யாத்திரி: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 21: Line 21:
   "மனித வாழ்க்கைக்கு பயன்தராத எந்த எழுத்துமே இலக்கியம் ஆகாது. அவ்வகையில் பார்த்தால் நான் எழுதிக் கொண்டிருப்பது இலக்கியம்தான், நான் எழுதுவது பெரிதாக புத்தக வாசிப்பில்லாத பெரும்பான்மையினருக்கு. இவர்கள்தான் என்னுடைய வாசகர்கள் என்று ஏழு வருடம் முன்பு நான் திட்டமிட்டேன். இன்று நான் வந்திருக்கும் இந்த இடம் தற்செயல் அல்ல திட்டமிடல். மனிதர்கள் பற்றிய அறிவை, முன்முடிவின்றி மனிதர்களை அணுகும் பாங்கை, துரோகமென்று பிதற்றும் பெண்ணின் மீதான காழ்ப்பை, காழ்ப்பின் காரணத்தை, வாழ்வின் அபத்தங்களை, புரிதலின்மையை,  ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தேன். இவர்களுக்கு என் எழுத்து நடை பழகிவிட்டது அதே எழுத்து நடையில் நானொரு புரிதலைச் சொல்லும்போது அது அவர்கள் மனதில் சென்று விதையாய் விழும். கண்டிப்பாக உடனே விருட்சம் ஆகாது. ஆனால் யோசிப்பதற்கான திரியை ஏற்றி வைக்க வேண்டும் அல்லவா. அதைத்தான் செய்தேன். செய்து கொண்டிருக்கிறேன்"

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://youtu.be/obBGrSp3v3U காதலே கதிமோட்சம் யாத்திரி ஏற்புரை]

* <nowiki>https://www.youtube.com/watch?v=obBGrSp3v3U</nowiki> - காதலே கதிமோட்சம் யாத்திரி ஏற்புரை
* [https://www.youtube.com/watch?v=1bXMulJ9u10 அன்பின் நிமித்தங்கள் யாத்திரி ஏற்புரை]
 
* <nowiki>https://www.youtube.com/watch?v=1bXMulJ9u10</nowiki> - அன்பின் நிமித்தங்கள் யாத்திரி ஏற்புரை

Revision as of 19:00, 6 June 2022

Ready for Review

யாத்திரி ( பிறப்பு மார்ச் 16, 1986) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். இயற் பெயர்  த.கார்த்திக்.

பிறப்பு / இளமை

யாத்திரியின் இயற்பெயர் த.கார்த்திக். யாத்திரி,  மார்ச் 16, 1986 அன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர்-கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பிறந்தார். தந்தை தங்கையா, தாய் கோட்டைக்கரசி. கிருஷ்ணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். புகைப்படக் கலைஞராக தொழில் புரிகிறார்.

யாத்திரி.jpg

யாத்திரி 2011- ஆம்  ஆண்டு முத்துமாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். மனைவி தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு யாழினி, செழியன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

எழுத்து வாழ்க்கை

யாத்திரி முகநூலில் 2010-ஆம் ஆண்டிலிருந்து கவிதைகள் பத்திகள் கட்டுரைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு "காதலே கதிமோட்சம்" 2019-ஆம்  ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்தது. இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளும். ஒரு நாவலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்;

கவிதைத் தொகுப்புகள்
  • காதலே கதிமோட்சம் ( 2019 )
  • மனவெளியில் காதல் பலரூபம் ( 2020 )  
  • அன்பின் நிமித்தங்கள் ( 2021 )
நாவல்:-
  • பெருந்தக்க யாவுள ( 2022 )

நான்கு நூல்களையும்  வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இலக்கிய இடம்:-

யாத்திரியிடம் அவரது இலக்கிய இடம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்;

உசாத்துணை