under review

சா.ஆ. அன்பானந்தன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|சா.ஆ. அன்பானந்தன் சா. ஆ. அன்பானந்தன் (பிப்ரவரி 5, 1939 - மே 20, 1980) ஒரு மலேசிய எழுத்தாளர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். 1966ல் பினாங்கில் உருவான மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப...")
 
Line 1: Line 1:
[[File:20220724 192315.jpg|thumb|சா.ஆ. அன்பானந்தன்]]

சா. ஆ. அன்பானந்தன் (பிப்ரவரி 5, 1939 - மே 20, 1980) ஒரு மலேசிய எழுத்தாளர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். 1966ல் பினாங்கில் உருவான [[மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை]]யில் முதல் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றினார். சமுதாய உணர்வுடன் இயங்கிய இவரது செயலூக்கத்தினால் மலேசியாவில் பல இளைஞர்கள் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் இணைந்தனர்.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
சா. அ. அன்பானந்தன் பிப்ரவரி 5, 1939ல் உலுசிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள கோலகுபுபாருவில் பிறந்தார். எல்.சி.இ வரை கல்வியைத் தொடர்ந்தார். 1963இல் இவர் தொலைப்பேசி இலாக்காவில் பணிக்குச் சேர்ந்தார். இவரது மனைவியின் பெயர் லட்சுமி. மகனின் பெயர் அன்புமணி.  

== கலை இலக்கிய வாழ்க்கை ==
== கலை இலக்கிய வாழ்க்கை ==
[[File:அன்பா 03.jpg|thumb|1972ல் தங்கப்பதக்கம் வென்ற எழுத்தாளராக]]

Line 14: Line 12:
[[File:அன்பா 02.jpg|thumb|நாடக நடிகராக]]

சா. ஆ. அன்பானந்தன் நாடகம் எழுதுவது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்தார். மேடைகளிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் நூற்றுக்கணக்கான நாடகங்களில் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.  

== பொதுவாழ்க்கை ==
== பொதுவாழ்க்கை ==
[[File:அன்பா 01.jpg|thumb|பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய நினைவு நாளில் - 1972]]

சீர்த்திருத்த சிந்தனை கொண்டிருந்த சா.ஆ. அன்பானந்தன் தொடக்கத்தில் செந்தூல் வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார். அகில மலாயாத் தமிழர் சங்கம், மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியக் கலைஞர் இயக்கம் போன்றவற்றில் உறுப்பியம் பெற்று செயலாற்றினார். 60களில் கோலாலம்பூரில் தமிழ் இளைஞர் மணிமன்றத்தை அமைத்து அதன் தலைமை பொறுப்பில் பணியாற்றினார்.  1966இல் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை அமைந்தபோது அதன் முதல் தேசியத் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 முதல் 1972 வரை ஆறு ஆண்டுகள் சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார். நாடு முழுவதும் இயங்கிய 182 மணிமன்றங்களை நிர்வகித்தார்.  

== மரணம் ==
== மரணம் ==
மே 26, 1980ல் தனது 39வது வயதில் மரணமடைந்தார்.  

== விருதுகள் ==
== விருதுகள் ==
மாமன்னரிடமிருந்து AMN, PPN விருதுகள் கிடைத்தன.  

== நூல்கள் ==
== நூல்கள் ==
====== கவிதை ======
====== கவிதை ======
* நயனங்கள் 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்

====== சிறுகதை ======
====== சிறுகதை ======
* காலத்தின் விளக்கு 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்

* அவளும் ஒரு தாய்தான் - 2009 - தங்கா தமிழர் சங்கம்

====== குறுநாவல் ======
====== குறுநாவல் ======
* மரவள்ளிக்கிழங்கு 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்

====== நாடகம் ======
====== நாடகம் ======
* திருப்பம் 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்

====== இசைப்பாடல் ======
====== இசைப்பாடல் ======
* மணிக்குயில் - 1977- சுங்கைவே தமிழ் இளைஞர் மணிமன்றம்

====== கட்டுரை ======
====== கட்டுரை ======
* நான் யார் - 1979 - சுங்கைவே தமிழ் இளைஞர் மணிமன்றம்

* புறப்படு தமிழனே - 2008
* புறப்படு தமிழனே - 2008
 
== உசாத்துணை ==
====== உசாத்துணை ======
 
* மலேசியாவில் தமிழ்த் தொண்டர்கள் (1987) - டாக்டர் ந.வீ. ஜெயராமன்

* உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018
* உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018
{{Ready for review}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:21, 24 July 2022

சா.ஆ. அன்பானந்தன்

சா. ஆ. அன்பானந்தன் (பிப்ரவரி 5, 1939 - மே 20, 1980) ஒரு மலேசிய எழுத்தாளர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். 1966ல் பினாங்கில் உருவான மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையில் முதல் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றினார். சமுதாய உணர்வுடன் இயங்கிய இவரது செயலூக்கத்தினால் மலேசியாவில் பல இளைஞர்கள் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் இணைந்தனர்.

தனி வாழ்க்கை

சா. அ. அன்பானந்தன் பிப்ரவரி 5, 1939ல் உலுசிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள கோலகுபுபாருவில் பிறந்தார். எல்.சி.இ வரை கல்வியைத் தொடர்ந்தார். 1963இல் இவர் தொலைப்பேசி இலாக்காவில் பணிக்குச் சேர்ந்தார். இவரது மனைவியின் பெயர் லட்சுமி. மகனின் பெயர் அன்புமணி.

கலை இலக்கிய வாழ்க்கை

1972ல் தங்கப்பதக்கம் வென்ற எழுத்தாளராக

சிங்கப்பூரில் வெளிவந்த 'தமிழ் முரசு' பத்திரிகையின் மாணவர் மணிமன்ற இதழில் 1958ல் இவரது முதல் கவிதையான 'மாணவனே'  பிரசுரமானது. தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், குறுநாவல் என பல்வேறு துறைகளில் பங்களித்தார். கோவலன், புரட்சிக்கனல், தமிழ்க்கதிர், மணிமுரசன் எனப் பல பெயர்களில் படைப்புகளை எழுதினார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் இவரது 'ஏணிக்கோடு' என்ற சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. 'மிங்குவான் மலேசியா' எனும் மலாய் இதழில் மொழிப்பெயர்க்கப்பட்டு இதே சிறுகதை வெளிவந்ததோடு சென்னை வானொலியின் தென்கிழக்காசிய ஒலிபரப்பிலும் படிக்கப்பெற்றது.  மேலும் இவரது 'ஓடும் பிள்ளை' எனும் சிறுகதை தமிழ் நேசன் பவுன் பரிசு திட்டத்தில் முதல் பரிசு பெற்றது.

ஜப்பானியர் ஆட்சி காலத்தில் மலேசியத் தமிழர்கள் பட்ட இன்னல்களைப் பேசும் 'மரவள்ளிகிழங்கு' எனும் குறுநாவலையும் சா. ஆ. அன்பானந்தன் எழுதியுள்ளார். அதுபோல நாடகத்துறையிலும் சா. ஆ. அன்பானந்தனின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருந்தது. 'புலிக் குகை', 'மணி ஓசை ' ஆகிய இவரது நாடகங்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது 'மணிக்குயில்' என்ற இசைப்பாடல் தொகுப்பும் 'நான் யார்' என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.  

நாடக நடிகராக

சா. ஆ. அன்பானந்தன் நாடகம் எழுதுவது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்தார். மேடைகளிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் நூற்றுக்கணக்கான நாடகங்களில் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

பொதுவாழ்க்கை

பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய நினைவு நாளில் - 1972

சீர்த்திருத்த சிந்தனை கொண்டிருந்த சா.ஆ. அன்பானந்தன் தொடக்கத்தில் செந்தூல் வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார். அகில மலாயாத் தமிழர் சங்கம், மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியக் கலைஞர் இயக்கம் போன்றவற்றில் உறுப்பியம் பெற்று செயலாற்றினார். 60களில் கோலாலம்பூரில் தமிழ் இளைஞர் மணிமன்றத்தை அமைத்து அதன் தலைமை பொறுப்பில் பணியாற்றினார்.  1966இல் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை அமைந்தபோது அதன் முதல் தேசியத் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 முதல் 1972 வரை ஆறு ஆண்டுகள் சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார். நாடு முழுவதும் இயங்கிய 182 மணிமன்றங்களை நிர்வகித்தார்.  

மரணம்

மே 26, 1980ல் தனது 39வது வயதில் மரணமடைந்தார்.

விருதுகள்

மாமன்னரிடமிருந்து AMN, PPN விருதுகள் கிடைத்தன.

நூல்கள்

கவிதை
  • நயனங்கள் 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
சிறுகதை
  • காலத்தின் விளக்கு 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
  • அவளும் ஒரு தாய்தான் - 2009 - தங்கா தமிழர் சங்கம்
குறுநாவல்
  • மரவள்ளிக்கிழங்கு 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
நாடகம்
  • திருப்பம் 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
இசைப்பாடல்
  • மணிக்குயில் - 1977- சுங்கைவே தமிழ் இளைஞர் மணிமன்றம்
கட்டுரை
  • நான் யார் - 1979 - சுங்கைவே தமிழ் இளைஞர் மணிமன்றம்
  • புறப்படு தமிழனே - 2008

உசாத்துணை

  • மலேசியாவில் தமிழ்த் தொண்டர்கள் (1987) - டாக்டர் ந.வீ. ஜெயராமன்
  • உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.