under review

கோடீஸ்வர ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கோடீஸ்வர ஐயர்‌ (1869-1938) இசைப்புலவர். 200 கீர்த்தனைகளும், 72 மேளகர்த்தா ராகங்களும் இவர் இசையுலகிற்கு வழங்கினார். == வாழ்க்கைக் குறிப்பு == 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கவிக்குஞ்சர பாரதியி...")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:கோடீஸ்வர ஐயர்.png|thumb|315x315px|கோடீஸ்வர ஐயர்]]
கோடீஸ்வர ஐயர்‌ (1869-1938) இசைப்புலவர். 200 கீர்த்தனைகளும், 72 மேளகர்த்தா ராகங்களும் இவர் இசையுலகிற்கு வழங்கினார்.

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கவிக்குஞ்சர பாரதியின் மகள் வயிற்றுப் பேரர். இவரின் முன்னோர் திருநெல்வேலியில் இருந்து இரண்யகர்ப்ப திருமலை சேதுபதி மன்னரால் சேதுநாட்டில் குடியமர்த்தப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டம், நந்தனூர் கிராமத்தில் நாகநாத ஐயருக்கும் பார்வதியம்மாளுக்கும் மகனாக 1869இல் பிறந்தார். இவரை, சிவகங்கை, இராமநாதபுர சமஸ்தானங்கள் அரசவைக் கலைஞராக பணியில் அமர்த்தின. இவர் உயர்நீதிமன்றத்தில்‌ வேலை பார்த்து ஓய்வு பெற்றார்.

== இசை வாழ்க்கை ==
== இசை வாழ்க்கை ==
கோடீசுவர ஐயர்‌ 200க்கு மேற்பட்ட கீர்த்தனங்களைப்‌ பாடினார். இவர்‌ இராமநாதபுரம்‌ ஸ்ரீனிவாசய்யங்காரிடமும்‌ பட்டணம்‌ சுப்பிரமணிய ஐயரிடமும்‌ இசை பயின்றார்‌. இளமையில் மதுரை சுந்தரேசர்‌ மீனாட்சியம்மை மீது வெண்பா, பதிகம்‌, மதுரைச்‌ சித்திவிதாயகர்‌ பதிகம்‌, செண்பகமாலை, பதிற்றுப்பத்தந்தாதி, கயற்கண்ணி மாலை பாடினார்‌.  

இவருடைய பாடல்களில்‌ 72 மேளகர்த்தா ராகங்கள்‌ பாடினார். 72க்கும்‌ தனித்தனிக்‌ கீர்த்தனங்கள்‌  

பாடிய சிறப்பு இவருக்குரியது. இவரே இந்த மேளகர்த்தா ராகங்களில்‌ ஆரோஹண, அவரோஹண, சம்பூர்ணப்‌ பிரயோகங்களைப்‌ பயன்படுத்திக்‌ கீர்த்தனம்‌ செய்தார்‌. இந்த ராகங்களுக்கு இவருக்கு முன்னால்‌ பின்பற்றுவதற்கான லட்சண கீதங்கள்‌ இல்லை. சுரவடிவங்கள்‌ மட்டுமே செய்யப்பட்டிருந்தன. அவற்றை இணைத்துப இசைவடிவம்‌ அமைத்துத்‌ தனி ராக வடிவம்‌ கொடுத்தார். ஜீவசுரங்களின்‌ நிர்ணயம்‌, சஞ்சாரம்‌, சக்திப்‌ பிரயோகங்கள்‌ அடிப்படையில்‌ புதுக்‌கீர்த்தனங்கள்‌ செய்தார். ஓட்டமுடைய சாகித்தியம்‌, பக்திபூர்வமாக குறித்த இராகத்தின்‌ சாயல்‌ முழுவதையும்‌ நன்கு தெரிவிக்கும்படியாக இவர்‌ செய்தநூல்‌ கந்தகானாமுதம்‌. 'கவிகுஞ்சரதாசன்‌' என்ற முத்திரையைத்‌ தம்‌ பாடல்களில்‌ இவர்‌  

வைத்திருந்தார்‌. தோடி ராகம் பாடுவதில் வல்லவராக இருந்தார்.

இவர்‌ முருகபக்தர்‌. ரக்தி இராகங்களில்‌ கலையம்சம்‌ நிரம்பியிருக்குமாறு செய்திருக்கிறார்‌. மேளகர்த்தா இராகங்களிலும்‌ அழகு நிரம்பும்படிப்‌ பாடியிருக்கிறார்‌. இவருடைய சீர்த்தனங்களில்‌ ௮ச்சாகாத சிலவும்‌ உள்ளன.  

===== மாணவர்கள் =====
===== மாணவர்கள் =====
== விருது ==
== விருது ==
== மறைவு ==
== மறைவு ==
கோடீஸ்வர ஐயர் அக்டோபர் 21, 1938இல் காலமானார்.

== நூல்கள் ==
== நூல்கள் ==
* கந்தகானாமுதம்‌
* கந்தகானாமுதம்‌
Line 30: Line 26:
* அழகர் குறவஞ்சி
* அழகர் குறவஞ்சி
* பேரின்பக் கீர்த்தனை
* பேரின்பக் கீர்த்தனை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர்‌ மு. அருணாசலம்‌: பதிப்பாசிரியர்‌ உல. பாலசுப்பிரமணியன்‌ - அக்டோபர்‌ 2009.

* http://www.tamilisaisangam.in/isai_kalaivanargal.php

* https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/oct/21/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-575279.html

{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:28, 25 April 2022

கோடீஸ்வர ஐயர்

கோடீஸ்வர ஐயர்‌ (1869-1938) இசைப்புலவர். 200 கீர்த்தனைகளும், 72 மேளகர்த்தா ராகங்களும் இவர் இசையுலகிற்கு வழங்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கவிக்குஞ்சர பாரதியின் மகள் வயிற்றுப் பேரர். இவரின் முன்னோர் திருநெல்வேலியில் இருந்து இரண்யகர்ப்ப திருமலை சேதுபதி மன்னரால் சேதுநாட்டில் குடியமர்த்தப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டம், நந்தனூர் கிராமத்தில் நாகநாத ஐயருக்கும் பார்வதியம்மாளுக்கும் மகனாக 1869இல் பிறந்தார். இவரை, சிவகங்கை, இராமநாதபுர சமஸ்தானங்கள் அரசவைக் கலைஞராக பணியில் அமர்த்தின. இவர் உயர்நீதிமன்றத்தில்‌ வேலை பார்த்து ஓய்வு பெற்றார்.

இசை வாழ்க்கை

கோடீசுவர ஐயர்‌ 200க்கு மேற்பட்ட கீர்த்தனங்களைப்‌ பாடினார். இவர்‌ இராமநாதபுரம்‌ ஸ்ரீனிவாசய்யங்காரிடமும்‌ பட்டணம்‌ சுப்பிரமணிய ஐயரிடமும்‌ இசை பயின்றார்‌. இளமையில் மதுரை சுந்தரேசர்‌ மீனாட்சியம்மை மீது வெண்பா, பதிகம்‌, மதுரைச்‌ சித்திவிதாயகர்‌ பதிகம்‌, செண்பகமாலை, பதிற்றுப்பத்தந்தாதி, கயற்கண்ணி மாலை பாடினார்‌.

இவருடைய பாடல்களில்‌ 72 மேளகர்த்தா ராகங்கள்‌ பாடினார். 72க்கும்‌ தனித்தனிக்‌ கீர்த்தனங்கள்‌ பாடிய சிறப்பு இவருக்குரியது. இவரே இந்த மேளகர்த்தா ராகங்களில்‌ ஆரோஹண, அவரோஹண, சம்பூர்ணப்‌ பிரயோகங்களைப்‌ பயன்படுத்திக்‌ கீர்த்தனம்‌ செய்தார்‌. இந்த ராகங்களுக்கு இவருக்கு முன்னால்‌ பின்பற்றுவதற்கான லட்சண கீதங்கள்‌ இல்லை. சுரவடிவங்கள்‌ மட்டுமே செய்யப்பட்டிருந்தன. அவற்றை இணைத்துப இசைவடிவம்‌ அமைத்துத்‌ தனி ராக வடிவம்‌ கொடுத்தார். ஜீவசுரங்களின்‌ நிர்ணயம்‌, சஞ்சாரம்‌, சக்திப்‌ பிரயோகங்கள்‌ அடிப்படையில்‌ புதுக்‌கீர்த்தனங்கள்‌ செய்தார். ஓட்டமுடைய சாகித்தியம்‌, பக்திபூர்வமாக குறித்த இராகத்தின்‌ சாயல்‌ முழுவதையும்‌ நன்கு தெரிவிக்கும்படியாக இவர்‌ செய்தநூல்‌ கந்தகானாமுதம்‌. 'கவிகுஞ்சரதாசன்‌' என்ற முத்திரையைத்‌ தம்‌ பாடல்களில்‌ இவர்‌ வைத்திருந்தார்‌. தோடி ராகம் பாடுவதில் வல்லவராக இருந்தார்.

இவர்‌ முருகபக்தர்‌. ரக்தி இராகங்களில்‌ கலையம்சம்‌ நிரம்பியிருக்குமாறு செய்திருக்கிறார்‌. மேளகர்த்தா இராகங்களிலும்‌ அழகு நிரம்பும்படிப்‌ பாடியிருக்கிறார்‌. இவருடைய சீர்த்தனங்களில்‌ ௮ச்சாகாத சிலவும்‌ உள்ளன.

மாணவர்கள்

விருது

மறைவு

கோடீஸ்வர ஐயர் அக்டோபர் 21, 1938இல் காலமானார்.

நூல்கள்

  • கந்தகானாமுதம்‌
  • மதுரை பொற்றாமரை சித்திவிநாயகர் பதிகம்
  • மதுரை சண்முகமாலை
  • சுந்தரேசுவரர் பதிகம்
  • கயற்கண்ணி பதிற்றுப்பத்தந்தாதி
  • இந்திய மான்மியம்
பதிப்பித்தவை
  • கந்தபுராணக் கீர்த்தனை
  • அழகர் குறவஞ்சி
  • பேரின்பக் கீர்த்தனை

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.