under review

நல்வழுதியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
நல்வழுதியார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று பரிபாடலில் உள்ளது. வையை ஆற்றைப் பற்றியும், அதில் புதுப்புனல் வரும்போதும் நிகழும் விழாவைப்பற்றியும் பாடல் உரைத்துள்ளது.
நல்வழுதியார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று பரிபாடலில் உள்ளது. வையை ஆற்றைப் பற்றியும், அதில் புதுப்புனல் வரும்போதும் நிகழும் விழாவைப் பற்றியும் இப்பாடலில் பாடினார்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
Line 17: Line 17:


===== பாடல்வழி அறியவரும் செய்திகள் =====
===== பாடல்வழி அறியவரும் செய்திகள் =====
* வையை புதுப்புனலின் போது பூம்புனல் ஆறு என்று சொல்லுமாறு கரையிலுள்ள அகில் சந்தனம் முதலிய மரங்களை அடித்துக் கொண்டு வரும்.
* வையை புதுப்புனலின் போது பூம்புனல் ஆறு என்று சொல்லுமாறு கரையிலுள்ள அகில், சந்தனம் முதலிய மரங்களை அடித்துக் கொண்டு வரும்.
* புதுப்புனல் வந்த செய்தி அறிந்த மதுரை மக்கள் புத்தாடை அணிந்து குதிரை மீதும், யானை மீதும் வந்து வையை கரை சேர்வதை பார்த்தனர்.
* புதுப்புனல் வந்த செய்தி அறிந்த மதுரை மக்கள் புத்தாடை அணிந்து குதிரை மீதும், யானை மீதும் வந்து வையை கரை சேர்வதைப் பார்த்தனர்.
* குழவு, முழவு, மத்தாரி, தடாரி, தண்ணுமை, மகுளி முதலிய இசைக்கருவிகளை வாசித்தனர்.
* குழவு, முழவு, மத்தாரி, தடாரி, தண்ணுமை, மகுளி முதலிய இசைக்கருவிகளை வாசித்தனர்.
* பல வகையான வண்ண மலர்களைப் போர்த்திக் கொண்டு வையை வரும் காட்சி விவரிக்கப்பட்டது.
* பல வகையான வண்ண மலர்களைப் போர்த்திக் கொண்டு வையை வரும் காட்சி விவரிக்கப்பட்டது.
Line 24: Line 24:
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
<poem>
<poem>
மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை,
எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;
தேறித் தெளிந்து, செறி இருள் மால் மலை;
பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;
துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்:
கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே
போர் அடு தானையான் யாறு
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக்
காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,
நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 17:44, 21 April 2022

நல்வழுதியார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று பரிபாடலில் உள்ளது. வையை ஆற்றைப் பற்றியும், அதில் புதுப்புனல் வரும்போதும் நிகழும் விழாவைப் பற்றியும் இப்பாடலில் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சங்க காலப் புலவர். வேறு செய்திகள் தெரியவில்லை.

இலக்கிய வாழ்க்கை

பரிபாடலில் பன்னிரெண்டாவது பாடல் இவர் பாடியது. வையை ஆற்றைப் பற்றியும் அதன் புதுப்புனல் விழா பற்றியும் இந்தப்பாடலில் கூறப்பட்டுள்ளது. நந்நாகனார் என்னும் இசைவாணர் இதற்கு இசை அமைத்து பாலை யாழ்ப் பண்ணில் பாடினார்.

பரிபாடல் தலைப்புகள்
  • வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்
  • புனல் வரவு காண மகளிர் சென்ற வகை
  • நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்
  • கண்டவர் காணவருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக் கூறல்
  • கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக் காரணம் உரைத்தல்
  • கேட்டன கூறல்
  • நீர்விழவின் சிறப்பு
  • வையையை வாழ்த்துதல்
பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • வையை புதுப்புனலின் போது பூம்புனல் ஆறு என்று சொல்லுமாறு கரையிலுள்ள அகில், சந்தனம் முதலிய மரங்களை அடித்துக் கொண்டு வரும்.
  • புதுப்புனல் வந்த செய்தி அறிந்த மதுரை மக்கள் புத்தாடை அணிந்து குதிரை மீதும், யானை மீதும் வந்து வையை கரை சேர்வதைப் பார்த்தனர்.
  • குழவு, முழவு, மத்தாரி, தடாரி, தண்ணுமை, மகுளி முதலிய இசைக்கருவிகளை வாசித்தனர்.
  • பல வகையான வண்ண மலர்களைப் போர்த்திக் கொண்டு வையை வரும் காட்சி விவரிக்கப்பட்டது.

பாடல் நடை

மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை,
எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;
தேறித் தெளிந்து, செறி இருள் மால் மலை;
பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;
துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்:
கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே
போர் அடு தானையான் யாறு
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக்
காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,
நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.