being created

சங்கரதாஸ் சுவாமிகள்: Difference between revisions

From Tamil Wiki
(சங்கரதாஸ் சுவாமிகள் - Initial draft started)
 
(படைப்புகள் - updated)
Line 7: Line 7:

தொடக்கக் கல்வியை தமிழ்ப் புலவராகிய தந்தை தாமோதரனாரிடம் பயின்றார். பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்க்கல்வி பயின்று சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றைக் கற்றார். வண்ணம் பாடுவதில் புலமை பெற்ற வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் பாடம் பயின்று  இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனையும் இசைப்பாடல்கள் இயற்றும் புலமையையும் பெற்றார்.

== தனிவாழ்க்கை ==
தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சில காலம் கணக்கராக வேலை பார்த்தார். இருபத்து நான்காவது வயதில் நாடக உலகில் நுழைந்தார். சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சிலகாலம் சங்கரதாஸ் ஆசிரியராக இருந்தார்
சாமி நாயுடு நாடகக் குழுவில் பணியாற்றும்பொழுது உலகியலில் வெறுப்புற்ற சங்கரதாஸ் முருகனின் அருள்வேண்டி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். இடுப்பில் மட்டும் உடையுடுத்தி யாத்திரை மேற்கொண்ட சங்கரதாசரை சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்று அறியப்படலானார். அப்பயணத்தின் இறுதியில் புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை என்பவருடன் சங்கர்தாசர் தங்கினார். அவர் சங்கரதாஸை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.
== படைப்புகள் ==
தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் சங்கரதாசர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பிரதிகளே கிடைத்துள்ளன.
{| class="wikitable"
|எண்
|நாடகம்
|ஆண்டு
|கிடைத்தவை
|-
|01
|அபிமன்யு சுந்தரி
|1921
|அபிமன்யு சுந்தரி
|-
|02
|அரிச்சந்திரா
|
|அரிச்சந்திரா
|-
|03
|அல்லி அர்ஜூனா
|
|அல்லி சரித்திரம்
|-
|04
|இரணியன்
|
|
|-
|05
|லங்கா தகனம்
|
|
|-
|06
|கர்வி பார்ஸ்
|
|கர்வி பார்ஸ்
|-
|07
|குலேபகாவலி
|
|
|-
|08
|கோவலன் சரித்திரம்
|1912
|கோவலன் சரித்திரம்
|-
|09
|சதி அனுசுயா
|
|ஸதி ஆநுசூயா
|-
|10
|சதிசுலோசனா
|
|
|-
|11
|சத்தியவான் சாவித்திரி
|
|சத்தியவான் சவித்திரி
|-
|12
|சாரங்கதரன்
|
|சாரங்கதரன்
|-
|13
|சிறுத்தொண்டர்
|
|
|-
|14
|சீமந்தனி
|
|சீமந்தினி நாடகம்
|-
|15
|சுலோசனா சதி
|
|சுலோசனா ஸதி
|-
|16
|ஞான சௌந்தரி சரித்திரம்
|
|ஞான சௌந்தரி சரித்திரம்
|-
|17
|நல்ல தங்காள்
|
|நல்லதங்காள்
|-
|18
|பவளக்கொடி
|
|பவளக்கொடி சரித்திரம்
|-
|19
|பாதுகாபட்டாபிசேகம்
|
|
|-
|20
|பார்வதி கல்யாணம்
|
|
|-
|21
|பிரகலாதன்
|
|பிரஹலாதன் சரித்திரம்
|-
|22
|பிரபுலிங்கலீலை
|
|
|-
|23
|மணிமேகலை
|
|
|-
|24
|மிருச்சகடி
|
|
|-
|25
|ரோமியோவும் ஜூலியத்தும்
|
|
|-
|26
|வள்ளித் திருமணம்
|
|வள்ளித்திருமணம்
|-
|27
|வீரஅபிமன்யு
|
|
|-
|28
|லவகுசா
|
|லவகுச நாடகம்
|-
|29
|லலிதாங்கி
|
|லலிதங்கி நாடகம்
|}
== மறைவு ==
1921 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சங்கரதாஸ் சுவாமிகளுக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கி வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது. இந்நிலையிலேயே 1922 நவம்பர் 13 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார்.  இவரது சமாதி புதுச்சேரியில் அமைந்துள்ளது.

Revision as of 00:06, 1 February 2022

Work in progress by Subhasrees

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories. சங்கரதாஸ் சுவாமிகள் (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) தமிழ் நாடக உலகில் முதன்மையானவர். “நாடகத் தமிழின் தலைமையாசிரியர்” என்று குறிப்பிடப்படுபவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வந்த நாடகக் கலை அரங்க மரபிற்கு ஏற்ப சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் உருபெற்றது. தமிழ் நாடக வரலாற்றில், நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றிய நாடக ஆசிரியர், ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப் பயிற்சி அளித்த நாடகப் பயிற்சியாளர் என்ற இரண்டு கூறுகளில் இவரது முக்கிய பங்களிப்பு இருக்கிறது.

பிறப்பு, இளமை

சங்கரதாஸ் சுவாமிகள் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் 1867 செப்டம்பர் 7-ஆம் தேதி(ஆவணி 22) பிறந்தார். தந்தை இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட தாமோதரக் கணக்கப் பிள்ளை, தாய் பேச்சியம்மாள்.  இவரது இயற்பெயர் சங்கரன்.

தொடக்கக் கல்வியை தமிழ்ப் புலவராகிய தந்தை தாமோதரனாரிடம் பயின்றார். பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்க்கல்வி பயின்று சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றைக் கற்றார். வண்ணம் பாடுவதில் புலமை பெற்ற வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் பாடம் பயின்று  இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனையும் இசைப்பாடல்கள் இயற்றும் புலமையையும் பெற்றார்.

தனிவாழ்க்கை

தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சில காலம் கணக்கராக வேலை பார்த்தார். இருபத்து நான்காவது வயதில் நாடக உலகில் நுழைந்தார். சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சிலகாலம் சங்கரதாஸ் ஆசிரியராக இருந்தார்

சாமி நாயுடு நாடகக் குழுவில் பணியாற்றும்பொழுது உலகியலில் வெறுப்புற்ற சங்கரதாஸ் முருகனின் அருள்வேண்டி தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். இடுப்பில் மட்டும் உடையுடுத்தி யாத்திரை மேற்கொண்ட சங்கரதாசரை சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்று அறியப்படலானார். அப்பயணத்தின் இறுதியில் புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை என்பவருடன் சங்கர்தாசர் தங்கினார். அவர் சங்கரதாஸை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.

படைப்புகள்

தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் சங்கரதாசர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பிரதிகளே கிடைத்துள்ளன.

எண் நாடகம் ஆண்டு கிடைத்தவை
01 அபிமன்யு சுந்தரி 1921 அபிமன்யு சுந்தரி
02 அரிச்சந்திரா அரிச்சந்திரா
03 அல்லி அர்ஜூனா அல்லி சரித்திரம்
04 இரணியன்
05 லங்கா தகனம்
06 கர்வி பார்ஸ் கர்வி பார்ஸ்
07 குலேபகாவலி
08 கோவலன் சரித்திரம் 1912 கோவலன் சரித்திரம்
09 சதி அனுசுயா ஸதி ஆநுசூயா
10 சதிசுலோசனா
11 சத்தியவான் சாவித்திரி சத்தியவான் சவித்திரி
12 சாரங்கதரன் சாரங்கதரன்
13 சிறுத்தொண்டர்
14 சீமந்தனி சீமந்தினி நாடகம்
15 சுலோசனா சதி சுலோசனா ஸதி
16 ஞான சௌந்தரி சரித்திரம் ஞான சௌந்தரி சரித்திரம்
17 நல்ல தங்காள் நல்லதங்காள்
18 பவளக்கொடி பவளக்கொடி சரித்திரம்
19 பாதுகாபட்டாபிசேகம்
20 பார்வதி கல்யாணம்
21 பிரகலாதன் பிரஹலாதன் சரித்திரம்
22 பிரபுலிங்கலீலை
23 மணிமேகலை
24 மிருச்சகடி
25 ரோமியோவும் ஜூலியத்தும்
26 வள்ளித் திருமணம் வள்ளித்திருமணம்
27 வீரஅபிமன்யு
28 லவகுசா லவகுச நாடகம்
29 லலிதாங்கி லலிதங்கி நாடகம்

மறைவு