க்ஷேத்ரக்ஞர்: Difference between revisions

From Tamil Wiki
Line 10: Line 10:


== இசை வாழ்க்கை ==
== இசை வாழ்க்கை ==
இவர்‌ காமச்சுவை அதிகம்‌ வெளிப்படுகின்ற தெலுங்குப்‌ பதங்களை அதிகம் இயற்றினார். 4200க்கு மேற்பட்ட பதங்கள்‌ பாடினார். பதங்களை ரக்தி இராகத்தில்‌ செய்தார். நாயகி - நாயக இலட்சணங்கள்‌ அமையுமாறு பதங்கள்‌ செய்தார்‌. இவர்‌ காலத்தில்‌ கீர்த்தனை கிருதி என்ற பெயர்கள்‌ அதிகம்‌ வரவில்லை. இவர்‌ பாடியனவெல்லாம்‌ பதங்களே. பக்திப்‌ பாடல்களும்‌ பதங்களென்றே வழங்கப்பட்டன. இவர்‌ பாடியவை அதிகம் ஆனாலும் கிடைத்துள்ளவை 382 பதங்களே. அவற்றுள்‌ 128தான்‌ இசைக்குறிப்புடன்‌ அச்சிடப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம்‌, திருவள்ளுர்‌, காஞ்சி, சிதம்பரம்‌, திருப்பதி, கதிர்காமம்‌ முதலிய தலங்களில் பாடினார்.  
இவர்‌ காமச்சுவை அதிகம்‌ வெளிப்படுகின்ற தெலுங்குப்‌ பதங்களை அதிகம் இயற்றினார். 4200க்கு மேற்பட்ட பதங்கள்‌ பாடினார். பதங்களை ரக்தி இராகத்தில்‌ செய்தார். நாயகி - நாயக இலட்சணங்கள்‌ அமையுமாறு பதங்கள்‌ செய்தார்‌. இவர்‌ காலத்தில்‌ கீர்த்தனை கிருதி என்ற பெயர்கள்‌ அதிகம்‌ வரவில்லை. இவர்‌ பாடியனவெல்லாம்‌ பதங்களே. பக்திப்‌ பாடல்களும்‌ பதங்களென்றே வழங்கப்பட்டன. இவர்‌ பாடியவை அதிகம் ஆனாலும் கிடைத்துள்ளவை 382 பதங்களே. அவற்றுள்‌ 128தான்‌ இசைக்குறிப்புடன்‌ அச்சிடப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம்‌, திருவள்ளுர்‌, காஞ்சி, சிதம்பரம்‌, திருப்பதி, கதிர்காமம்‌ முதலிய தலங்களில் பாடினார். பிராமண வித்துவான்‌௧ளுக்கு மேளக்காரர்களை ஒடுக்கிவிடும் நோக்கத்திற்கு க்ஷேத்ரக்ஞருடைய பதங்கள்‌ உதவின.
 
===== மேளக்காரர்களின் வீழ்ச்சி =====
பிராமண வித்துவான்‌௧ளுக்கு மேளக்காரரை ஒடுக்கிவிடும் நோக்கத்திற்கு க்ஷேத்ரக்ஞருடைய பதங்கள்‌ கருவியாயமைந்தன.


===== இசைப்பயணம் =====
===== இசைப்பயணம் =====
Line 20: Line 17:
* விஜயரங்கன்‌ இறந்தபின்‌ இவர்‌ கோல்கொண்டா சென்று அங்கிருந்த பாதுஷா மீது 2000 பதங்கள்‌ பாடினார். கோல்கொண்ட சமஸ்தானத்தில்‌ நடைபெற்ற போட்டியில் நாற்பதே நாளில்‌ 1500 பதங்கள்‌  
* விஜயரங்கன்‌ இறந்தபின்‌ இவர்‌ கோல்கொண்டா சென்று அங்கிருந்த பாதுஷா மீது 2000 பதங்கள்‌ பாடினார். கோல்கொண்ட சமஸ்தானத்தில்‌ நடைபெற்ற போட்டியில் நாற்பதே நாளில்‌ 1500 பதங்கள்‌  
பாடி வெற்றி பெற்றார்.  
பாடி வெற்றி பெற்றார்.  
* தென்னாடு சுற்றிய காலத்தில்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளிடம்‌ மிக்க ஈடுபாடு கொண்டு பாடினார். இவர்‌ வெறும்‌ பாடகர்‌ மட்டுமல்லாமல்‌ சிறந்த கவிஞரும்‌ இலக்கண வித்துவானுமாகவும்‌ இருந்தார்.  
* தென்னாடு சுற்றிய காலத்தில்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளிடம்‌ மிக்க ஈடுபாடு கொண்டு பாடினார். இவர்‌ வெறும்‌ பாடகர்‌ மட்டுமல்லாமல்‌ சிறந்த கவிஞரும்‌ இலக்கண வித்துவானுமாகவும்‌ இருந்தார்.


== பாடல் நடை ==
== பாடல் நடை ==

Revision as of 11:47, 30 April 2022

க்ஷேத்ரக்ஞர் (பொ.யு. 1620-1675) இசைவாணர். தெலுங்கில் காமச்சுவை கொண்ட பதங்கள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தெலுங்குப்‌ பிராமணர்‌. இவர்‌ பிறந்தது ஆந்திர மாகாணத்தில்‌ சித்தூர்‌ ஜில்லாவிலுள்ள முவ்வாபுரி என்ற சிற்றூர்‌. இவரது இயற்பெயர்‌ வரதையன்‌. ஞானிகள்‌ க்ஷேத்ரக்ஞன்‌ என்று சொல்லப்படுகிறார்கள். இவர்‌ தம்முடைய பக்தி ஞானமுதிர்வினால்‌ இந்தச்‌ சரீரத்தை நன்கு அறிந்தவராய்‌ அதுகொண்டே க்ஷேத்ரக்ஞர்‌ என்று பெயர்‌ பெற்றிருக்கலாம்‌.

இளமையில்‌ இவருக்குத்‌ துறவியொருவர்‌ கோபால மந்திரத்தை உபதேசித்தார்‌. மந்திரத்தை நன்கு ஜெபித்த வரதையருக்குக்‌ கோபாலவிரகம்‌ மீது அதிக விருப்பம் மிகுந்தது. சிருங்காரம்‌ தோய்ந்த பாடல்களால்‌ கோபாலனையே பாடிக்கொண்டு நாடெங்கும்‌ சஞ்சரித்தார்‌. பெரும்பான்மையான நேரம்‌ கோபாலனையே துதித்துக் கொண்டு அவன்‌ சந்நிதியிலேயே கிடந்தார்‌. க்ஷேத்ரக்ஞரும்‌ வேங்கடமகியும்‌ சமகாலத்திலிருந்தவர்கள்‌.

தொன்மம்

இவர்‌ முவ்வாகோபாலன்‌ மீது பதங்கள்‌ பாடிக்கொண்டே கோயிலிலேயே தங்கியிருந்த காலத்தில்‌ அவ்வூரில்‌ மோகனா என்ற தாசி மீது மிக்க மோகங்கொண்டு தமக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். கோபாலன்‌ மீது சிற்றின்பம்‌ கலவாத பக்திப்‌ பாடல்கள்‌ மட்டுமே பாடிவந்தால்தான்‌ அவருக்கு இணங்குவதாகச்‌ சொன்னதால் பக்திப்‌ பாடல்கள் பாடினார். மூன்றுநாள்‌ இரவும்‌ பகலும்‌ அவருடைய பக்திப்பாடல்களுக்கு ஆடியவள் மூன்றுநாள்‌ அவருடைய ஆற்றல்‌ கண்டு தான்‌ அவருக்கு இணங்குவதாகச்‌ சொன்னாள்‌. அவர் அந்தப் பாடல்களின் வழி அடைந்த ஞானத்தால் தன் மோகத்தைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறி பல ஊர்களும்‌ சுற்றினார். இவ்வாறு பல க்ஷேத்திரங்களும்‌ சுற்றிய காரணத்தினால்‌ இவருக்கு 'க்ஷேத்திரக்ஞர்‌' என்று பெயர்‌ வந்தது என்பர். க்ஷேத்திரக்ஞன்‌ என்ற சொல்லுக்கு க்ஷேத்திரங்களை அறிந்தவன்‌ என்பது பொருள்‌. பகவத்கீதை பாடலொன்று க்ஷேத்திரமாகிய சரீரத்தை நன்கு உணர்ந்தவன்‌ கேஷேத்திரக்ஞன்‌ என்று சொல்லும்‌.

இசை வாழ்க்கை

இவர்‌ காமச்சுவை அதிகம்‌ வெளிப்படுகின்ற தெலுங்குப்‌ பதங்களை அதிகம் இயற்றினார். 4200க்கு மேற்பட்ட பதங்கள்‌ பாடினார். பதங்களை ரக்தி இராகத்தில்‌ செய்தார். நாயகி - நாயக இலட்சணங்கள்‌ அமையுமாறு பதங்கள்‌ செய்தார்‌. இவர்‌ காலத்தில்‌ கீர்த்தனை கிருதி என்ற பெயர்கள்‌ அதிகம்‌ வரவில்லை. இவர்‌ பாடியனவெல்லாம்‌ பதங்களே. பக்திப்‌ பாடல்களும்‌ பதங்களென்றே வழங்கப்பட்டன. இவர்‌ பாடியவை அதிகம் ஆனாலும் கிடைத்துள்ளவை 382 பதங்களே. அவற்றுள்‌ 128தான்‌ இசைக்குறிப்புடன்‌ அச்சிடப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம்‌, திருவள்ளுர்‌, காஞ்சி, சிதம்பரம்‌, திருப்பதி, கதிர்காமம்‌ முதலிய தலங்களில் பாடினார். பிராமண வித்துவான்‌௧ளுக்கு மேளக்காரர்களை ஒடுக்கிவிடும் நோக்கத்திற்கு க்ஷேத்ரக்ஞருடைய பதங்கள்‌ உதவின.

இசைப்பயணம்
  • மதுரை: சென்று திருமலை நாயக்கர்‌ (1623 - 6509) ஆதரவு பெற்று அங்கே 1000 பதங்கள்‌ பாடினார்.
  • தஞ்சை: தஞ்சையை ஆண்ட விஜயாங்க சொக்கநாத நாயக்கர் (பொ.யு. 1654 - 1673) அவைக்கு வந்தார்‌. நாயக்கர்‌ தெலுங்கரானமையாலும்‌ சிற்றின்பப்‌ பதங்களை அதிகம்‌ விரும்புவரானமையாலும்‌ இவருக்கு அரசவையில்‌ மிக்க சிறப்பு இருந்தது. அவைப்புலவர்கள்‌ இவர்‌ மீது மிக்க பொறாமை கொண்டார்கள்‌. அதை இவர்‌ அறிந்து வெளியேபோக முடிவு செய்தவராய்‌, ”பரமனோச தினமு வடிஇதி” என்று புதிதாய்‌ ஒரு பதம்பாடி, “இதன்‌ மூன்றாவது சரணத்தை நீங்களே பூர்த்தி செய்து வையுங்கள்‌, நான்‌ காசி யாத்திரை போய்வருகிறேன்‌” என்று சொல்லி புறப்பட்டுப்‌ போனார். பல மாதங்கள்‌ கழித்துத்‌ திரும்பிய போது யாரும்‌ பாடலை முடிக்க முடியாமல்‌ இவரிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டபின் இவரே பாடினார்.
  • விஜயரங்கன்‌ இறந்தபின்‌ இவர்‌ கோல்கொண்டா சென்று அங்கிருந்த பாதுஷா மீது 2000 பதங்கள்‌ பாடினார். கோல்கொண்ட சமஸ்தானத்தில்‌ நடைபெற்ற போட்டியில் நாற்பதே நாளில்‌ 1500 பதங்கள்‌

பாடி வெற்றி பெற்றார்.

  • தென்னாடு சுற்றிய காலத்தில்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளிடம்‌ மிக்க ஈடுபாடு கொண்டு பாடினார். இவர்‌ வெறும்‌ பாடகர்‌ மட்டுமல்லாமல்‌ சிறந்த கவிஞரும்‌ இலக்கண வித்துவானுமாகவும்‌ இருந்தார்.

பாடல் நடை

  • இவர்‌ பாடிய முதல்பதம்‌ ஆனந்தபைரவியில்‌, “ஸ்ரீபதி சதுவாரிஇ' என்பது. பின்னும்‌ சிறப்புள்ள சில பதங்கள்‌.

“எவ்வடே னு பாமா: - சங்கராபரணம்‌; “பால வினவே'-
காம்போதி; 'ஏமோ தெலியது' - சாவேரி; “அலிகிதே' - உசேனி என்பன.

சிறப்புகள்

  • இவருடைய பதங்களில்‌ ராகத்தின்‌ வடிவம்‌ தொடக்கத்திலேயே தெளிவாகப்‌ புலப்படும்‌. சாதாரணமாக, ராக பாவத்தைத்‌ தெரிந்துகொள்ள விரும்புபவர்‌ அந்தந்த ராகத்தில்‌ இவர்‌ செய்துள்ள பதங்களைக்‌ கற்பது பயனுடையது என்று சொல்வர்‌.
  • இவர்‌ பாடியுள்ள சில அபூர்வ இராகங்கள்‌ ஆகிரி, கண்டா, கர்நாடக காபி, கெளரி, சாமந்தா, சைந்தவி, நவரோஸ்‌ முதலியன.
  • இவருடைய பதங்கள்‌ யாவும்‌ விளம்ப காலம்‌. ஆகவே அபிநயத்துக்குப்‌ பெரிதும்‌ பொருத்தமானவை. இவற்றின்‌ உல்லாசமான நடை சிறந்த பாவ ராக தாள நிபுணர்களிடம்‌ மட்டுமே சிறப்பாய்ப்‌ பிரகாசிக்கும்‌.
  • இவர்‌ காலத்தில்‌ சில புதிய இராகங்கள்‌ பழைய இராகங்களை ஓடுக்கிவிட்டன எடுத்துக்காட்டுக்கள்‌: நீலாம்பரி - சாமந்தா; கானடா - பலமஞ்சரி; பிலகரி - தேசாட்சி. இன்று சில இராகங்களின்‌ முழுவடிவத்தை இவருடைய பதங்களில்‌ மட்டுமே காணமுடிகிறது என்று இசைவாணர்‌ கூறுவர்‌. உதாரணம்‌: கண்டா, நவரோஸ்‌, சுத்தகாபி, சைந்தவி, சஹானா, பியாகடை, கல்யாணி. இவருடைய சாகித்தியங்களில்‌ இசைத்தன்மை நிரம்பியிருக்கும்‌.
  • பதங்கள்‌ விளம்ப காலத்துக்குரியனவாதலின்‌ அபிநயத்துக்குப்‌ பெரிதும்‌ உகந்தன என்பர்‌.
  • சங்கீத சம்பிரதாயப்‌ பிரதரிசினீ எழுதிய சுப்பராம தீட்சிதர்‌, “நாயகி நாயக பாவத்தை நன்கு விளக்கி இசைத்தன்மை குன்றாமல்‌ பாடுவதில்‌ இவருக்கு இணையாக முன்னும்‌ யாரும்‌ இருந்ததில்லை; பின்னும்‌ யாரும்‌ வரப்போவதில்லை” என்று எழுதியிருக்கிறார்‌.

உசாத்துணை

  • தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர்‌ மு. அருணாசலம்‌: பதிப்பாசிரியர்‌ உல. பாலசுப்பிரமணியன்‌ - அக்டோபர்‌ 2009.