ப.மொ. தைரிய நாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ப.மொ. தைரிய நாதன் (ஜூன் 5, 1949) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். குரல் வளத்திற்காகவும், நடிப்புத்திறனுக்காகவும் ரசிக்கப்பட்டார். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாக...")
 
Line 4: Line 4:
இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பிறந்தார். பன்னிரெண்டு வயதிலிருந்து இசை நாடகங்களில் பங்கேற்றார். இவரது கலைப்பணியில் இவரது குடும்பமே இணைந்து செயல்பட்டது. தைரிய நாதனின் குடும்பத்தவர்களில் வயது வந்த மூன்று ஆண் பிள்ளைகளும், வயது வந்த பெண் பிள்ளையும் சிறந்த நாட்டுக்கூத்து, இசைநாடக, நாடகக்கலைஞராக வளர்ந்தார்கள். கல்வித்துறையிலும் படித்துக்கொண்டு நாடகத்துறையிலும் இவர்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.  

== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
தைரியநாதன் எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர் . சுன்னாகம் எம். கோபாலரத்தினம் சங்கீத ஆசிரியரிடம், சங்கீதம் சுற்று, இசைநாடகங்கள் பலவற்றில் நடித்தார். சுன்னாகம் இளந்தென்றல் மன்றத்தில் பிரதான பாடகராகவும் நடிகராகவும் புகழ்பெற்ற தைரியநாதன் 1963இல் பிதாமரியசேவியர் அடிகளாரின் சீடன் வழியில் ஆதாம் ஏவாள் நாடகத்தில் 'ஏவாள்' பெண் பாத்திரம் ஏற்று நடித்தார். 1969இல் நடிகமணி வி.வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் சிறந்த நடிகையாகத் தேர்ந்து எடுத்து தொடர்ந்து பெண் பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகளின் நவரச நாடகங்களை நடிகமணி வி. வைரமுத்துவுடன் இணைந்து பெரும்பாலும் பெண் பாத்திரங்களை ஏற்று நடித்தார். 1997, 1998ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள இங்கிலாந்து, பாரிஸ், ஜெர்மணி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய கலாமன்றத்தால் மேடையேற்றப்பட்ட வடலிக்கூத்தரின் நாடகங்களில் ஜெனோவா(அரசன்), சத்தியவேள்வி(அரிச்சந்திரன்), சகுந்தலை(துஷ்யந்தன்) நடித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நாடக ஒலிபரப்பில் ஞானசௌந்தரி, பக்தநந்தனார், அரிச்சந்திரா நாடகங்கள் இடம் பெற்றன. திருமறைக்கலாமன்றத்தினூடாக ரூபவாகினியில் ஞானசௌந்தரி, ஏரோதன் நாடகங்களில் நடித்தார்.

===== சீடர்கள் =====
 
== விருதுகள் ==
== விருதுகள் ==
* 1969இல் நடிகமணி வி.வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் சிறந்த நடிகையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

Revision as of 18:05, 16 June 2022

ப.மொ. தைரிய நாதன் (ஜூன் 5, 1949) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். குரல் வளத்திற்காகவும், நடிப்புத்திறனுக்காகவும் ரசிக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பிறந்தார். பன்னிரெண்டு வயதிலிருந்து இசை நாடகங்களில் பங்கேற்றார். இவரது கலைப்பணியில் இவரது குடும்பமே இணைந்து செயல்பட்டது. தைரிய நாதனின் குடும்பத்தவர்களில் வயது வந்த மூன்று ஆண் பிள்ளைகளும், வயது வந்த பெண் பிள்ளையும் சிறந்த நாட்டுக்கூத்து, இசைநாடக, நாடகக்கலைஞராக வளர்ந்தார்கள். கல்வித்துறையிலும் படித்துக்கொண்டு நாடகத்துறையிலும் இவர்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

கலை வாழ்க்கை

தைரியநாதன் எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர் . சுன்னாகம் எம். கோபாலரத்தினம் சங்கீத ஆசிரியரிடம், சங்கீதம் சுற்று, இசைநாடகங்கள் பலவற்றில் நடித்தார். சுன்னாகம் இளந்தென்றல் மன்றத்தில் பிரதான பாடகராகவும் நடிகராகவும் புகழ்பெற்ற தைரியநாதன் 1963இல் பிதாமரியசேவியர் அடிகளாரின் சீடன் வழியில் ஆதாம் ஏவாள் நாடகத்தில் 'ஏவாள்' பெண் பாத்திரம் ஏற்று நடித்தார். 1969இல் நடிகமணி வி.வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் சிறந்த நடிகையாகத் தேர்ந்து எடுத்து தொடர்ந்து பெண் பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகளின் நவரச நாடகங்களை நடிகமணி வி. வைரமுத்துவுடன் இணைந்து பெரும்பாலும் பெண் பாத்திரங்களை ஏற்று நடித்தார். 1997, 1998ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள இங்கிலாந்து, பாரிஸ், ஜெர்மணி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய கலாமன்றத்தால் மேடையேற்றப்பட்ட வடலிக்கூத்தரின் நாடகங்களில் ஜெனோவா(அரசன்), சத்தியவேள்வி(அரிச்சந்திரன்), சகுந்தலை(துஷ்யந்தன்) நடித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நாடக ஒலிபரப்பில் ஞானசௌந்தரி, பக்தநந்தனார், அரிச்சந்திரா நாடகங்கள் இடம் பெற்றன. திருமறைக்கலாமன்றத்தினூடாக ரூபவாகினியில் ஞானசௌந்தரி, ஏரோதன் நாடகங்களில் நடித்தார்.

விருதுகள்

  • 1969இல் நடிகமணி வி.வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் சிறந்த நடிகையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அரங்கேற்றிய கூத்துகள்

நடிகமணி வி.வி. வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்
  • அரிச்சந்திரா - சந்திரமதி
  • பூதத்தம்பி - அழகவல்லி
  • நல்லதங்காள் - அலங்காரி
  • ஞானசௌந்தரி - லேனாள்
  • நந்தனார் - பெரியகிழவர்
  • பவளக்கொடி - பவளக்கொடி
  • சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி
  • சாரங்கதாரா - சித்திராங்கி
  • அல்லி அருச்சுனா - அல்லி
  • கோவலன் - கண்ணகி

உசாத்துணை