under review

கி.ச. திலீபன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Tag: Reverted
(Reviewed by Je)
Tag: Reverted
Line 1: Line 1:
{{being created}}[[File:Ki.sa.jpg|thumb|கி.ச.திலீபன்]]
{{finalised}}[[File:Ki.sa.jpg|thumb|கி.ச.திலீபன்]]
கி.ச. திலீபன் ( 17-07–1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். ஓலைச்சுவடி என்னும் இணைய இதழின் ஆசிரியர்.
கி.ச. திலீபன் ( 17-07–1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். ஓலைச்சுவடி என்னும் இணைய இதழின் ஆசிரியர்.
   
   

Revision as of 23:32, 1 May 2022


✅Finalised Page

கி.ச.திலீபன்

கி.ச. திலீபன் ( 17-07–1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். ஓலைச்சுவடி என்னும் இணைய இதழின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

கி.ச.திலீபன் ஈரோடு மாவட்டத்தில் தூக்கநாயக்கன் பாளையம் என்னும் ஊரில் 17-07–1993 அன்று சகாதேவன், கிருஷ்ணவேணி இணையருக்கு பிறந்தார்.

பங்களாபுதூர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார்.

தனிவாழ்க்கை

கி.ச.திலீபனுக்கு இன்னும் மணமாகவில்லை. இதழாளராக பணியாற்றுகிறார்

படைப்புலகம்

2016ல் வெளியான இன்னும் மிச்சமிருக்கிறது என்னும் சிறுகதை இவருடைய முதல் ஆக்கம். 2019ல் இவரது முதல் சிறுகதை தொகுதி 'இன்னும் மிச்சமிருக்கிறது' என்ற பெயரிலேயே வெளியானது. வாசகசாலை பதிப்பகம் இதை வெளியிட்டது

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் ஆல்பெர் காம்யூ, அசோகமித்திரன் என்று கூறுகிறார்

பங்களிப்பு

பள்ளிக்காலத்தில் மார்க்சிய லெனினிய அமைப்பில் ஈடுபாடு கொண்டிருந்த கி.ச. திலீபன் அதன்பின் அரசியலில் ஈடுபடவில்லை.

இணைய இதழ்

2016 ஆம் ஆண்டு முதல் ஓலைச்சுவடி என்னும் கலை இலக்கிய சூழலிய இதழை வெளியிட்டார். ஆரம்பத்தில் அச்சு இதழாக இருந்தது. 2019ம் ஆண்டிலிருந்து இணைய இதழாக மாறியது. இதுவரையில் 11 இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

வெளி இணைப்புகள்