under review

தேசபக்தன் கந்தன்: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
Line 1: Line 1:
[[File:தேசபக்தன் கந்தன்.png|thumb|தேசபக்தன் கந்தன்]]
தேசபக்தன் கந்தன் (1930) [[கா.சி.வேங்கடரமணி|கா.சி. வேங்கடரமணி]] எழுதிய நாவல். இதை அவர் தமிழில் எழுதி பின்னர் ஆங்கிலத்தில் Kandan, The Patriot என்ற பெயரில் அவரே மொழியாக்கம் செய்தார். இது கா.சி. வேங்கடரமணியின் இரண்டாவது நாவல். காந்திய இயக்க சிந்தனைகளை வெளிப்படுத்தும் இந்நாவலில் கந்தன் என்னும் கதாபாத்திரம் காந்தியின் சாயல்கொண்டது என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.

== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
மேல்நாட்டில் கல்விகற்று சிற்றூருக்கு திரும்பிவரும் கந்தன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுகிறான். அவனுடன் படித்த ரங்கன் ஐ.சி.எஸ். தேர்வில் வென்று கலெக்டர் வேலை பார்க்கிறான். ரங்கன் காதலிக்கும் ராஜேஸ்வரி கந்தனால் ஈர்க்கப்பட்டு மேல்நாட்டுக் கல்வி கற்றவளாக இருந்தாலும் கிராமத்திற்குச் சென்று தேசநிர்மாணப் பணியில் ஈடுபடுகிறாள். அவளுடைய உறுதியால் ரங்கனும் கலெக்டர் வேலையை துறந்து தேசப்பணிக்கு வருகிறான். ரங்கன் அறிவார்ந்த செயல்பாடுகள் மற்றும் பிரச்சாரம் மூலம் தேசவிடுதலையை அடையலாம் என்கிறான். மாறாக நேரடியான செயல், களப்பணியே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கந்தன் சொல்கிறான். இந்நாவலில் அடங்காப்பிடாரியாக தோன்றும் சரஸ்வதி உள்ளூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி. ஒரு விபத்தை காணநேரும்போது வாழ்வின் நிலையாமையை புரிந்து அவளும் மனம் மாறுகிறாள். நாவல் நேரடியாகவே காந்தியக் கொள்கை, சேவை வழியாக மீட்பு ஆகியவற்றை முன்வைக்கிறது.

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
காந்தியக்கொள்கைகளை விளக்கும் நாவல்களில் தேசபக்தன் கந்தனுக்கு முக்கியமான இடம் உண்டு. காந்திய வழிக்குள்ளேயே நிகழ்ந்த உள்விவாதங்களை இந்நாவல் காட்டுகிறது. பெண்களுக்கு சமூகப்பணியில் இருக்கவேண்டிய இடம் பற்றியும் பேசுகிறது. ஆனால் நேரடியான பிரச்சாரம் இந்நாவலை கலையம்சம் அற்றதாக ஆக்கிவிட்டது.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழ் நாவல்- சிட்டி-சிவபாதசுந்தரம்: கிறிஸ்தவ இலக்கிய சங்கம்

*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpekuId&tag=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D#book1/ தேசபக்தன் கந்தன் இணைய நூலகம்]
{{finalised}} [[Category:Tamil Content]]
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpekuId&tag=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D#book1/ {{finalised}}]
 
[[Category:Tamil Content]]
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்கள்]]

Revision as of 14:45, 3 June 2022

தேசபக்தன் கந்தன்

தேசபக்தன் கந்தன் (1930) கா.சி. வேங்கடரமணி எழுதிய நாவல். இதை அவர் தமிழில் எழுதி பின்னர் ஆங்கிலத்தில் Kandan, The Patriot என்ற பெயரில் அவரே மொழியாக்கம் செய்தார். இது கா.சி. வேங்கடரமணியின் இரண்டாவது நாவல். காந்திய இயக்க சிந்தனைகளை வெளிப்படுத்தும் இந்நாவலில் கந்தன் என்னும் கதாபாத்திரம் காந்தியின் சாயல்கொண்டது என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.

கதைச்சுருக்கம்

மேல்நாட்டில் கல்விகற்று சிற்றூருக்கு திரும்பிவரும் கந்தன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுகிறான். அவனுடன் படித்த ரங்கன் ஐ.சி.எஸ். தேர்வில் வென்று கலெக்டர் வேலை பார்க்கிறான். ரங்கன் காதலிக்கும் ராஜேஸ்வரி கந்தனால் ஈர்க்கப்பட்டு மேல்நாட்டுக் கல்வி கற்றவளாக இருந்தாலும் கிராமத்திற்குச் சென்று தேசநிர்மாணப் பணியில் ஈடுபடுகிறாள். அவளுடைய உறுதியால் ரங்கனும் கலெக்டர் வேலையை துறந்து தேசப்பணிக்கு வருகிறான். ரங்கன் அறிவார்ந்த செயல்பாடுகள் மற்றும் பிரச்சாரம் மூலம் தேசவிடுதலையை அடையலாம் என்கிறான். மாறாக நேரடியான செயல், களப்பணியே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கந்தன் சொல்கிறான். இந்நாவலில் அடங்காப்பிடாரியாக தோன்றும் சரஸ்வதி உள்ளூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி. ஒரு விபத்தை காணநேரும்போது வாழ்வின் நிலையாமையை புரிந்து அவளும் மனம் மாறுகிறாள். நாவல் நேரடியாகவே காந்தியக் கொள்கை, சேவை வழியாக மீட்பு ஆகியவற்றை முன்வைக்கிறது.

இலக்கிய இடம்

காந்தியக்கொள்கைகளை விளக்கும் நாவல்களில் தேசபக்தன் கந்தனுக்கு முக்கியமான இடம் உண்டு. காந்திய வழிக்குள்ளேயே நிகழ்ந்த உள்விவாதங்களை இந்நாவல் காட்டுகிறது. பெண்களுக்கு சமூகப்பணியில் இருக்கவேண்டிய இடம் பற்றியும் பேசுகிறது. ஆனால் நேரடியான பிரச்சாரம் இந்நாவலை கலையம்சம் அற்றதாக ஆக்கிவிட்டது.

உசாத்துணை

[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpekuId&tag=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D#book1/

✅Finalised Page ]