மீரா நாயர்: Difference between revisions

From Tamil Wiki
Corrected errors in article
Corrected typo errors in article
Line 13: Line 13:
1978 மற்றும் 1979 க்கு இடையில் ஹார்வர்டில் தனது திரைப்பட ஆய்வறிக்கைக்காக 'ஜமா மஸ்ஜித் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (Jama Masjid Street Journal) என்ற தலைப்பில் ஒரு கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படத்தைத் தயாரித்தார். பதினெட்டு நிமிட ஆவணப்படத்தில் பழைய டெல்லியின் தெருக்களை ஆராய்ந்து, உள்ளூர்வாசிகளுடன் வாழ்வியலை ஆவணப்படுத்தினார்.  

1982 -ம் ஆண்டில், தனது இரண்டாவது ஆவணப்படத்தை 'சோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ (So Far from India) என்ற தலைப்பில் தயாரித்தார். இது இந்திய செய்தித்தாள் விற்பனையாளர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி அவர் வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் வேளையில் அவர் செல்லும் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதைகளின் கதையை சொல்கிறது. இத்திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட விழா மற்றும் நியூயார்க்கின் குளோபல் வில்லேஜ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.
1982-ம் ஆண்டில், தனது இரண்டாவது ஆவணப்படத்தை 'சோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ (So Far from India) என்ற தலைப்பில் தயாரித்தார். இது இந்திய செய்தித்தாள் விற்பனையாளர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி அவர் வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் வேளையில் அவர் செல்லும் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதைகளின் கதையை சொல்கிறது. இத்திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட விழா மற்றும் நியூயார்க்கின் குளோபல் வில்லேஜ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.

1984 -ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது மூன்றாவது ஆவணப்படம், இந்தியா கேபரே (India Cabaret) ஆபாச நடனமாடும் பெண்கள் சுரண்டப்படுவதை வெளிப்படுத்தியது. மீரா இதற்காக 1,30,000 டாலர்கள் செலவழிக்க வேண்டியதாக இருந்தது. 59 நிமிட இந்த ஆவணப்படம் இரண்டு மாத காலப்பகுதியில் படமாக்கப்பட்டது. ஆனால், தனது சொந்த குடும்பத்தினரால் விமர்சிக்கப்பட்டது.  
1984-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது மூன்றாவது ஆவணப்படம், இந்தியா கேபரே (India Cabaret) ஆபாச நடனமாடும் பெண்கள் சுரண்டப்படுவதை வெளிப்படுத்தியது. மீரா இதற்காக 1,30,000 டாலர்கள் செலவழிக்க வேண்டியதாக இருந்தது. 59 நிமிட இந்த ஆவணப்படம் இரண்டு மாத காலப்பகுதியில் படமாக்கப்பட்டது. ஆனால், தனது சொந்த குடும்பத்தினரால் விமர்சிக்கப்பட்டது.  

==திரைப்படங்கள்==
==திரைப்படங்கள்==
Line 24: Line 24:
16 -ம் நூற்றாண்டு இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ’காமசூத்ரா: ய டேல் ஆஃப் லவ்’ (Kama Sutra: A Tale of Love 1996)  கென்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் 'தங்க நத்தை’ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் இத்திரைப்படம் வெளியான நேரத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதுடன், அதன் பாலியல் காட்சிகள் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.<ref>[https://www.indiatoday.in/education-today/gk-and-current-affairs/story/top-9-films-banned-in-india-255450-2015-06-03 இந்தியாவில் தடை செய்ய்ப்பட்ட சிறந்த ஒன்பது திரைப்படங்கள் - இந்தியா டுடே]</ref>

ஒரு பஞ்சாபி இந்திய திருமணத்தின் கதையைச் சொல்லும் சப்ரினா தவான் எழுத்தில்  'மான்சூன் வெட்டிங்’ (Monsoon Wedding) 2001 -ம் ஆண்டு வெளியானது. மீரா நாயருக்கு பழக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் சிலரை நடிக்க வைத்து, தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் ’கோல்டன் லயன்’ (Golden Lion) விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் பெண் மீரா நாயர் என்ற பெருமைக்குரியவர்.
ஒரு பஞ்சாபி இந்திய திருமணத்தின் கதையைச் சொல்லும் சப்ரினா தவான் எழுத்தில்  'மான்சூன் வெட்டிங்’ (Monsoon Wedding) 2001-ம் ஆண்டு வெளியானது. மீரா நாயருக்கு பழக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் சிலரை நடிக்க வைத்து, தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் ’கோல்டன் லயன்’ (Golden Lion) விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் பெண் மீரா நாயர் என்ற பெருமைக்குரியவர்.

பின்னர் கோல்டன் குளோப் விருதை வென்ற 'ஹிஸ்டீரிக்கல் பிளைண்ட்னஸ்’ Hysterical Blindness (2002) திரைப்படத்தை இயக்கினார் மீரா நாயர். அதைத் தொடர்ந்து வில்லியம் மேக்பீஸ் தாக்கரேவின் புகழ்பெற்ற படைப்பான ’வேனிட்டி ஃபேர்’ (Vanity Fair 2004) திரைப்படத்தை இயக்கினார்.

Line 73: Line 73:

'''தி ரெலுக்டண்ட் ஃபண்டமெண்டல்ஸ் (The Reluctant Fundamentalist, 2011)'''
'''தி ரெலுக்டண்ட் ஃபண்டமெண்டல்ஸ் (The Reluctant Fundamentalist, 2011)'''
*43வது கோவா சர்வதேச திரைப்பட விழா
*43-வது கோவா சர்வதேச திரைப்பட விழா
**சிறப்பு நடுவர் தேர்வு விருது - வெற்றி
**சிறப்பு நடுவர் தேர்வு விருது - வெற்றி
**விழாவின் இறுதிப்படம் (Closing Film)
**விழாவின் இறுதிப்படம் (Closing Film)

Revision as of 13:14, 12 July 2024

மீரா நாயர் (2022)

மீரா நாயர் (Mira Nair) இந்தியாவில் பிறந்து, வளர்ந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ள திரைப்பட இயக்குநர். அவருடைய ’சலாம் பாம்பே!’ (1988) திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருதினைப் பெற்றதுடன் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருதுப்பிரிவில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரைப்பையும் பெற்றுத் தந்தது. தேசிய திரைப்பட விருது (National Award) மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். கோல்டன் குளோப் விருதுகள், பாஃப்தா (BAFTA) விருதுகள் மற்றும் பிலிம்ஃபேர் விருதுகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிறப்பு & கல்வி

ஓரிசா தலைநகர் புவனேஸ்வர் அருகில் உள்ள ரூர்கெலா என்ற கிராமத்தில் பிறந்தவர் மீரா நாயர். இவரது தந்தை இந்திய ஆட்சிப் பணியில் (ஐ.ஏ.எஸ்) பணிபுரிந்தவர். தாய் சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 18 வயது வரை உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு கட்டுரையை ஏனைய அனைத்து மாணவர்களும் அப்படியே மனப்பாடம் செய்து எழுதும் போது மீராவின் கட்டுரைகள் அவரது கற்பனைகளையும் உள்ளடக்கியிருந்தது. இதைப்பார்த்த தலைமையாசிரியை மீராவிடம் அசாத்தியமான திறமைகள் இருப்பதை அறிந்துகொண்டார். மீராவின் எதிர்காலம் பற்றிய கேள்வி தந்தைக்கு எழும்போது “அண்ணன்களை வெளியூர் அனுப்பி படிக்கவைத்தது போல என்னையும் அனுப்புங்கள்” என்றார்.

இதனால் சிம்லாவில் உள்ள தாரா ஹால் எனும் கான்வென்ட் பள்ளியில் மேல்நிலைப்படிப்பை தொடர்ந்தார். அதன் பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான கல்லூரியான மிராண்டா ஹவுஸில் சமூகவியலில் தேர்ச்சி பெற்றார். தனது 19-ம் வயதில் ஹார்வர்ட் பழ்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவித்தொகை (Scholarship) பெற்று அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு தனது மேற்படிப்பை சமூகவியலில் தொடர்ந்தார்.

துவக்கம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய வருங்கால கணவரும், புகைப்படக்கலைஞருமான மிட்ச் எப்ஸ்டீன் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபோரேவாலா ஆகியோரைச் சந்தித்தார் மீரா. பின்னர் படிப்படியாக ஆவணப் படங்களை எடுக்கத்துவங்கினார்.

1978 மற்றும் 1979 க்கு இடையில் ஹார்வர்டில் தனது திரைப்பட ஆய்வறிக்கைக்காக 'ஜமா மஸ்ஜித் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (Jama Masjid Street Journal) என்ற தலைப்பில் ஒரு கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படத்தைத் தயாரித்தார். பதினெட்டு நிமிட ஆவணப்படத்தில் பழைய டெல்லியின் தெருக்களை ஆராய்ந்து, உள்ளூர்வாசிகளுடன் வாழ்வியலை ஆவணப்படுத்தினார்.

1982-ம் ஆண்டில், தனது இரண்டாவது ஆவணப்படத்தை 'சோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ (So Far from India) என்ற தலைப்பில் தயாரித்தார். இது இந்திய செய்தித்தாள் விற்பனையாளர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி அவர் வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் வேளையில் அவர் செல்லும் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதைகளின் கதையை சொல்கிறது. இத்திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட விழா மற்றும் நியூயார்க்கின் குளோபல் வில்லேஜ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.

1984-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது மூன்றாவது ஆவணப்படம், இந்தியா கேபரே (India Cabaret) ஆபாச நடனமாடும் பெண்கள் சுரண்டப்படுவதை வெளிப்படுத்தியது. மீரா இதற்காக 1,30,000 டாலர்கள் செலவழிக்க வேண்டியதாக இருந்தது. 59 நிமிட இந்த ஆவணப்படம் இரண்டு மாத காலப்பகுதியில் படமாக்கப்பட்டது. ஆனால், தனது சொந்த குடும்பத்தினரால் விமர்சிக்கப்பட்டது.

திரைப்படங்கள்

சூனி தாராபொரேவாலாவின் திரைக்கதையுடன் மீரா நாயர் இயக்கிய முதல் திரைப்படமான சலாம் பாம்பே! (1988), கேன்ஸ் திரைப்பட விழாவில் Camera D’or மற்றும் Prix du Public விருதினைப் பெற்றது. இந்தியாவிற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது நியமனத்தையும் பெற்றுத் தந்தது. அந்தத் திரைப்படத்தின் மூலம் பெற்ற வருமானத்தை அவர், இந்தியாவில் சலாம் பாலக் டிரஸ்ட் என்ற பெயரில், தெருவோரக் குழந்தைகளுக்கான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தினார்.

டென்சில் வாஷிங்க்டன் மற்றும் சரிதா சௌத்ரி நடிப்பில் வெளியான 'மிஸ்ஸிஸிப்பி மசாலா’ (Mississippi Masala 1991) திரைப்படம் அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நாடிழந்த ஒரு உகாண்டா-இந்தியக் குடும்பத்தைப்பற்றியது. 1992-ம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில் (Sundance Film Festival) விமர்சகர்களின் பாராட்டைப்பெற்றதுடன் வெனிஸ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது.

16 -ம் நூற்றாண்டு இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ’காமசூத்ரா: ய டேல் ஆஃப் லவ்’ (Kama Sutra: A Tale of Love 1996) கென்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் 'தங்க நத்தை’ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் இத்திரைப்படம் வெளியான நேரத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதுடன், அதன் பாலியல் காட்சிகள் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.[1]

ஒரு பஞ்சாபி இந்திய திருமணத்தின் கதையைச் சொல்லும் சப்ரினா தவான் எழுத்தில் 'மான்சூன் வெட்டிங்’ (Monsoon Wedding) 2001-ம் ஆண்டு வெளியானது. மீரா நாயருக்கு பழக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் சிலரை நடிக்க வைத்து, தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் ’கோல்டன் லயன்’ (Golden Lion) விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் பெண் மீரா நாயர் என்ற பெருமைக்குரியவர்.

பின்னர் கோல்டன் குளோப் விருதை வென்ற 'ஹிஸ்டீரிக்கல் பிளைண்ட்னஸ்’ Hysterical Blindness (2002) திரைப்படத்தை இயக்கினார் மீரா நாயர். அதைத் தொடர்ந்து வில்லியம் மேக்பீஸ் தாக்கரேவின் புகழ்பெற்ற படைப்பான ’வேனிட்டி ஃபேர்’ (Vanity Fair 2004) திரைப்படத்தை இயக்கினார்.

’ஹாரி பாட்டர் அண்ட் தி ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ்’ Harry Potter and the Order of the Phoenix (2007) படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வரும் போது, தி நேம்சேக் (The Namesake) திரைப்படத்தில் பணிபுரிந்ததால் ஹாரிபாட்டர் திரைப்படத்தை தவிர்க்க வேண்டியதாயிற்று. புலிட்சர் பரிசு பெற்ற ஜும்பா லஹிரியின் (Jhumpa Lahiri) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, சூனி தாராபோரேவாலாவின் திரைக்கதையில் நியூயார்க் நகர சமூகத்துடன் பொருந்த விரும்பும் இந்திய குடியேறிகளில் ஒருவரின் மகனைப் பற்றிய இப்படம் டார்ட்மவுத் திரைப்பட விருதையும் மற்றும் பாலிவுட் திரைப்பட விருதுகளில் பிரைட் ஆஃப் இந்தியா விருதையும் வென்றது. இதைத் தொடர்ந்து ஹிலாரி ஸ்வாங்க் மற்றும் ரிச்சர்ட் கெரே நடித்த அமெலியா ஏர்ஹார்ட் எனும் விமானியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான அமெலியா (2009) வெளிவந்தது.

மொஹ்சின் ஹமீத் (Mohsin Hamid) எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட 'தி ரிலக்டன்ட் ஃபண்டமெண்டலிஸ்ட்’ (The Reluctant Fundamentalist 2012) என்ற த்ரில்லர் படம் வெனிஸ் திரைப்பட விழாவில் விமர்சன ரீதியான பாராட்டுக்களை பெற்றது. வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான 'குயின் ஆஃப் கட்வே’ (Queen of Katwe), திரைப்படம் உகாண்டா சதுரங்க மேதையான பியோனா முடேசியின் கதையை அடிப்படையாகக் கொண்டது[2].

மார்ச் 2021-ல், மீரா நாயர் டிஸ்னி+ நிறுவனத்திற்காக பத்து அத்தியாயங்கள் கொண்ட 'நேஷ்னல் ட்ரெஷர்’ (National Treasure) என்கின்ற தொலைக்காட்சித் தொடரை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது[3].

Mira Nair in Venice International Film Festival
வெனிஸ் திரைப்பட விழாவில் மீரா நாயர் (2020)

விருதுகள்

சலாம் பாம்பே! (Salaam Bombay! - 1988)

வெற்றி

  • கென்ஸ் திரைப்பட விழா - சிறந்த திரைப்படம் (Caméra d'Or)
  • தேசிய விருதுகள் (இந்தியா)
    • சிறந்த திரைப்படம் (ஹிந்தி)
    • சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஷாஃபிக் சையத்)

பரிந்துரை

  • ஆஸ்கார் விருதுகள் - சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம்
  • பாஃப்தா விருதுகள் - ஆங்கில மொழி அல்லாத சிறந்த சிறந்த திரைப்படம்
  • கோல்டன் குளோப் விருதுகள் - சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம்
  • ஃபிலிம்ஃபேர் விருதுகள் - சிறந்த இயக்குனர்

மிசிசிபி மசாலா (Mississippi Masala, 1991)

  • வெனிஸ் திரைப்பட விழா (வெற்றி)
    • சிறந்த திரைக்கதை (சூனி தாராபோரேவாலா)
    • சிறந்த திரைப்படம் (சுயாதீன விருதுகள்)

மான்சூன் வெட்டிங் (Monsoon Wedding, 2001)

வெற்றி

  • வெனிஸ் திரைப்பட விழா
    • சிறந்த திரைப்படத்திற்கான பொன் சிங்கம் (Golden Lion)
    • சிறந்த திரைப்படம் (சுயாதீன விருதுகள்)

பரிந்துரை

  • பாஃப்தா விருதுகள் - சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம்
  • கோல்டன் குளோப் விருதுகள் - சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம்

வேனிடி ஃபேர் (Vanity Fair, 2004)

  • வெனிஸ் திரைப்பட விழா (பரிந்துரை)
    • சிறந்த திரைப்படத்திற்கான பொன் சிங்கம் (Golden Lion)

தி ரெலுக்டண்ட் ஃபண்டமெண்டல்ஸ் (The Reluctant Fundamentalist, 2011)

  • 43-வது கோவா சர்வதேச திரைப்பட விழா
    • சிறப்பு நடுவர் தேர்வு விருது - வெற்றி
    • விழாவின் இறுதிப்படம் (Closing Film)

குயின் ஆஃப் கத்வே (Queen of Katwe, 2016)

  • டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா (பரிந்துரை)
    • பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படம்

குறும்படங்கள்

  • தி டே தி மெர்சடிஸ் பிகம் எ ஹேட் (The Day the Mercedes Became a Hat) (1993)
  • பாகிஸ்தான் (2002) - 11 9 01 செப்டம்பர் 11 (ஆந்தாலஜி)
  • மைக்ரேஷன் (Migration) (2007)
    • பெயர்: எய்ட்ஸ் ஜாகோ
    • மீரா நாயருடன் சந்தோஷ் சிவன், விஷால் பரத்வாஜ் மற்றூம் ஃபர்ஹான் அக்தர் என நான்கு பேரும் சேர்ந்து தயாரித்த நான்கு குறும்படங்கள் கொண்ட திரைப்படம்
  • கோஷர் வெஜிடேரியன் (Kosher Vegetarian) (2008)
    • பெயர்: நியூயார்க், ஐ லவ் யூ (ஆந்தாலஜி)
  • ஹவ் கேன் இட் பீ? (How Can It Be?) (2008)
    • பெயர்: 8 (8 குறும்படங்கள் கொண்ட திரைப்படம்)
  • காட் ரூம் (God Room) (2014)
    • வோர்ட்ஸ் வித் காட்ஸ் (ஆந்தாலஜி)

ஆவணப்படங்கள்

  • ஜமா ஸ்ட்ரீட் மஜித் ஜெர்னல் (Jama Street Masjid Journal, 1979)
  • சோ ஃபார் ஃப்ரம் இந்தியா (So Far From India, 1982)
  • சில்ரன் ஆஃப் எ டிசையர்டு செக்ஸ் (Children of a Desired Sex, 1997)

தொலைக்காட்சி

திரைப்படங்கள்

  • இந்தியா கேப்ரெட் (Jama Masjid Street Journal, 1985) (ஆவணப்படம்)
  • மை ஓன் கண்ட்ரி (My Own Country, 1998)
  • ஹிஸ்ட்ரிகள் ப்ளைண்ட்னஸ் (Hysterical Blindness, 2002)

தொடர்கள்

  • எ சுய்டபிள் பாய் (A Suitable Boy) (2020) - 5 அத்தியாயங்கள்
  • நேஷனல் ட்ரெஷர்: எட்ஜ் ஆஃப் ஹிஸ்டரி (National Treasure: Edge of History) (2022)
    • பெயர்: ”ஐயம் எ கோஸ்ட்” அத்தியாயம் (Episode: "I'm a Ghost")

அடிக்குறிப்புகள்

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.