under review

சித்ரலேகா மௌனகுரு: Difference between revisions

From Tamil Wiki
(Added display-text to hyperlinks)
m (Reviewed by Je)
Line 52: Line 52:
*[http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/ ஈழத்துப் புதின இலக்கியம் பற்றி]
*[http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/ ஈழத்துப் புதின இலக்கியம் பற்றி]
*[https://tamil.news.lk/news/business/item/10754-2016-04-05-09-07-20 பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு உள்ளிட்டோர் கௌரவிப்பு (news.lk)]
*[https://tamil.news.lk/news/business/item/10754-2016-04-05-09-07-20 பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு உள்ளிட்டோர் கௌரவிப்பு (news.lk)]
{{first review completed}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:46, 22 April 2022

சித்ரலேகா
சித்ரலேகா மௌனகுரு

சித்ரலேகா மௌனகுரு இலக்கிய வரலாற்றாசிரியர், இலக்கியத் தொகுப்பாளர், பேராசிரியர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட இலக்கிய விமர்சகர். ஈழச்சூழலில் பெண்நிலைவாத சிந்தனைகளை அறிமுகம் செய்தவர்

பிறப்பு, கல்வி

சித்திரலேகா மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞரும், சமூகத் தொண்டருமான திரு. பி. வி. கணபதிப்பிள்ளைக்கும் மகேஸ்வரிக்கும் மூத்தமகளாக மட்டக்களப்பில் பிறந்தார். மட்டக்களப்பு அரசரடி பாடலாலை, வின்சன்ட் மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நெதர்லாந்திலுள்ள ஹேக் சமூகக் கற்கை நிறுவனம் முதலியவற்றில் உயர் பட்டங்களைப் பெற்றார். பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

இலங்கைப் பல்கலைக்கழகம் - கொழும்பு வளாகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டதாரி. கொழும்பில் பயில்கையில் பேராசிரியர் கைலாசபதி, குமாரி ஜயவர்தனா ஆகியோரால் கவரப்பட்டு இடதுசாரிச் சிந்தனை கொண்டவராக ஆனார்.

தனிவாழ்க்கை

சித்ரலேகா புகழ்பெற்ற ஈழத்து நாடகப்பேராசிரியர் சி.மௌனகுருவின் மனைவி. இவர்களுக்கு சித்தாந்தன் என்னும் மகன் இருக்கிறார்.

சித்ரலேகா இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர்.இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி இலக்கிய நிகழ்வுகளான படையல். கலைக்கோலம் முதலான நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்துள்ளார். 1976 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் 1993 ஆம் ஆண்டிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார்

இதழியல்

சித்ரலேகா சிந்தனை, பிரவாகம், பெண்ணின் குரல், பெண் முதலான இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பங்களிப்பு

சித்ரலேகா அங்கிலத்திலும் தமிழிலும் சித்ரா, சங்கரி, ரோகினி, பர்வதகுமாரி, மும்தாஜ், காஞ்சனா முதலான புனைபெயர்களில் கவிதைகளையும் பெண்ணிய ஆக்கங்களையும் எழுதினார்.

சித்ரலேகா எம்.ஏ.நுஃமானுடன் இணைந்து ஈழந்த்து இலக்கியவரலாற்றை எழுதியிருக்கிறார். இவர் தொகுத்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாத சேதிகள் புகழ்பெற்ற ஒன்று.

நூல்கள்

தொகுப்பாளர்
  • சொல்லாத சேதிகள்
  • சிவரமணி கவிதைகள்
  • உயிர்வெளி(பெண்களின் காதல் கவிதைகள்)
ஆசிரியர்
  • இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்
  • பெண்நிலைச் சிந்தனைகள்
  • இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
  • பாரதியும் பெண்களும்: காலம் கருத்து இலக்கியம்
மொழியாக்கம்
  • இலங்கையில் இனத்துவமும் சமூகமாற்றமும்

உசாத்துணை


✅Finalised Page