல் கவிதை, 1945-ல், ‘தமிழ் நிலம்’ என்ற மாத இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களுக்குக் கவிதைகளை எழுதினார். கவிதைகள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது கவிதைகளைத் தொகுத்து ‘கற்பனாஞ்சலி’ என்னும் பெயரில் கவிதை நூலாக வெளியிட்டார். அதுவே அச்சில் வெளிவந்த இவரது முதல் நூல்.

நாடகப் பங்களிப்புகள்

அண்ணாவின் மேடைப்பேச்சாலும் நாடகங்களாலும் ஈர்க்கப்பட்ட கோவி. மணிசேகரன், நாடகங்கள் எழுத முற்பட்டார். 1947-ல், ‘எங்கள் நாடு’ என்ற நாளிதழ் மலரில் ‘புரட்சிப் புலவர் அம்பிகாபதி’ என்ற நாடகத்தை எழுதினார். தொடர்ந்து ‘கல்லறை, ‘பேசும் தெய்வம்’ என்ற இரு நாடகங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்தார். நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘சேகரன்’ அந்த நாடகம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதுவரை ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதி வந்தவர், தந்தையின் பெயரான கோவி. என்பதை இணைத்துக் கொண்டு ‘கோவி. மணிசேகரன்’  என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

இதழியல் பங்களிப்புகள்

கோவி. மணிசேகரன், நாளடைவில் நடிப்பிலிருந்து முற்றிலும் விலகி எழுத்துத் துறையில்  ஈடுபட்டார். 1954-ல் ‘கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரனின் முதல் வரலாற்று நாவலான ‘அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து ‘கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். முருகு மற்றும் மங்களம் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

கோவி. மணிசேகரனின் திரைப்படப் பங்களிப்புகள்
திரைப்படப் பங்களிப்புகள்

கோவி. மணிசேகரனுக்கு திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தன. 1958-ல் வெளியான ‘பூலோகரம்பை’ படத்தில் பாடல் எழுதினார். 1954-ம் ஆண்டு வெளியான ‘நல்லகாலம்’ படத்திற்கு வசனம் எழுதினார். இயக்குநர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். ‘அரங்கேற்றம்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

வயது வந்தும் பருவம் அடையாத பெண்ணையும் அதனால் அவளது குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மையமாக வைத்து, ‘தென்னங்கீற்று’ என்ற நாவலை எழுதியிருந்தார், கோவி. மணிசேகரன். அந்த நாவலுக்குத் திரைக்கதை, வசனம் எழுதி அதே ‘தென்னங்கீற்று’ என்ற பெயரிலேயே தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கினார். அது கன்னடத்தில் வெற்றி பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது. ஆனால், தமிழில் தோல்வி அடைந்தது. அடுத்த முயற்சியாக தனது கதையான ‘மனோரஞ்சிதம்’ என்பதைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். படம் பாதியிலேயே நின்று போனது. இவருடைய கதை ‘அகிலா’ என்பது ‘மீண்டும் பல்லவி’ என்ற பெயரில், மற்றொருவர் இயக்கத்தில் திரைப்படமானது.

அடுத்த முயற்சியாக தனது ‘யாகசாலை’ என்பதைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர். தடுத்தும் கேளாமல் அதனை இயக்கி வெளியிட்டார். படம் ஓடாததால் பெரும் நஷ்டமடைந்தார். அது முதல் திரைப்படத் துறையிலிருந்து விலகி மீண்டும் எழுத்து முயற்சியில் ஈடுபட்டார்.

தொலைக்காட்சிப் பங்களிப்புகள்

சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து இவர் தயாரித்த “ஊஞ்சல் ஊர்வலம்” என்ற தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘திரிசூலி’, ‘அக்னிப் பரீட்சை’ போன்ற தொடர்கள் வெளியாகி இவருக்குப் புகழ் சேர்த்தன.

நாவல்களும் சிறுகதைகளும்

வெகு ஜன இதழ்களில் கோவி. மணிசேகரனின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. குமுதம், விகடன், கல்கி, கலைமகள், குங்குமம், இதயம் பேசுகிறது என்று இவர் எழுதாத இதழ்களே இல்லை என்னுமளவிற்கு தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் எழுதினார். ’ஒரு தீபம் ஐந்து திரிகள்’ என்பது இவரது நூறாவது நாவல். ராஜராஜ சோழனின் வரலாற்றை கலைமகள் இதழில் ’ராஜநாகம்’ என்ற பெயரில் எழுதினார். இவரது ‘காளையார்கோவில் ரதம்’ என்ற சிறுகதை பலராலும் பாராட்டப்பட்டது.

கோவி. மணிசேகரன் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 10 கவிதை நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய ‘குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூல், 1992-, சாகித்ய அகாதமி விருது பெற்றது.

விருதுகள்

  • தமிழக அரசின் ராஜராஜன் விருது
  • தமிழக அரசின் திரு.வி.க. விருது
  • தமிழ் வளர்ச்சித்துறை விருது
  • சாகித்ய அகாதமி விருது
  • இலக்கிய சாம்ராட் விருது
  • கலைஞர் விருது
  • எம்.ஜி.ஆர். விருது
  • வி.ஜி.பி. விருது
  • தினத்தந்தி நிறுவனத்தின் சி. பா. ஆதித்தனார் விருது
  • சாகித்தியச் சக்கரவர்த்தி விருது
  • இலக்கிய ராட்சசன் விருது
  • குழந்தை எழுத்தாளர் சங்க விருது
  • காஞ்சி காமகோடி பீட விருது
  • முகம் மாமணி விருது
  • புதுவை வ.உ.சி. விருது
  • ஞான சூரியன் விருது
  • உலகப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
  • வேலூர் தமிழிசைச் சங்கம் வழங்கிய இசைச்செல்வம் பட்டம்
  • ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு
  • லில்லி தேவசிகாமணிப் பரிசு
  • புதினச் செம்மல்
  • புதினப் பேராசான்
  • புதினப் பேரரசு

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.