first review completed

கமலா சடகோபன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 67: Line 67:
*[https://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-books/Human-psychology-was-her-forte/article15616738.ece தி ஹிந்து கட்டுரை]
*[https://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-books/Human-psychology-was-her-forte/article15616738.ece தி ஹிந்து கட்டுரை]


{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]

Revision as of 09:13, 14 April 2022

கமலா சடகோபன்

கமலா சடகோபன் (1935 - நவம்பர் 14, 2012) தமிழ் எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மனைவி.

தனிவாழ்க்கை

கமலா சடகோபன் 1934-ல் பிறந்தார். கமலா சித்ராலயா கோபு என அறியப்பட்ட சடகோபனை மணந்தார். அவருக்கு நான்கு மகன்கள். இவருடைய மகன் டி.ஏ.நரசிம்மன் காலசக்கரம் நரசிம்மா என்ற பெயரில் கதைகள் எழுதுகிறார். இன்னொரு மகன் ஸ்ரீ ராம் நாடக ஆசிரியர், திரைவசனகர்த்தா.

இலக்கியவாழ்க்கை

கமலா சடகோபன், கோபு

கமலா சடகோபன் (சித்ராலயா கோபு)-வை திருமணம் செய்வதற்கு முன்னரே எழுத்தாளராகவும் வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய ஜகன்மோகினி இதழின் துணையாசிரியராகவும் பணியாற்றிவந்தார். தன் 16 வயதில் அவர் எழுதிய கதை விஜயவிகடன் இதழில் வெளிவந்தது.

கலைமகள் இதழில் இவருடைய நாவல்கள் தொடராக வெளிவந்தன. இவருடைய நாவல்ளில் கதவு குறிப்பிடத்தக்கது.

அரசியல்

கமலா சடகோபன் காங்கிரஸ் ஆதரவாளர். 1955 ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.மகாத்மாஜி சேவா சங்கம் என்னும் அமைப்பில் இணைந்து சமூகப்பணி ஆற்றினார்.

கமலா தமிழ்வளர்ச்சிக்கழக விருது
கமலா சடகோபன், சதாபிஷேகம்

இதழியல்

  • ஜகன்மோகினி இதழில் துணையாசிரியராக வீட்டில் இருந்தபடி பணியாற்றினார்.
  • 1978 மங்கையர்மலர் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அவ்விதழ் கல்கி நிர்வாகத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது

மறைவு

நவம்பர் 14, 2012-ல் மறைந்தார்

விருது

  • கதவு நாவல் கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு பரிசு
  • 'படிகள்' என்ற நாவல் 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு

இலக்கிய இடம்

கமலா சடகோபன் தமிழில் கலைமகள் இதழை மையமாகக் கொண்டு உருவான பெண்ணெழுத்தாளர்களில் ஒருவர். குடும்பப்பின்னணியில், மரபான பார்வையில், மெல்லிய உளச்சிக்கல்கள் மற்றும் நாடகீயத்தருணங்கள் வழியாக கூறப்படும் கதைகள். பொதுவாசகர்களுக்காக எழுதப்படுபவை. பெரும்பாலும் பிராமணப்பின்னணி கொண்டவை. அவர்களில் முழுக்கமுழுக்க பொழுதுபோக்குத் தன்மை மட்டுமே கொண்டவை கமலா சடகோபன் எழுதியநாவல்கள்.

நூல்கள்

நாவல்கள்
  • கதவு
  • படிகள்
  • அகல் விளக்குகள்
  • சுவர்
  • கிராமத்துப் பறவை
  • ஊமை உறவுகள்
  • என் இனிய மந்திரகோலே
  • என் உயிர் தோழி
  • கல்யாண கைதி
  • கரை தொடாத அலை
  • குயில் தோட்டம்
  • மாலை சூடும் வேலை
  • மேகலாபரணம்
  • மோகன புன்னகை
  • சொல்லாமலே சங்கீதா
  • உனக்கே உயிரானேன்
  • உறங்காத உள்ளம்
  • வாரிசு
கட்டுரை
  • ஒரு பறவையின் சரணாலயம்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.