ஆழி வீரமணி: Difference between revisions
Logamadevi (talk | contribs) |
|||
| Line 3: | Line 3: | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ஆழி வீரமணி கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் முதனை கிராமத்தில் | ஆழி வீரமணி கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் முதனை கிராமத்தில் செப்டம்பர் 13, 1984-ல் பிறந்தார். பெற்றோர் அ. உத்தண்டி, மலர்கொடி. உடன்பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தம்பி. முதனை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
Revision as of 18:08, 22 July 2024

ஆழி வீரமணி (அ.உ.வீரமணி) (பிறப்பு: செப்டம்பர் 13, 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். கவிதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
ஆழி வீரமணி கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் முதனை கிராமத்தில் செப்டம்பர் 13, 1984-ல் பிறந்தார். பெற்றோர் அ. உத்தண்டி, மலர்கொடி. உடன்பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தம்பி. முதனை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஆழி வீரமணி விஜயலட்சுமியை மணந்தார். மகள் நதிமலர். மகன் மகிழ்நிலவன். தற்போது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.
அரசியல் வாழ்க்கை
ஆழி வீரமணி பெரியாரிய, இடதுசாரி சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவர். ஈழப்போரின்போது சிதம்பரத்தில் உள்ளூர் செய்தி இதழில் பணி செய்தார். நண்பர்களுடன் இணைந்து 'தமிழ் ஈழ ஆதரவு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு' என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழ், தமிழர் உரிமை சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தார்.
இதழியல்
ஆழி வீரமணி கல்லூரியில் பயிலும்போது 'ஆழி' என்ற சிற்றிதழைத் தொடங்கி, 6 இதழ்கள் வெளியிட்டுள்ளார். சென்னையில் 'உழவர் ஓசை', 'நவீன வேளாண்மை', 'நிலாப்பெண்ணே' ஆகிய பத்திரிகைகளில் பணி ஆற்றினார். 2011 முதல் தினகரனில் பத்திரிகையாளராக உள்ளார். சென்னை தினகரன் அலுவலகத்தில் 'விவசாயி', 'கிச்சன்' ஆகிய இணைப்பிதழ்களின் ஆசிரியர்.
இலக்கிய வாழ்க்கை
ஆழி வீரமணியின் முதல் படைப்பு 'ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை' கவிதைத்தொகுப்பு 2014-ல் வெளியானது. 'ஆழி', 'ஆவாரம்பூ', 'அம்ருதா', குங்குமம், 'களம்', 'நான்காவது கோணம்', 'அனுமதி' ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகின. இலக்கிய விழாக்களில் மதிப்புரைகள் ஆற்றியுள்ளார். இமையம், கரிகாலன்,யவனிகா ஸ்ரீராம் ஆகியோர் ஆதர்ச எழுத்தாளர்கள்.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.