சேதாரம்பட்டு சமணப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 17: Line 17:
* [http://www.ahimsaiyatrai.com/p/blog-page_173.html AHIMSAI YATRAI: தமிழகத்தில் சமணம்  ]
* [http://www.ahimsaiyatrai.com/p/blog-page_173.html AHIMSAI YATRAI: தமிழகத்தில் சமணம்  ]
* புகைப்படங்கள் உதவி நன்றி - https://youtu.be/WTtgGVfU0D4
* புகைப்படங்கள் உதவி நன்றி - https://youtu.be/WTtgGVfU0D4
{{Standardised}}
{{First Review Completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:26, 19 April 2022

சேதாரம்பட்டு சமணப் பள்ளி
சேதாரம்பட்டு சமணப்பள்ளி

சேதாரம்பட்டு - பஞ்ச பாண்டவர் திப்பை ( பொ.யு. 9-10 ஆம் நூற்றாண்டு) வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஒரு சமணக்குகை

இடம்

வடஆர்க்காடு மாவட்டத்தில் சேதாரம்பட்டு என்னும் ஊரிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் மேற்காகச் சென்றால் ‘பஞ்ச பாண்டவர் திப்பை’ என அழைக்கப்படும் குன்றினை அடையலாம். இக்குன்றின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான குகை ஒன்று காணப்படுகிறது.

குகை

சேதாரம்பட்டு சமணப்பள்ளி
சேதாரம்பட்டு சமணப்பள்ளி
சேதாரம்பட்டு சமணப்படுக்கை
சேதாரம்பட்டு சமணப்படுக்கை

ஒன்றன் மீது ஒன்றாகத் திகழும் பாறைகளு மேலுள்ளது முன்னோக்கி நீண்டிருப்பதாலும் கீழுள்ளது சற்று பள்ளமாக இருப்பதாலும் இந்த குகை ஏற்பட்டிருக்கிறது. இயற்கையாக அமைந்த இப்பள்ளமான குகைப்பகுதியில் சமணத் துறவியர் உறைந்திருந்தமையை அறிவுறுத்தும் வகையில் சில கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. பிற இடங்களிலுள்ள குகைப்பள்ளிகளில் காணப்பெறும் படுக்கைகளைப் போன்றே இவையும் வரிசையாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றுள் ஒன்றில் முக்குடை வடிவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த குகையில் சமண சமயச் சிற்பங்களோ , கல்வெட்டுக்களோ எவையும் காணப்படவில்லை. இதனால் இங்கு எப்போது முதல் சமணத் துறவியர் வசிக்கலாயினர் என்பதை வரையறை செய்ய இயலவில்லை. வடஆர்க்காடு, தென்னார்க்காடு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் காணப்படும் குகைப்பள்ளிகளையும், அவற்றிலுள்ள படுக்கைகளையும் க`ருத்தில் கொண்டு, இங்கும் பொயு. 9 அல்லது 10-ஆம் நூற்றாண்டில் சமணத் துறவியர் வாழ்ந்திருக்கக் கூடும். (ஏ.ஏகாம்பரநாதன்)

உசாத்துணை

Template:First Review Completed