under review

சிவாக்கிர யோகிகள் பரம்பரை: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
Line 30: Line 30:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு
* மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:38, 15 November 2022

சூரியனார்கோயில் ஆதீனம்

சிவாக்ர யோகள் பரம்பரை (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு முதல்) சைவசித்தாந்த மரபின் இரு துறவியர் மரபுகளில் ஒன்று. சிவாக்ர யோகிகளால் உருவாக்கப்பட்டது. சூரியனார் கோயில் என்னும் ஊரில் அமைந்தது. சிவாக்ர மடம் என்றும் சூரியனார் கோயில் மடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு

வரலாறு

சைவ சித்தாந்தப் பரம்பரைகள் இரண்டு உண்டு. தருமபுர ஆதீன பரம்பரை. மற்றொன்று சிவாக்கிர யோகிகள் பரம்பரை. சிவாக்கிர யோகிகள் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிவக்கொழுந்து சிவாச்சாரியார் என இயற்பெயர் கொண்டவர். அவருடைய மரபினர் சிவாக்ர யோகிகள் பரம்பரை என அழைக்கப்படுகின்றனர்.

வேறுபெயர்கள்

  • இந்தப் பரம்பரைக்கு வழங்கும் வேறு பெயர்கள்:
  • திருக்கயிலாய பரம்பரை - தரும்புர ஆதீனப் பரம்பரையும் இப்பெயரால் குறிப்பிடப்படும்.
  • கந்தனிடம் உபதேசம் பெற்றதாக தொன்மம் இருப்பதனால் 'கந்த பரம்பரை'
  • வாமதேவ முனிவர் மூலம் நிலவுலகில் தோன்றியதாக தொன்மம் இருப்பதனால் வாமதேவ பரம்பரை
  • சதாசிவ பரம்பரை - சிவாக்ர யோகியின் ஆசிரியர் சதாசிவ சிவாச்சாரியாரில் இருந்து பரம்பரை கணக்கிடப்படுவதனால் சதாசிவப் பரம்பரை
  • சூரியனார் கோயில் மையம் என்பதனால் சூரியனார் கோயில் ஆதீன பரம்பரை

ஆதீனகர்த்தர்கள் வரிசை

  1. ஸ்ரீ கண்ட பரமசிவம்
  2. கந்த சுவாமி
  3. வாமதேவ முனிவர்
  4. நீலகண்ட சிவாசாரியர்
  5. விசுவேசுர சிவாசாரியர்
  6. சதாசிவ சிவாசாரியர் வடமொழியில் சிவஞானபோத விருத்தி எழுதியவர் (1450-1475)
  7. சிவமார்க்கப் பிரகாச சிவாசாரியர் (1475-1525)
  8. சிவக்கொழுந்து தேசிகர் (சிவாக்கிர யோகிகள்), ஆதீனம் நிறுவியவர், (1500-1550)
  9. வீழி சிவாக்கிர யோகிகள், பெரும்பெருஞ் சாத்திரங்கள் செய்தவர், (1550-1575)
  10. நந்தி சிவாக்கிர யோகிகள், சிவநெறிப் பிரகாச உரை, சிவப்பிரகாச உரை ஆகிய உரைநூல்களை இயற்றிவர் (1560-1600)
  11. சிவக்கொழுந்து தேசிகர் (1600-1640)
  12. சொக்கலிங்க தேசிகர், இவர் திருமாந்துறைப் பண்டார சந்நிதி (1640-1680)
  13. (இடையில் சில ஆண்டுகளில் ஏழு ஆசாரியர் பரம்பரைத் தலைமையை ஏற்றிருந்தனர். இவர்களில் அம்பலவாண தேசிகர் என்பவர் மட்டும் கேரளப் பிராமணர். ஏனையோர் அனைவரும் வேளாளர் குலத்தினர்) (1680-1688)
  14. முத்துக்குமார தேசிகர் (1888-1918)
  15. மீனாட்சி சுந்தர தேசிகர் - இவர் இறைஞான போதம் முதலான நூல்களை இயற்றியவர்.1973-ல் சமாதி அடைந்தவர் (1918-1947)
  16. தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள்
  17. சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் (27-வது பட்டம்)

உசாத்துணை

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு


✅Finalised Page