first review completed

சாது ரத்தின சற்குரு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
சாது ரத்தின சற்குரு ( 1841- ஜனவரி 8,1908) தமிழ்ப்புலவர், பதிப்பாளர்மற்றும் வேதாந்தி.துவைத சைவ கண்டனம் என வழங்கப்படும் இருபத்தி நான்கு சித்தாந்த கண்டன நூல்கள் முக்கியமான படைப்புகள்.

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சென்னையில் சிவசங்கர ரெட்டியாருக்கும் முனியம்மையாருக்கும் பொ.யு. 1841-ல் சாது ரத்தின சற்குரு மகனாகப் பிறந்தார். வைசியர் குலம். பள்ளிக் கல்வி கற்றார். நன்னூல், அறிவு நூல்களைக் கற்றார். திருமணம் செய்து கொண்டார். வணிகத் தொழில் செய்தார்.
சென்னையில் சிவசங்கர ரெட்டியாருக்கும் முனியம்மையாருக்கும் பொ.யு. 1841-ல் சாது ரத்தின சற்குரு பிறந்தார். வைசியர் குலம். பள்ளிக் கல்வி கற்றார். நன்னூல், அறிவு நூல்களைக் கற்றார். சாது ரத்தின சற்குரு திருமணம் செய்து கொண்டு வணிகத் தொழில் செய்தார். பின்னர் துறவு பூண்டார்.
== ஆன்மீக வாழ்க்கை ==
== ஆன்மீக வாழ்க்கை ==
துறவில் நாட்டம் கொண்டார். திருவொற்றியூர் கிருஷ்ணானந்த அடிகளிடம் சீடராகச் சேர்ந்தார். அறிவு நூல் ஆராய்ச்சி, சமாதி நெறி ஆகியவற்றைக் கற்றார். ஈசூர் சச்சிதானந்த் அடிகளிடம் வேதாந்த நூலைக் கற்றார். கோடக நல்லூர் சுந்தர அடிகளிடமும் சில காலம் வேதாந்தம் கற்றார்.  
துறவில் நாட்டம் கொண்ட சாது ரத்தின சற்குரு திருவொற்றியூர் கிருஷ்ணானந்த அடிகளிடம் சீடராகச் சேர்ந்தார். அறிவு நூல் ஆராய்ச்சி, சமாதி நெறி ஆகியவற்றைக் கற்றார். ஈசூர் சச்சிதானந்த் அடிகளிடம் வேதாந்த நூலைக் கற்றார். கோடக நல்லூர் சுந்தர அடிகளிடமும் சில காலம் வேதாந்தம் கற்றார்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ரிப்பன் அச்சுக் கூடம் நடத்தினார். அச்சகம் இவருக்குப் பின் இவரின் மகன் சிவசங்கரச் செட்டியாரால் நடத்தப்பட்டது. தற்போது இந்த அச்சுக்கூடம் புதுக்கோட்டையில் உள்ளது. தமிழ் நூல்கள் அதிகம் பரவாமல் இருந்த கால்கட்டத்தில் இந்த அச்சுக்கூடம் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது. இருபத்தி நான்கு சித்தாந்த கண்டன நூல்கள் எழுதினார். இவை ஒட்டுமொத்தமாக துவைத சைவ கண்டனம் எனப்படுகிறது.
சாது ரத்தின சற்குரு ரிப்பன் அச்சுக் கூடம் நடத்தினார். அச்சகம் இவருக்குப் பின் இவரின் மகன் சிவசங்கரச் செட்டியாரால் நடத்தப்பட்டது. தற்போது இந்த அச்சுக்கூடம் புதுக்கோட்டையில் உள்ளது. தமிழ் நூல்கள் அதிகம் பரவாமல் இருந்த கால்கட்டத்தில் இந்த அச்சுக்கூடம் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது. இருபத்தி நான்கு சித்தாந்த கண்டன நூல்கள் எழுதினார். இவை ஒட்டுமொத்தமாக துவைத சைவ கண்டனம் எனப்படுகிறது.ஸ்ரீ சாது ரத்தின சற்குரு புஸ்தகச் சாலை ஏராளமான பக்திநூல்களைப் பதிப்பித்திருக்கிறது.  
== மறைவு ==
== மறைவு ==
சாது ரத்தின சற்குரு ஜனவரி 8, 1908-ல் காலமானார்.

Revision as of 12:55, 9 June 2022

சாது ரத்தின சற்குரு ( 1841- ஜனவரி 8,1908) தமிழ்ப்புலவர், பதிப்பாளர்மற்றும் வேதாந்தி.துவைத சைவ கண்டனம் என வழங்கப்படும் இருபத்தி நான்கு சித்தாந்த கண்டன நூல்கள் முக்கியமான படைப்புகள்.

வாழ்க்கைக் குறிப்பு

சென்னையில் சிவசங்கர ரெட்டியாருக்கும் முனியம்மையாருக்கும் பொ.யு. 1841-ல் சாது ரத்தின சற்குரு பிறந்தார். வைசியர் குலம். பள்ளிக் கல்வி கற்றார். நன்னூல், அறிவு நூல்களைக் கற்றார். சாது ரத்தின சற்குரு திருமணம் செய்து கொண்டு வணிகத் தொழில் செய்தார். பின்னர் துறவு பூண்டார்.

ஆன்மீக வாழ்க்கை

துறவில் நாட்டம் கொண்ட சாது ரத்தின சற்குரு திருவொற்றியூர் கிருஷ்ணானந்த அடிகளிடம் சீடராகச் சேர்ந்தார். அறிவு நூல் ஆராய்ச்சி, சமாதி நெறி ஆகியவற்றைக் கற்றார். ஈசூர் சச்சிதானந்த் அடிகளிடம் வேதாந்த நூலைக் கற்றார். கோடக நல்லூர் சுந்தர அடிகளிடமும் சில காலம் வேதாந்தம் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சாது ரத்தின சற்குரு ரிப்பன் அச்சுக் கூடம் நடத்தினார். அச்சகம் இவருக்குப் பின் இவரின் மகன் சிவசங்கரச் செட்டியாரால் நடத்தப்பட்டது. தற்போது இந்த அச்சுக்கூடம் புதுக்கோட்டையில் உள்ளது. தமிழ் நூல்கள் அதிகம் பரவாமல் இருந்த கால்கட்டத்தில் இந்த அச்சுக்கூடம் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது. இருபத்தி நான்கு சித்தாந்த கண்டன நூல்கள் எழுதினார். இவை ஒட்டுமொத்தமாக துவைத சைவ கண்டனம் எனப்படுகிறது.ஸ்ரீ சாது ரத்தின சற்குரு புஸ்தகச் சாலை ஏராளமான பக்திநூல்களைப் பதிப்பித்திருக்கிறது.

மறைவு

சாது ரத்தின சற்குரு ஜனவரி 8, 1908-ல் காலமானார்.

நூல் பட்டியல்

கண்டன நூல்கள்
  • தத்துவவாதம்
  • சங்கராச்சாரியார் அவதார் மகிமை
  • வேதாந்த சங்கை நிவாரணம்
  • அத்வைத தூடண பரிகாரம்
  • பதிபசுபாசவாதம்
  • துவிதசைவரே மாயாவாதிகள்
  • மாயாவாத சண்டமாருதம்
  • திருவள்ளூர் முதற் குறள்
  • பசு சச்சிதானந்தம் உடையதா?
  • அவைதிக சைவ சண்ட மாருதம்
  • முடிவுரைச் சூறாவளி
  • பஞ்சதசப் பிரகரணாபாச விளக்கச் சண்டமாருதம்
  • துவிதாத்துவித வாதம்
  • துவிதசைவ மறுப்பு
  • பேதவாத திரஸ்காரம்
  • திருமந்திர விசாரணை
  • ஜீவான்மாவின் பரிணாமம்
  • வேதாந்த தீபிகை
  • முதற்குறள்வாத சத்தூடணி

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.