first review completed

எஸ். நவராஜ் செல்லையா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:


== பணி ==
== பணி ==
சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் பேராசிரியராகவும், ஆய்வுத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அழகப்பா கல்லூரி காரைக்குடி, வித்யா மந்திர் சென்னை, டி.வி.எஸ். பள்ளிகள் ஆகியவற்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார்.சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் பேராசிரியராகவும், ஆய்வுத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.  


== விளையாட்டுத்துறை ==
== விளையாட்டுத்துறை ==
விளையாட்டு, உடல் நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, யோகாசனம், மனநலம் குறித்த ஆய்வு நூல்களை எழுதினார். முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். விளையாட்டு இசைப்பாடல்கள் என்னும் ஒலிநாடாவை 1978-ல் வெளியிட்டார். திருக்குறளுக்கு (அறத்துப்பால் மட்டும்) ’திருக்குறள் புதிய உரை’ என்ற உரைநூலை எழுதினார்.
விளையாட்டு, உடல் நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, யோகாசனம், மனநலம் குறித்த ஆய்வு நூல்களை எழுதினார். விளையாட்டு இசைப்பாடல்கள் என்னும் ஒலிநாடாவை 1978-ல் வெளியிட்டார். திருக்குறளுக்கு (அறத்துப்பால் மட்டும்) ’திருக்குறள் புதிய உரை’ என்ற உரைநூலை எழுதினார்.


விளையாட்டுக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் ”ஒட்டப் பந்தயம்” எனும் திரைப்படத்தை இயக்கினார். இதன் கதை, வசனம், பாடல்கள், இசை, பின்னணிக்குரல், நடிப்பு தயாரிப்பு முதலிய பொறுப்புகளையும் ஏற்று திரையிட்டார்.
== இதழியல் ==
விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 
== திரைப்படம் ==
விளையாட்டுக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் ”ஒட்டப் பந்தயம்” எனும் திரைப்படத்தை இயக்கினார். இதன் கதை, வசனம், பாடல்கள், இசை, பின்னணிக்குரல், நடிப்பு தயாரிப்பு முதலிய பொறுப்புகளையும் ஏற்றிருந்தார். ([https://erosnow.com/movie/watch/1065358/ottapandayam ஓட்டப்பந்தயம்])
[[File:Navraj.jpg|thumb|திருக்குறள் புதிய உரை]]
[[File:Navraj.jpg|thumb|திருக்குறள் புதிய உரை]]


Line 122: Line 126:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/155571/1/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86-%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE.html எஸ். நவராஜ் செல்லையா | ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua]
* [https://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-48.htm எஸ். நவராஜ் செல்லையா நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்]
*https://youtu.be/t2fR9NlyeII
*https://erosnow.com/movie/watch/1065358/ottapandayam ஓட்டப்பந்தயம் திரைப்படம்
{{first review completed}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 00:13, 23 April 2022

எஸ். நவராஜ் செல்லையா

எஸ். நவராஜ் செல்லையா (1937 - 2001) தமிழ் எழுத்தாளர். விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை சார்ந்த நூல்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 - 2011-ல் தமிழ்நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

பணி

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அழகப்பா கல்லூரி காரைக்குடி, வித்யா மந்திர் சென்னை, டி.வி.எஸ். பள்ளிகள் ஆகியவற்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார்.சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் பேராசிரியராகவும், ஆய்வுத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

விளையாட்டுத்துறை

விளையாட்டு, உடல் நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, யோகாசனம், மனநலம் குறித்த ஆய்வு நூல்களை எழுதினார். விளையாட்டு இசைப்பாடல்கள் என்னும் ஒலிநாடாவை 1978-ல் வெளியிட்டார். திருக்குறளுக்கு (அறத்துப்பால் மட்டும்) ’திருக்குறள் புதிய உரை’ என்ற உரைநூலை எழுதினார்.

இதழியல்

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

திரைப்படம்

விளையாட்டுக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் ”ஒட்டப் பந்தயம்” எனும் திரைப்படத்தை இயக்கினார். இதன் கதை, வசனம், பாடல்கள், இசை, பின்னணிக்குரல், நடிப்பு தயாரிப்பு முதலிய பொறுப்புகளையும் ஏற்றிருந்தார். (ஓட்டப்பந்தயம்)

திருக்குறள் புதிய உரை

விருதுகள்

  • உடற்கல்வித் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய நவராசு செல்லையாவிற்கு தமிழ்நாடு அரசு "உடற்கல்வி கலைமாமணி” என்ற விருதை அளித்தது.
  • ஒலிம்பிக் பந்தயத்தின் கதை, விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும், விளையாட்டுக்களின் கதைகள் முதலிய நூல்களுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
  • தமிழ் நாட்டு சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது.
  • ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்து விளங்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு "உடற்கல்வி ஜீவ ஜோதி” என்ற விருதையும் வழங்கி வந்தார்.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

  • அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்
  • கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
  • இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்
  • இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்
  • கடவுள் கைவிடமாட்டார்
  • கால்பந்தாட்டம்
  • கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
  • கோகோ ஆட்டம்
  • கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
  • மென் பந்தாட்டம்
  • நீங்களும் நோயில்லாமல் வாழலாம்
    நல்ல கதைகள்
  • நமக்கு நாமே உதவி
  • நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்
  • நீங்களும் உடலழகு பெறலாம்
  • ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்
  • புதுப்புது சிந்தனைகள்
  • சிந்தனைச் சுற்றுலா
  • தேகத்தைத் தெரிந்து கொள்வோம்
  • உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்
  • வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்
  • வள்ளுவர் வணங்கிய கடவுள்
  • விளையாட்டு ஆத்திசூடி
  • விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி
  • விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
  • விளையாட்டு உலகில் வீரக் கதைகள்
  • அனுபவக் களஞ்சியம்
  • இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்
  • குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
  • குறளுக்குப் புதிய பொருள்
  • மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
  • முக அழகைக் காப்பது எப்படி
  • நலமே நமதுபலம்
  • நல்ல நாடகங்கள்
  • நிமிர்ந்து நில் துணிந்து செல்
  • நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்
  • நீங்களும் நோயில்லாமல் வாழலாம்
  • நீங்களும் வலிமையோடு வாழலாம்
  • நீங்களும் உயரமாக வளரலாம்
  • பண்பு தரும் அன்புக்கதைகள்
  • பேரின்பம் தரும் பிராணாயாமம்
  • பாதுகாப்புக் கல்வி
  • பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்
  • சடுகுடு ஆட்டம்
  • சதுரங்கம் விளையாடுவது எப்படி?
  • திருக்குறள் புதிய உரை
  • தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்
  • உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது ரகசியங்கள்
  • உடற்கல்வி என்றால் என்ன?
  • உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்
  • உலக நாடுகளில் உடற்கல்வி
  • உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்
  • வாழ்க்கைப் பந்தயம்
  • விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
  • விளையாட்டுக்களின் விதிகள்
  • விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
  • விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
  • அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்
  • பலம் தரும் பத்து நிமிடப்பயிற்சிகள்
  • நீங்களும் இளமையாக வாழலாம்
  • பெண்களும் பேரழகு பெறலாம்
  • உபயோகமுள்ள உடல்நலக்குறிப்புகள்
  • உடலுக்கு அழகு தரும் எடைப்பயிற்சிகள்
  • விளையாட்டு விருந்து
  • விளையாட்டுக்களில் விநோதங்கள்
  • அவமானமா அஞ்சாதே
  • குண்டான உடம்பை குறைப்பது எப்படி?
  • பயன்தரும் யோகாசனங்கள்
  • தெரிந்தால் சமயத்தில் உதவும்
  • உடலழகுப் பயிற்சி முறைகள்
  • விளையாட்டு அமுதம்
  • விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்
  • விளையாட்டு உலகம்
  • வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்
  • நல்ல நல்ல கதைப்பாடல்கள்
  • விளையாட்டுக்களில் வினாடி வினா விடை
  • சிந்தனைப்பந்தாட்டம்
  • நவனின் நாடகங்கள்
  • கேரம் விளையாடுவது எப்படி?
  • வளைகோல் பந்தாட்டம்
  • மறைந்துகிடக்கும் மனித சக்தி
  • பூப்பந்தாட்டம்
  • கூடைப்பந்தாட்டம்
  • வளையப்பந்தாட்டம்
  • செங்கரும்பு
  • விளையாட்டுச் சிந்தனைகள்
  • ஒலிம்பிக் பந்தயத்தின் கதை
  • உடல்நல உடற்கல்விப் பாடநூல் (6-ஆம் வகுப்பு - 12-ஆம் வகுப்பு)
  • நல்ல பாடல்கள்
  • வெற்றி விளையாட்டு காட்டுகிறது
  • கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்
  • விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி?
  • பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்?
  • விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்
  • நவரச நாடகங்கள்
  • தெய்வமலர்
  • வானொலியில் விளையாட்டுகள்
ஆங்கிலம்
  • Physical and Health Education vol 6 to vol 10
  • Quotations on Sports and Games
  • How To Break Ties in Sports and Games
  • PHYSICAL FITNESS and HEALTH
  • G.K. in Sports & Games

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.