under review

கி. இளம்பூரணன்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Corrected typo errors in article)
Line 2: Line 2:
கி. இளம்பூரணன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1977) மலேசியத் தமிழ்  எழுத்தாளர். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கியத்தை முன்னெடுப்பதில் தீவிரப் பங்காற்றியவர்.
கி. இளம்பூரணன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1977) மலேசியத் தமிழ்  எழுத்தாளர். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கியத்தை முன்னெடுப்பதில் தீவிரப் பங்காற்றியவர்.
==பிறப்பு, கல்வி ==
==பிறப்பு, கல்வி ==
கி. இளம்பூரணன் பிப்ரவரி 28, 1977 ல்-கிள்ளானில்  கிராமணி - பாப்பா இணையருக்குப் பிறந்தார். முனீஸ்வரி, மங்கையர்க்கரசி எனும் இரண்டு சகோதரிகளும் ஜெயவர்மன் என்ற தம்பியும் உள்ள குடும்பத்தில் இளம்பூரணன் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.  
கி. இளம்பூரணன் பிப்ரவரி 28, 1977-ல்-கிள்ளானில்  கிராமணி - பாப்பா இணையருக்குப் பிறந்தார். முனீஸ்வரி, மங்கையர்க்கரசி எனும் இரண்டு சகோதரிகளும் ஜெயவர்மன் என்ற தம்பியும் உள்ள குடும்பத்தில் இளம்பூரணன் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.  

இளம்பூரணன் தன் ஆரம்பக் கல்வியை 1984 முதல் 1989 வரை கிள்ளானில் உள்ள எமரால்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றார். 1990 முதல் 1995 வரை கிள்ளானில் உள்ள இராஜா மகாடியில் இடைநிலைக்கல்வியைத் தொடர்ந்தார்.  1996 - 97 ஆகிய ஆண்டுகளில் இன்ஸ்ட்யூட் மக்மூர் இடைநிலைப்பள்ளியில் படிவம் ஆறை முடித்தார்.  

Line 37: Line 37:
======மலாயாப் பல்கலைக்கழக பேரவைக் கதைகள் (பொதுப் பிரிவு)======
======மலாயாப் பல்கலைக்கழக பேரவைக் கதைகள் (பொதுப் பிரிவு)======
*முதல் பரிசு (போர்க்களமாகும் பூங்காக்கள்)(2007)
*முதல் பரிசு (போர்க்களமாகும் பூங்காக்கள்)(2007)
*இயந்திரத் தவம் (4வது பரிசு)(2010)
*இயந்திரத் தவம் (4-வது பரிசு)(2010)
*முதல் பரிசு (அம்மா என்றழைக்கவா)(2013)
*முதல் பரிசு (அம்மா என்றழைக்கவா)(2013)
*மூன்றாவது பரிசு (போர்வை)(2014)
*மூன்றாவது பரிசு (போர்வை)(2014)

Revision as of 12:44, 12 July 2024

Dd.jpg

கி. இளம்பூரணன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1977) மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கியத்தை முன்னெடுப்பதில் தீவிரப் பங்காற்றியவர்.

பிறப்பு, கல்வி

கி. இளம்பூரணன் பிப்ரவரி 28, 1977-ல்-கிள்ளானில் கிராமணி - பாப்பா இணையருக்குப் பிறந்தார். முனீஸ்வரி, மங்கையர்க்கரசி எனும் இரண்டு சகோதரிகளும் ஜெயவர்மன் என்ற தம்பியும் உள்ள குடும்பத்தில் இளம்பூரணன் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.

இளம்பூரணன் தன் ஆரம்பக் கல்வியை 1984 முதல் 1989 வரை கிள்ளானில் உள்ள எமரால்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றார். 1990 முதல் 1995 வரை கிள்ளானில் உள்ள இராஜா மகாடியில் இடைநிலைக்கல்வியைத் தொடர்ந்தார். 1996 - 97 ஆகிய ஆண்டுகளில் இன்ஸ்ட்யூட் மக்மூர் இடைநிலைப்பள்ளியில் படிவம் ஆறை முடித்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த கி. இளம்பூரணன் 1998 முதல் 2001 வரை மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் மற்றும் தமிழ்மொழி துறைகளில் இளங்கலைப் படிப்பை முடித்தார். துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் 2002-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார். 2011 முதல் 2015 வரை உப்சி பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், 2022-ல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

தொழில், திருமணம்

இளம்பூரணன் 2001-ல் ஜெய பக்தி பதிப்பகத்தில் பதிப்பாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற்ற பிறகு இடைநிலைப் பள்ளி தமிழாசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். 2003-ல் கேமரன் மலையில் உள்ள சுல்தான் அமாட் ஷா இடைநிலைப்பள்ளி, 2008-ல் கிள்ளானில் உள்ள ஷா பண்டாராயா இடைநிலைப்பள்ளி, 2009-ல் கேமரன் மலையில் உள்ள ரிங்லெட் இடைநிலைப்பள்ளி, 2013-ல் கிள்ளானில் உள்ள இராஜா மகாடி இடைநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பணியாற்றினார்.

கி. இளம்பூரணன் மே 27, 2007-ல் சவிதாவைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள்.

இலக்கிய வாழ்க்கை

இளம்பூரணன் வாசிப்பின் காரணமாகவும் சமூகத்தின் மீது இருந்த விமர்சனங்களின் காரணமாகவும் எழுத வந்தார், 2006-ல் எழுதப்பட்ட இவரது முதல் சிறுகதை சங்கொலி மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரவை சிறுகதைப் போட்டியின் மாணவர் பிரிவில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கி. இளம்பூரணன் போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் வென்றார். மலேசியத் தமிழ் இதழ்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றன.

ஆசிரியர் தொழில் பங்களிப்பு

கி. இளம்பூரணன் முதன்மையாக இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் பணியைத் தீவிரமாக முன்னெடுத்தார். இடைநிலைப்பள்ளி ஆசிரியராக அவரது பங்களிப்புகள்:

  • கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவின் தமிழ் இலக்கியக் கலைத்திட்ட/ அமைக்கும் பணி - (2018 -2019)
  • தமிழ் இலக்கியக் கலைத்திட்டத்தின் தேசிய முதன்மைப் பயிற்றுனர். -( 2019)
  • தமிழ் இலக்கிய புதிய பாடநூல்களுக்கான வழிகாட்டி கையேடு - (2021)
  • மலேசிய தேர்வு வாரியத்தில் இலக்கியப் பாடத்தின் பணிகள் -( 2005-2022)
  • தமிழ் இலக்கியப் பாட புதிய தேர்வு அணுகுமுறையின் முதன்மைப் பயிற்றுனர் - (2021)
  • கல்வி அமைச்சின் ‘டிடெக் டீவி’ தமிழ் இலக்கியப் பாடத்தின் படைப்பாளர் - (2020-2022)
  • தேசிய அளவிலான செந்தமிழ் விழா வினைக்குழு உறுப்பினர் & நடுவர் - (2018-2022)
  • யாழ் பதிகம் ஏற்பாடு செய்த தேசிய நிலையிலான இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியின் இணை ஆலோசகர் - (2022)

பங்களிப்பு

கி. இளம்பூரணன் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் இவரது பிரதானமான பங்களிப்பு இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதில்தான் உள்ளது. பள்ளி அளவிலும் தேசிய அளவிலும் கி. இளம்பூரணன் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பைச் செய்துள்ளார்.

வெளியிட்ட நூல்கள்

  • இடைநிலைப் பள்ளிக்கான இலக்கண இலக்கிய வழிகாட்டி நூல் (2002)
  • இடைநிலைப் பள்ளிக்கான இலக்கியத் துணைவன் 1 ( 2018)
  • இடைநிலைப் பள்ளிக்கான இலக்கியத் துணைவன் 2 (2020)
  • சிலாங்கூர் மாநில தமிழ்த் திணைக்களத்தின் இலக்கியத் தேர்வு வழிகாட்டி நூல் (2021)

விருதுகள், பரிசுகள்

ஆசிரியர் துறை விருதுகள்
  • கல்வி அமைச்சின் சிறந்த சேவையாளர் விருது - (2011, 2016)
  • பள்ளி அளவிலான சிறந்த புறப்பாட ஆசிரியர் விருது -( 2014, 2021)
இலக்கியப் போட்டிகளுக்கான பரிசுகள்
மலாயாப் பல்கலைக்கழக பேரவைக் கதைகள் (பொதுப் பிரிவு)
  • முதல் பரிசு (போர்க்களமாகும் பூங்காக்கள்)(2007)
  • இயந்திரத் தவம் (4-வது பரிசு)(2010)
  • முதல் பரிசு (அம்மா என்றழைக்கவா)(2013)
  • மூன்றாவது பரிசு (போர்வை)(2014)
  • இரண்டாவது பரிசு (மேரி ஜேன்)(2018)
மலாயாப் பல்கலைக்கழக பேரவைக் கதைகள் (ஆறுதல் பரிசுகள்)
  • இயந்திரத் தவம் (2004)
  • சங்கொலி (2006) – மாணவர் பிரிவு
  • புற்று (2008)
  • அப்பனாவது கடினம் (2012)
  • கலர் டீவியும் கருப்பு வெள்ளையாகிய நானும். (2015)
  • கஞ்சாக்காரனும் கடாரம் கொண்டானும் (2019)
இலக்கியகம் நடத்திய இளையோர் சிறுகதைப் போட்டி
  • கைபேசியும் கலைந்த கனவுகளும் (2013)
  • விளக்கின் இருள் (2014)
  • என் அன்பு டைரியே (2013)
ஆசிரியர்களுக்கான வல்லினம் சிறுகதைப் போட்டி
  • அழகியும் அப்பா சொன்ன கதையும் (2019)

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Feb-2023, 06:13:31 IST