ராஜேந்திரன்: Difference between revisions
Created page with "ராஜேந்திரன் (பிறப்பு: 1961) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர். தெற்கத்தி பாணிக் கூத்துக்காரர். == வாழ்க்கைக் குறிப்பு == ராஜேந்திரன் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் ஒண்டி மாமரத்துப் பட்டியி..." |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
[[File:Rajendrantherukoothu.jpeg|thumb|ராஜேந்திரன்]] | |||
ராஜேந்திரன் (பிறப்பு: 1961) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர். தெற்கத்தி பாணிக் கூத்துக்காரர். | ராஜேந்திரன் (பிறப்பு: 1961) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர். தெற்கத்தி பாணிக் கூத்துக்காரர். | ||
Revision as of 13:25, 4 October 2024

ராஜேந்திரன் (பிறப்பு: 1961) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர். தெற்கத்தி பாணிக் கூத்துக்காரர்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜேந்திரன் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் ஒண்டி மாமரத்துப் பட்டியில் 1961-ல் பிறந்தார். தந்தை கட்டம்பொம்மைக்கூத்து ஆடி, பின்னர் தெருக்கூத்துக்கு வந்தவர்.
கலை வாழ்க்கை
ராஜேந்திரனின் வாத்தியார் போட்ரட்டி. ஒண்டி மாமரத்துப்பட்டி சரஸ்வதி நாடக சபா, நல்லூர் பெரிய மாது குழு, சரஸ்வதி நாடக சபா ஆகிய குழுக்களில் கூத்து ஆடினார். கதாநாயகன், கதாநாயகி ஆகிய இரு வேடங்களிலும் நடிப்பார். சந்திரமதி, நல்லதங்காள், அர்ஜுனன், கர்ணன் ஆகிய வேடங்கள் நடிப்பார்.
ஆரம்பத்தில் மகாபாரதம், ராமாயணம், சிவபுராணம், கந்தபுராணம் ஆகியவை ஆடினார். கோவலன் நாடகம், கருவாட்டு நாடகம், சின்னண்ணன் பெரியண்ணன் நாடகம், ஆதி நாடகம், சேமன் நாடகம் என்று சொல்லக்கூடிய நாவல்ஸ் ஆடினார். டெல்லி, பாம்பே போன்ற இடங்களுக்கும், தமிழ்நாட்டில் ஈரோடு, சங்ககிரி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கூத்து நடித்தார்.
விருது
- காரி தெருக்கூத்து பயிற்சிப் பட்டறை “தெருக்கூத்து செம்மல் விருது” அளித்தது.
- சேலத்திலுள்ள வெண்புறா நாடக சங்கம் விருது அளித்தது.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதம்
- ராமாயணம்
- சிவபுராணம்
- கந்தபுராணம்
நாவல்ஸ்
- கோவலன் நாடகம்
- கருவாட்டு நாடகம்
- சின்னண்ணன் பெரியண்ணன் நாடகம்
- ஆதி நாடகம்
- சேமன் நாடகம்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.