under review

செங்குந்தவேற்பதிகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
Line 54: Line 54:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|11-Dec-2024, 09:55:25 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 01:04, 12 December 2024

செங்குந்தவேற்பதிகம் (பொ.யு. பனிரெண்டாம் நூற்றாண்டு), வீரபாகுத் தேவர் கையில் உள்ள ’செங்குந்தம்’ என்னும் வேல் செய்த செயல்களையும் பெருமைகளையும் கூறும் நூல். இந்நூலை இயற்றியவர் குமாரசாமி முதலியார்.

வெளியீடு

செங்குந்தவேற்பதிகம், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூலை, 1926-ல், காஞ்சி ஸ்ரீ நாகலிங்க முனிவர் பதிப்பித்தார். திருவாரூர் செங்குந்த மகாஜன சங்க நிறுவனர் தி.க.ச. சபாபதி முதலியார் இந்நூலை வெளியிட்டார். சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் சென்னை சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது. இதன் ஆசிரியர், குமாரசாமி முதலியார்.

நூல் அமைப்பு

செங்குந்த வேற்பதிகம் நூலில் ஆசிரிய விருத்தத்தில் அமைந்த பத்துப் பாடல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ‘தூய செங்குந்த வேலே’ என்ற வரி இடம்பெற்றது.

உள்ளடக்கம்

செங்குந்த வேற்பதிகம், வீரபாகுத் தேவர் கையில் உள்ள ’செங்குந்தம்’ என்னும் வேல் செய்த அற்புதங்களையும், வேலின் பெருமைகளையும் வீரத்தையும் சிறப்பித்துக் கூறும் நூல்.

’செங்குந்தம் என்றால் ’இரத்தத்தால் சிவந்த ஈட்டி அல்லது கூரான ஆயுதம்’ என்பது பொருள்.

பாடல்கள்

சங்கரி சுமங்கலை யிமங்கிரி தருங்குமரி
தங்கமல நின்றகரமாம்
சத்திர முத்தியி லுதித்தெமை யிருத்துமரு
டாயகி வராகிநிமலி
இங்குலி கவங்கநிற சங்கர னிடங்குலவி
யிவ்வுலக மெவ்வுலகமும்
ஈன்றகம லாட்சிகா மாட்சிபொற் காற்சிலம்
பிந்துமணி யொளியில்வெளியாய்ச்
செங்கன னிறங்குலவு மங்குலெழு மின்கொடி
திரண்டுரு வெழுந்தவகை போல்
சித்ரநவ ரத்னமணி முத்தணியு மிட்டகன
தேவவுரு வாயுதிதராத்
துங்கநவ மங்கைய ரிடங்குமர ராய்வந்த
சுத்தநவ வீரரங்கை
சுந்தர சுகந்தவேல் கந்தனுக் கிளைய வேல்
தூயசெங் குந்தவேலே.


வஞ்சனையு லோபமுட னெஞ்சக் களங்கமுறு
வட்காரை யடுகுந்தவேல்
வாரண முகங்கொண்ட தாருக நெடுங்கிளைய
வாரியை நுகர்குந்தவேல்
பஞ்சா க்ஷரம்பூதி சாதன மிலாதவெம்
பாவிகளை யடுகுந்தவேல்
பன்னிரு புயாசலத் தண்ணலிட மென்றும்
பராக்குரைத் திடுகுந்தவேல்
மஞ்சுலவு மேருகிரி குலுங்கிடப் பாய்ந்தே
மகேந்திரம் புகுகுந்தவேல்
மாளா வரங்கொண்ட சூர்முனம் வெற்றிவேல்
வாழியென வருகுந்தவேல்
துஞ்சுவெம் புலியென்ன பகைவருட லங்கீறு
சுத்தநவ வீரரங்கை
சுந்தர சுகந்தவேல் கந்தனுக் கிளையவேல்
தூயசெங் குந்தவேலே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Dec-2024, 09:55:25 IST