under review

ஜோனா கார்லொட்டா: Difference between revisions

From Tamil Wiki
Tag: Manual revert
(Corrected Category:கிறிஸ்தவ மதப்பணியாளர்கள் to Category:கிறிஸ்தவ மதப்பணியாளர்)
 
Line 18: Line 18:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கிறிஸ்தவம்]]
[[Category:கிறிஸ்தவம்]]
[[Category:கிறிஸ்தவ மதப்பணியாளர்கள்]]
[[Category:கிறிஸ்தவ மதப்பணியாளர்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 13:48, 17 November 2024

ஜோனா கார்லொட்டா (Johanna Carlotta) (1863) (ஜோனா கார்லொட்டா மீட், ஜோனா கார்லொட்டா ஆகூர், ஜோஹன்னா கார்லொட்டா. யோகன்னாள் கார்லொட்டா) கிறிஸ்தவப் பணியாளர். இசைக்கலைஞர். குமரிமாவட்டத்தில் கிறிஸ்தவ மதப்பணி செய்த சார்ல்ஸ் மீட்டின் மகள். கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் சி.எம்.ஆகூரின் மனைவி.

பிறப்பு, கல்வி

ஜோனா 1863-ல் புகழ்பெற்ற கிறிஸ்தவ மதப்பணியாளர் சார்ல்ஸ் மீட்டின் மூன்றாவது மனைவியான லோய்ஸ் மீட்டுக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். நாகர்கோயிலில் பணியாற்றிய வெள்ளையரான மீட் இந்தியரான லோய்ஸை மணந்ததை ஒட்டி உருவான எதிர்ப்புகளால் மீட் லண்டன் மிஷன் சபையை விட்டு விலகி திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் ரெஸிடெண்ட் அலுவலகத்தில் பணியாளராகச் சேர்ந்தார். ஜோனா அங்கே பிறந்தார். மீட் தன் மறைந்த மனைவி ஜோனா (Mrs.Johanna Celestina Horst) நினைவாக அப்பெயரை அவருக்கு இட்டார். ஜோனா திருவனந்தபுரத்தில் கல்விகற்று இசைப்பயிற்சியும் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜோனா திருவனந்தபுரம் பெண்கள் பள்ளியில் இசை ஆசிரியையாகப் பணியாற்றினார். திருவனந்தபுரம் கிறிஸ்து தேவாலயத்தில் இசைக்குழுவை நடத்திவந்தார். 1900ல்- கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான சி.எம் ஆகூரை மணந்தார். 1904-ல் ஆகூர் மறைந்தார்.

மறைவு

ஜோனாவின் மறைவு பற்றிய உறுதியான தரவுகள் இல்லை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jun-2023, 19:20:16 IST