வனம் (மின்னிதழ்): Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
m (Madhusaml moved page வனம் to வனம் (மின்னிதழ்) without leaving a redirect) |
Revision as of 19:11, 17 September 2024
வனம் தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜனவரி 2021 முதல் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
வரலாறு
வனம் ஓர் மாத இதழ். ஜனவரி 2021 முதல் மின்னிதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று என்ற ஊரிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
நோக்கம்
”காத்திரமான விஷயங்களின் பக்கம் நகர்ந்து செல்வதும், அதன் தோற்றுவாயிலிருந்து உரையாடல்களை உருவாக்குவதும், கசிந்து செல்லும் நீரூற்றினை உடைத்து பெரும் ஆற்றினை உருவாக்கும் படைப்புக்களை வனம் தாங்க நினைக்கிறது. வனம் என்பது உரையாடல்களின் வெளியாக மாத்திரமன்றி; உடைப்புக்களின் தொனியாகவும் இயங்கும்.” என வனம் இதழின் ஆசிரியர்கள் அதன் நோக்கத்தைப் பற்றி குறிப்பிடுகின்றனர்.
பொறுப்பாசிரியர்கள்
- ஷாதிர் யாசீன்
- சாஜித் அஹமட்
- சப்னாஸ் ஹாசிம்
பதிவு வகைகள்
- கவிதை
- சிறுகதைகள்
- கட்டுரை
- நூல் விமர்சனம்
- நேர்காணல்
- ஆளுமைகள்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Sep-2023, 05:58:28 IST