பிரெண்டா பெக்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:Brenda-Beck-weblead.jpg|thumb|பிரெண்டா]]

[[File:Brenda.beck.jpg|thumb|பிரெண்டா]]
பிரெண்டா பெக் ( Dr. Brenda E.F. Beck ) (1940),கனடாநாட்டு மானுடவியலாளர். தமிழ்நாட்டில் கொங்கு வட்டார நாட்டார் பண்பாட்டை ஆய்வுசெய்தவர். அண்ணன்மார் சாமி கதை என்னும் நாட்டார் காவியத்தை முழுமையாக பதிவுசெய்து ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தவர். எட்டு நூல்களும் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதி தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைகளை உலக அளவில் அறிமுகம் செய்தவர். கனடாவில் தமிழ் பண்பாட்டுச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுபவர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 8: Line 9:
பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதையை ஒலிப்பதிவு செய்தார். 18 இரவுகளிலாக மொத்தம் 38 மணிநேரம் இந்த ஒலிப்பதிவு நீடித்தது. பிரெண்டா இருபதாயிரம் பக்கங்கள் அளவுக்கு நாட்டார் கதைகளை கொங்கு வட்டாரத்தில் இருந்து சேகரித்தார். “அற்புதமான அனுபவம். நான் பதிவுசெய்துகொண்டே இருந்தேன். டேப் தீர்ந்தபோது நான் சேகரித்திருந்த வட அமெரிக்க நாட்டார் பாடல்களை அழித்து அவற்றின்மேல் பதிவுசெய்தேன்’ என்று பிரெண்டா கூறினார்

1992ல் பிரெண்டா கனடா நாட்டு இந்தியரும் ஓவியருமான ரவிச்சந்திரன் ஆறுமுகம் உதவியுடன் அண்ணன்மார் சுவாமி கதையை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஓவியங்களுடன் வெளியிட்டார். பதிமூன்று மணி நேரம் ஓடக்கூடியதும் இருபத்தாறு பகுதிகள் கொண்டதுமான ஆங்கிலக் காணொளி தொடர் ஒன்றை அண்ணன்மார் சுவாமி கதையை ஒட்டி உருவாக்கினார். அண்ணன்மார் சுவாமி கதையை ஆங்கிலத்தில் ஓவியநாவல் (கிராஃபிக் நாவல்) வடிவிலும் வெளியிட்டார். ( Elder Brothers' Story: An Oral Epic of Tamil, The Legend of Ponnivala or Ponnar Shankar.) அவை சென்னை ஆசியவியல் ஆய்வுக் கழகத்தால் வெளியிடப்பட்டன ( Institute of Asian Studies). அவை இப்போது மின்னூல் வழிவில் கிடைக்கின்றன

== தமிழ்ப்பணிகள் ==
== தமிழ்ப்பணிகள் ==
2016ல் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் இணைய மென்பொருள் ஒன்றை பிரெண்டா உருவாக்கினார். அவ்வாண்டு பிரெண்டா 10,000 டாலர்களை டொரொண்டோ தமிழ் கல்வி மையத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

2018 பிரெண்டா பிரென்டா பெக் தமிழ் நிரலி உருவாக்க நிதி, ( Brenda Beck Tamil Programming Fund ) பிரெண்டா பெக் தமிழ் எண்ம நிதி (Brenda Beck Tamil Digital Fund) ஆகியவற்றை உருவாக்கினார். தமிழ் நூல்களை மின்வடிவ ஆவணங்களாக்கும் பணிகளுக்கு நிதியுதவி செய்யும்பொருட்டு இவை உருவாக்கப்பட்டன. பிரெண்டா 327,000 டாலர் பணத்தை இந்த நிதிக்காக தனது கொடையாக அளித்தார்

2018 செப்டெம்பர் ஒன்றாம் தேதியும் இரண்டாம் தேதியும் பிரெண்டா கொங்கு குடும்பக் கூடுகை ஒன்றை விர்ஜீனியாவில் மனஸாஸ் நகரில் கொங்கு கூட்டமைப்பு (Kongu Association in Manassas, Virginia) சார்பில் ஒருங்கிணைத்தார்

பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதை குறித்த மானுடவியல் மற்றும் நாட்டாரியல் ஆய்வுரைகளை அளிக்கிறார். கனடாவின் தமிழ்க்கல்விச் செயல்பாடுகளை ஒங்கிணைக்கிறார். தற்போது பிரெண்டா சோஃபியா ஹில்டன் நிறுவனம் (Sophia Hilton Foundation of Canada) என்னும் தொண்டு நிறுவனத்தை வழிநடத்துகிறார். கதை சொல்லல் வழியாக கற்றலை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது இந்த அமைப்பு.

2019ல் பிரெண்டாவின் உதவியுடன் டொரொண்டோ பல்கலை ஸ்கார்பரோ நகரில் முதல் தமிழ் பண்பாட்டு மாதக் கொண்டாட்டத்தை நடத்தியது.(Tamil Heritage Month celebration) வில்லுப்பாட்டு போன்ற தமிழக நாட்டார் கலைகள் அரங்கேற்றப்பட்டன.

== நூல்கள் ==
== நூல்கள் ==
பிரெண்டா ''Anthropologica, Current Anthropology, Journal of South Asian Literature, The Journal of Asian Studies,'' and ''Western Folklore''. போன்ற ஆய்விதழ்களில் எழுதியிருக்கிறார்.

* ''Body Imagery of the Tamil Proverbs of South India''

* ''The Metaphor as a Mediator Between Semantic and Analogic Modes of Thought''

Line 30: Line 28:
* ''The Telling of a South Indian Folk Epic''

* ''A Praise-Poem for Murugan''.
* ''A Praise-Poem for Murugan''.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://ora.ox.ac.uk/objects/uuid:3ed2da51-0b27-4522-960e-d73a73b7d6af Social and conceptual order in Koṅku]

* [https://www.thehindu.com/society/history-and-culture/brenda-beck-nahla-nainar-annanmar-kadhai-ponnar-shankar-tamil-history/article24473334.ece When Brenda became Brindha]

Revision as of 09:50, 7 May 2022

பிரெண்டா
பிரெண்டா

பிரெண்டா பெக் ( Dr. Brenda E.F. Beck ) (1940),கனடாநாட்டு மானுடவியலாளர். தமிழ்நாட்டில் கொங்கு வட்டார நாட்டார் பண்பாட்டை ஆய்வுசெய்தவர். அண்ணன்மார் சாமி கதை என்னும் நாட்டார் காவியத்தை முழுமையாக பதிவுசெய்து ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தவர். எட்டு நூல்களும் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதி தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைகளை உலக அளவில் அறிமுகம் செய்தவர். கனடாவில் தமிழ் பண்பாட்டுச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுபவர்.

பிறப்பு, கல்வி

பிரெண்டா கனடாவில் 1940ல் பிறந்தார். அவருக்கு 14 வயதிருக்கையில் லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரில் பணியாற்றிய அவருடைய தந்தை குடும்பத்துடன் சிரியா, லெபனான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணமாக அழைத்துச்சென்றார். . திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு செய்த ஒரு பயணம் தமிழ்ப்பண்பாட்டுடன் அவருடைய முதல் அறிமுகம். 1964ல் பிரெண்டா ஆக்ஸ்ஃபோர்ட் சாமர்வெல் கல்லூரி (Somerville College, Oxford)யில் மானுடவியலில் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்தார். கோவை அருகே ஓலப்பாயம் என்னும் ஊரில் தங்கி தமிழ் பயின்றார். தமிழ்ப்பெண்கள் போல நகைகளும் புடவையும் அணிந்து தமிழ் கிராமத்தின் ஓர் உறுப்பினராகவே ஆனார்.

அண்ணன்மார் சுவாமி கதை

பிரெண்டா 1965ல் கிராமத்துப் பாடகர்கள் அண்ணன்மார் சுவாமி கதையை பாடுவதை கேட்டார்.பொன்னர் -சங்கர் கதை என இன்று அறியப்படும் அந்த நாட்டார்க்காவியம் அப்போது பலர் சேர்ந்து பலநாட்கள் தொடர்ச்சியாக பாடுவதாக இருந்தது. பொது பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்படும் அண்ணன்மார் சுவாமி கதை பாட்டு, நடனம், கூத்து என பலவடிவங்களில் கொங்கு கிராமங்களில் அவர்களின் குலக்கதையாக ஓர் இதிகாச தகுதியுடன் புழங்கியது

பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதையை ஒலிப்பதிவு செய்தார். 18 இரவுகளிலாக மொத்தம் 38 மணிநேரம் இந்த ஒலிப்பதிவு நீடித்தது. பிரெண்டா இருபதாயிரம் பக்கங்கள் அளவுக்கு நாட்டார் கதைகளை கொங்கு வட்டாரத்தில் இருந்து சேகரித்தார். “அற்புதமான அனுபவம். நான் பதிவுசெய்துகொண்டே இருந்தேன். டேப் தீர்ந்தபோது நான் சேகரித்திருந்த வட அமெரிக்க நாட்டார் பாடல்களை அழித்து அவற்றின்மேல் பதிவுசெய்தேன்’ என்று பிரெண்டா கூறினார்

1992ல் பிரெண்டா கனடா நாட்டு இந்தியரும் ஓவியருமான ரவிச்சந்திரன் ஆறுமுகம் உதவியுடன் அண்ணன்மார் சுவாமி கதையை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஓவியங்களுடன் வெளியிட்டார். பதிமூன்று மணி நேரம் ஓடக்கூடியதும் இருபத்தாறு பகுதிகள் கொண்டதுமான ஆங்கிலக் காணொளி தொடர் ஒன்றை அண்ணன்மார் சுவாமி கதையை ஒட்டி உருவாக்கினார். அண்ணன்மார் சுவாமி கதையை ஆங்கிலத்தில் ஓவியநாவல் (கிராஃபிக் நாவல்) வடிவிலும் வெளியிட்டார். ( Elder Brothers' Story: An Oral Epic of Tamil, The Legend of Ponnivala or Ponnar Shankar.) அவை சென்னை ஆசியவியல் ஆய்வுக் கழகத்தால் வெளியிடப்பட்டன ( Institute of Asian Studies). அவை இப்போது மின்னூல் வழிவில் கிடைக்கின்றன

தமிழ்ப்பணிகள்

2016ல் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் இணைய மென்பொருள் ஒன்றை பிரெண்டா உருவாக்கினார். அவ்வாண்டு பிரெண்டா 10,000 டாலர்களை டொரொண்டோ தமிழ் கல்வி மையத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். 2018 பிரெண்டா பிரென்டா பெக் தமிழ் நிரலி உருவாக்க நிதி, ( Brenda Beck Tamil Programming Fund ) பிரெண்டா பெக் தமிழ் எண்ம நிதி (Brenda Beck Tamil Digital Fund) ஆகியவற்றை உருவாக்கினார். தமிழ் நூல்களை மின்வடிவ ஆவணங்களாக்கும் பணிகளுக்கு நிதியுதவி செய்யும்பொருட்டு இவை உருவாக்கப்பட்டன. பிரெண்டா 327,000 டாலர் பணத்தை இந்த நிதிக்காக தனது கொடையாக அளித்தார்

2018 செப்டெம்பர் ஒன்றாம் தேதியும் இரண்டாம் தேதியும் பிரெண்டா கொங்கு குடும்பக் கூடுகை ஒன்றை விர்ஜீனியாவில் மனஸாஸ் நகரில் கொங்கு கூட்டமைப்பு (Kongu Association in Manassas, Virginia) சார்பில் ஒருங்கிணைத்தார்

பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதை குறித்த மானுடவியல் மற்றும் நாட்டாரியல் ஆய்வுரைகளை அளிக்கிறார். கனடாவின் தமிழ்க்கல்விச் செயல்பாடுகளை ஒங்கிணைக்கிறார். தற்போது பிரெண்டா சோஃபியா ஹில்டன் நிறுவனம் (Sophia Hilton Foundation of Canada) என்னும் தொண்டு நிறுவனத்தை வழிநடத்துகிறார். கதை சொல்லல் வழியாக கற்றலை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது இந்த அமைப்பு.

2019ல் பிரெண்டாவின் உதவியுடன் டொரொண்டோ பல்கலை ஸ்கார்பரோ நகரில் முதல் தமிழ் பண்பாட்டு மாதக் கொண்டாட்டத்தை நடத்தியது.(Tamil Heritage Month celebration) வில்லுப்பாட்டு போன்ற தமிழக நாட்டார் கலைகள் அரங்கேற்றப்பட்டன.

நூல்கள்

பிரெண்டா Anthropologica, Current Anthropology, Journal of South Asian Literature, The Journal of Asian Studies, and Western Folklore. போன்ற ஆய்விதழ்களில் எழுதியிருக்கிறார்.

  • Body Imagery of the Tamil Proverbs of South India
  • The Metaphor as a Mediator Between Semantic and Analogic Modes of Thought
  • The Logical Appropriation of Kinship as a Political Metaphor: An Indian Epic at the Civilizational and Regional Levels
  • The Right-Left Division of South Indian Society
  • The Three Twins
  • The Telling of a South Indian Folk Epic
  • A Praise-Poem for Murugan.

உசாத்துணை