under review

எம்.எஸ். கமலா: Difference between revisions

From Tamil Wiki
(Added links to Disambiguation page)
(Corrected the links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|கமலா|[[கமலா (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=கமலா|DisambPageTitle=[[கமலா (பெயர் பட்டியல்)]]}}
[[File:எம்.எஸ். கமலா.jpg|thumb|288x288px|எம்.எஸ். கமலா (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)]]
[[File:எம்.எஸ். கமலா.jpg|thumb|288x288px|எம்.எஸ். கமலா (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)]]
எம்.எஸ். கமலா (பிறப்பு: ஏப்ரல் 17 , 1922-) தொடக்ககால தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் பெண் பொதுச் செயலாளர்.

Revision as of 18:15, 27 September 2024

கமலா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கமலா (பெயர் பட்டியல்)
எம்.எஸ். கமலா (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

எம்.எஸ். கமலா (பிறப்பு: ஏப்ரல் 17 , 1922-) தொடக்ககால தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் பெண் பொதுச் செயலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் ரவிப்பிரியா. மெட்ராஸ் சுப்பராய கமலா என்பதன் சுருக்கம் தான் எம்.எஸ்.கமலா. இவர் ஏப்ரல் 17 , 1922-ல் சென்னையில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் அறிந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சுதேசமித்திரன், காவேரி, ஜகன்மோகினி, பாரதமணி, மங்கை எனப் பல இதழ்களில் சிறுகதை, கட்டுரைகளை எழுதினார். ரவிப்பிரியா லஷ்மிகுமாரி, மைத்ரேயா போன்ற புனைப் பெயர்களில் சிறுகதை எழுதியுள்ளார்.

சிறுகதைகள்

எம்.எஸ்.கமலா எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, 'கன்னிதெய்வம்’, 'காதற் கோயில்' என்ற தலைப்புகளில் நூலாக வெளியாகியுள்ளன.

நாவல்

’மனித தெய்வம்’ என்பது எம்.எஸ்.கமலா எழுதிய முதல் நாவல். வேறு நாவல்கள் உண்டா என தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு

எம்.எஸ்.கமலா மொழிப் பெயர்ப்பாளரும் கூட. அடவி பாபிராஜு என்னும் பிரபல தெலுங்கு நாவலாசிரியர் எழுதிய 'நாராயண ராவ்' என்ற நாவலைத் தமிழில் எழுதினார். அது சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்தது. 'மிஸ்டர் எக்ஸ்' என்பது தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவல். 'ஐக்கிய நாடுகள் இயங்கும் முறை' என்பது இவரது முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்.

அமைப்புச் செயல்பாடுகள்

  • 1965, 1966-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இவர் பணிபுரிந்திருக்கிறார்.
  • தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் பெண் பொதுச் செயலாளர்.

மறைவு

எம்.எஸ்.கமலாவின் மறைவுச் செய்தி தெரியவில்லை.

இலக்கிய இடம்

தமிழின் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவர். பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் எழுத்துக்களுக்கு வழிகோலியவர்.

நூல்கள்

நாவல்
  • மனித தெய்வம்
சிறுகதைகள்
  • ரத்னமாலா
  • வறண்ட பார்வை
  • சுயேச்சை மணம்
  • கோயிலும் மசூதியும்
  • பொங்கல் பரிசு
  • சுயம்வரம்
  • விடிந்தது
  • சிற்பி சந்திரமோஹன்
  • மலர்ந்த மல்லிகை
  • ஆவணி அவிட்டம்
  • பாமினியின் கொலு
  • அந்த இரு கண்கள்
  • முதல் தீபாவளி
மொழிபெயர்ப்புகள்
  • ஐக்கிய நாடுகள் இயங்கும் முறை
  • மிஸ்டர் எக்ஸ் (நாவல்)

வெளி இணைப்புகள்

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1: 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த் சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:40 IST