வேணாட்டு அடிகள்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 19: | Line 19: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|01-Jan-2025, 18:14:58 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 01:04, 2 January 2025
வேணாட்டு அடிகள் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் ஆறாம் திருவிசைப்பாவை (20-வது பதிகம்) இயற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
வேணாட்டடிகளின் இயற்பெயர் மற்றும் வாழ்வு குறித்து அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் வேணாடு - கொடுந்தமிழ்நாடு (கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் உள்ள திருவிதாங்கூர்ப் பகுதியைச்) சேர்ந்தவர் என்பதால், அவர் வேணாட்டடிகள் என்று அழைக்கப்படுகிறார். அவர் அரச குடும்பத்தில் பிறந்து பின்பு துறவு மேற்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
வேணாட்டடிகள் தில்லை சிவபெருமான் மீது பாடிய பதிகம் ஒன்று திருவிசைப்பாவின் ஆறாவது திருமுறையாக அமைந்துள்ளது. பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் 'திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே!' என முடிகிறது.
பாடல் நடை
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே!
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 18:14:58 IST