first review completed

காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(corrected error in template text)
Line 31: Line 31:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ <nowiki>புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]</nowiki>]

{{First review completed}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:56, 28 April 2022

காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

சேரநாட்டில் காட்டூர் என்ற ஊரில் பிறந்தார். இது தற்போதைய கரூர் மாவட்டத்தில் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

தலைவன் பிரிவால் கவலை கொள்ளும் தலைவியைத் தோழி பொறுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தும் பாலைத்திணைப் பாடல் அகநானூற்றில்(85) இடம்பெறுகிறது.

அறியவரும் செய்திகள்

  • திருவேங்கட மலையைச் சூழ்ந்த நாட்டை 'வென்வேல் திரையன்' ஆண்டான்.
  • அவன் நாட்டில் யானைகள் மிகுதி.
  • தமிழ்மக்கள் இவனது நாட்டைக் கடந்து பொருள் தேடச் சென்றனர்.
  • திரையன் வேற்படை உடையவன்.
  • இந்தத் திரையன் தொண்டைமான் இளந்திரையனுக்கு முன் ஆண்டவன்.

பாடல் நடை

  • அகநானூறு: 85

'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை 10
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.