under review

கிருஷ்ணமாச்சாரியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Moved Category Stage markers to bottom)
Line 37: Line 37:


{{ready for review}}
{{ready for review}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:01, 17 April 2022

கிருஷ்ணமாச்சாரியார் (ஆகஸ்ட் 19, 1876 - ஜனவரி 3, 1922) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப் புலவர், ஆசிரியர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணபுரத்திற்கு அருகேயுள்ள பில்லாளியில் ஆகஸ்ட் 19, 1876இல் பிறந்தார். இளமைக் கல்வி கற்றார். கோயம்புத்தூரில் புத்தக வணிகம் செய்துகொண்டிருந்த ஒன்னே கவுடர் கடையில் தங்கி இலக்கண இலக்கியங்களைக் கற்றார். ச. திருச்சிற்றம்பலம் பிள்ளையிடம் சங்க இலக்கியம், தொல்காப்பியம் முதலியவற்றைக் கற்றார்.

தனிவாழ்க்கை

தன் தங்கையின் மகளான சாரநாயகியை மணந்தார். சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மதப் பள்ளியிலும், மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். ராமாயணம் முதலிய நூல்களைக் கற்று சொற்பொழிவு செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

தனிப்பாடல்கள் பல எழுதினார். மாலை, கலம்பகம், தூது முதலிய சிற்றிலக்கிய வகைமைகளைக் கொண்டு பாடல்கள் எழுதினார். பல தமிழ் நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.

விருது

  • மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் ”பாலசரஸ்வதி” பட்டத்தை வழங்கினர்.

மறைவு

கிருஷ்ணமாச்சாரியார் ஜனவரி 3, 1922இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • இரட்டைமணி மாலை
  • கோவைக் கலம்பகம்
  • நன்றி மாலை
  • நவமணி மாலை
  • சீதாலட்சுமி
  • அமிர்தவல்லி
  • மூத்தாள் இளையாளான கதை
  • லண்டன் சாமர்த்தியத் திருடர்கள்
  • முடிசூட்டு வைபவம்
  • திருபாண்டிக் கொடுமுடி மும்மணிக்கோவை
  • வேசையர் விழைவு அறல்
  • மணவாள மாமுனி நூற்றந்தாதி
  • திருநறையூர்நம்பி மேகவிடு தூது
  • அன்னிபெசண்ட் வரலாறு
  • புலவராற்றுப்படை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.



✅Finalised Page